Reply – Re: Parasuramar
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: Parasuramar
— by தாமரை தாமரை
பரசுராமருக்கும் விஷ்வாமித்திரருக்கும் இன்னொரு தொடர்பும் உண்டு.

அம்வசு வம்சத்தினரான குசும்பா என்ற நாட்டை சேர்ந்தவர் புருவன் என்ற மன்னன். அவருக்கு காதி என்ற மகன் இருந்தார். குசும்பா மன்னனுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. அவர்களின் வம்சத்தில் சிலர் ரிஷி முனிவர்களாக இருந்தார்கள். காத்தியும் ஒரு முனிவர் என்பதினால் ஒரு காட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சத்யாவதி என்பது. அவள் நல்ல அழகும் நற்பண்புகளும் பெற்றவளாக இருந்தாள். அதே காட்டில் பிருகு முனிவரும் இருந்தார். அவருக்கு ரீக்கா என்ற மகன் இருந்தார். ரீக்கா என்ற அந்த மகன் சத்யாவதி மீது ஆசைக் கொண்டு அவளை மணக்க விரும்பினார். சாதாரணமாக திருமணம் நடந்தால் பெண் வீட்டினர்தான் மாப்பிள்ளை வீட்டினருக்கு நிறைய சீதனம் தருவார்கள். ஆனால் அதற்கு மாறாக பிருகு முனிவரின் மகனான ரீக்காவோ ஒரு பக்கம் காது கருப்பாக இருந்த ஆயிரம் குதிரைகளை சீதனமாக தந்து சத்யாவதியை மணந்து கொண்டார். திருமணம் நடந்து முடிந்து சில காலம் ஆகியது. சத்யவதி கர்பமுற்றாள். அதைக் கண்ட சத்யாவதியின் தாயாருக்கு தானும் கர்பவதி ஆகி ஒரு குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவளும் கர்ப்பம் அடைந்தாள். தனது ஆசையை சத்யாவதிக்கும் கூறி இருந்தாள்.
சத்யாவதிக்கு திருமணம் ஆகி சில காலம் பொறுத்து அங்கு வந்த பிருகு முனிவரிடம் தனது தாயாரின் ஆசையும் கூறி இருவருக்கும் நல்ல குழந்தைப் பிறக்க அவருடைய அருள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் . அதைக் கேட்டு மகிழ்ந்த மாமனாரும் இரண்டு பாத்திரங்களில் சிறிது பாயசத்தை ஊற்றி அதை அவளிடம் தந்து விட்டுக் கூறினார் 'இதில் 1 என எழுதி உள்ள பாத்திரம் உனக்கு. 2 என எழுதி உள்ள பாத்திரம் உன் தாயாருக்கு. உங்கள் இருவருக்கும் நல்லபடியாக நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அதற்கேற்ற மந்திரத்தை ஓதி வைத்து உள்ளேன். இதை நாளை குளித்து விட்டு நீயும் உன் தாயாரும் சாப்பிட வேண்டும். ஆனால் ஒன்றை கவனமாகக் கேட்டுக் கொள். பாத்திரத்தை மாற்றி விடாதே. அதில் கவனமாக இரு'.
சத்யாவதியும் தன்  தாயாரிடம் சென்று அதைக் கூறினாள் . மறு நாள் காலை சத்யாவதி எழுந்திருக்கும் முன்பே அவளுடைய தாயார் எழுந்து விட்டாள். பாயசத்தைக் குடிக்க பாத்திரத்தை எடுத்தவளின் மனதில் சிறு சலனம். பிருகு முனிவர் தனது மருமகளுக்கு தனக்கு பிறக்க உள்ள குழந்தையை விட அதிக அழகான, அறிவுள்ள பிள்ளை பிறக்க வைக்க மந்திரம் ஓதி இருப்பாரோ என நினைத்தாள் . ஆகவே சற்றும் யோசனை செய்யாமல் தனது மகளுக்கு வைத்து இருந்த பாத்திரத்தில் இருந்த பாயசத்தை எடுத்துக் குடித்து விட்டாள். அதன்பின் குளித்துவிட்டு வந்த சத்யாவாதி தன்னுடைய தாயார் தனக்கு வைத்திருந்த பாத்திரத்தில் இருந்த பாயசத்தைக் குடித்து விட்டாளே   எனப் பதறியவாறு அவளிடம் அது பற்றிக் கேட்டதற்கு தான் தவறுதலாக அதை மாற்றிக் குடித்து விட்டேன் என அவளுடைய தாயார் கூறி விட்டாள்.  ஆகவே வேறு வழி இன்றி இன்னொரு பாத்திரத்தில் இருந்த பாயசத்தை சத்யாவதி குடித்தாள். மறுநாள் அங்கு வந்த பிருகு முனிவரிடம் சத்யாவதி  நடந்ததைக் கூறி அழுதாள். அவரும் அதைக் கேட்டு வருந்தினார். நடக்கக் கூடாதது நடந்து விட்டது. ஆனால் என்ன செய்ய முடியும், சரி நடப்பது நடக்கட்டும் என கூறி விட்டு சத்யாவதிக்கு பிறக்க இருந்த குழந்தையின் குணங்கள் அவளது பேரனுக்கு போகட்டும் என்று ஆசிர்வதித்து விட்டு சென்று விட்டார். சில நாட்களில் மகளும் தாயாரும் இரண்டு குழந்தைகளை பெற்று எடுத்தார்கள். சத்யாவதிக்கு  ஜமதக்னி முனிவரும் அவளுடைய தாயாருக்கு விஸ்வாமித்திரரும் பிறந்தார்கள். அதனால்தான் சாத்வீக குணம் கொண்ட சத்யாவதிக்கு அவளுடைய சாந்த குணத்தைக் கொண்ட ஜமதக்னி பிறந்தார். ஜமதக்னி முனிவர் வளர்ந்து பெரியவர் ஆனார். காலாகாலத்தில் அவருக்கும் ரேணுகா தேவிக்கும் திருமணம் நடந்தது. ரேணுகா தேவி ஒரு முனிவரின் பெண்ணாக காட்சி தந்தார். அவர்களுக்கு சில குழந்தைகள் பிறந்தன. அதில் பரசுராமரும் ஒருவர். பிறந்த குழந்தைகளில் முதல்வர் பரசுராமர்.

பேரனுக்குப் போகவேண்டிய ஷத்ரிய குணம் பரசுராமனுக்கு வந்தது. விசுவாமித்திரர் பிரம்மரிஷி ஆனார்.