Reply – Re: அபிமன்யு
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: அபிமன்யு
— by தாமரை தாமரை
உண்மை என்னவென்றால் அபிமன்யூவிற்கு தன் தந்தையை விட அதிகப்புகழ் பெறவேண்டும் என ஆசை. பீஷ்மரிடம் போரிடும் போதும் சரி இன்னும் பல சமயங்களிலும் அபிமன்யூ உச்சகட்டமாகப் போரிடும் போதும் அர்ஜூனன் எப்போது பார்த்தாலும் உள்ளே மூக்கை நுழைப்பார்.

வெறுத்துப் போன அபிமன்யூ அப்பா இல்லாத சமயத்தில் வீரத்தைக் காட்ட இந்த சமயத்தை உபயோகிக்கிறார், தர்மரின் சமாதானத்திற்காக பீமன் மற்றும் பாண்டவர்கள் பின்னால் வரட்டும் என்கிறான். ஆனால் யாரைப் பற்றியும் அவன் கவலைப் படவில்லை. அன்று அவன் துரியோதனின் மகனை படுத்தியபாடு துரியோதனனை அவன் மேல் வெறிகொள்ளச் செய்தது. அவன் அவனை குற்றியிரும் குலை உயிருமாய் சிறைபிடித்து தன் தேரில் கட்டி உதைத்தவாறே போரிட்டதால் அவன் இறக்கிறான்.

தர்மனை சிறைபிடியுங்கள் என துரோணருக்குச் சொன்ன துரியோதனனுக்கு, அபிமன்யுவைக் கொல்வது வெறியாகிவிட்டது. காரணம் துரியோதனின் மகனை அவன் கொன்ற விதம்.

துரோணரின் திட்டம் சக்ரவியூகத்தைச் சுற்றிதான் எல்லோரும் போரிடவேண்டும் என்பதால் வீரர்கள் பிரிக்கப்படுவார்கள், எங்கிருந்து எந்த மஹாரதி புறப்பட்டு வெளியே வருவார் என்று தெரியாததால் மஹாரதிகள் ஒன்று போரிட வேண்டும் அல்லது தர்மனைப் பாதுகாக்க வேண்டும். மஹாரதிகள் போரிடாவிட்டால் படை அழிந்து பெரும் நாசம் விளையும்.

ஒவ்வொரு மஹாரதியாக சக்ரவியூகம் அணுகும். தானே திறந்து அவனை உள்ளிழுத்துக் கொள்ளும். இப்படி விரிந்து பின் மூடிக் கொள்வதாலேயே அதை உடைப்பது இயலாத காரியம்., சக்ரவியூகத்தில் சிக்கும் மஹாரதி மீண்டு தர்மனுக்கு உதவப் போகமுடியாது,அனைவரையும் போரில் சிக்கவைத்து விட்டு தர்மனைப் பிடிக்கலாம் என்பதே துரோணரின் திட்டம். கண்ணன் மற்றும் அர்ஜூனன் இருவரைத் தவிர இதன் செயல்பாட்டை உள்ளிருந்து தடுக்கத் தெரிந்தவர் இல்லை என்பதாலேயே அவர்களைப் பிரித்தார், .. சக்ரத்தை உடைத்து விடுவதால் யார் யாருடன் போரிடுவது என்பதை தர்மரின் படை நிர்ணயிக்கலாம். துரோணரையோ, கர்ணனையோ தர்மர் பக்கம் வராமல் தடுக்கலாம். இல்லையென்றால் தடுக்க முடியாது, இதுதான் தர்மசங்கடம் அபிமன்யூ சக்கரவியூகத்தில் நுழைந்த உடன் மூடிக் கொள்கிறது, இது துரோணரின் திட்டப்படியா அல்லது அபிமன்யூவின் திறத்தினாலா என்பது சர்ச்சைக்குரியது. காரணம் அபிமன்யூவை அவனுடைய சாரதி உள்ளே நுழைந்தவுடன் எச்சரிக்கிறான். இது எதோ சதி போலத் தெரிகிறது என்று. ஆனால் பிரச்சனை என்னவென்றால் சக்ரவியூகத்தில் இருந்து தாக்க வெளிவரும் மஹாரதிகள் யாராலும் அபிமன்யூவைத் தாண்டிப் போக முடியவில்லை.

அவன் சக்ரவியூகத்தின் மத்திக்குச் சென்றுவிட்டதால் எத்திசையிலும் தாக்குதல் நடத்தலாம். ஆனால் அவன் எல்லாதிசைகளிலும் சூழப்பட்டிருப்பான்,

வெளி நோக்கி செல்ல வேண்டிய வீரர்களை உள் நோக்கித் திருப்புவதைத் தவிர துரோணருக்கு அப்போது வேறு வழி இல்லை, ஏனென்றால் அப்போது அப்படி அவர் செய்யாமல் இருந்திருந்தால் துரியோதனன் பிடிபட்டிருப்பான்,

அபிமன்யூவின் ஆர்வக் கோளாறும் வெறியுமே அவன் அழியக் காரணமாகிப் போனது.
சக்ரவியூகம் தோற்றதா?

இல்லை.. சக்ரவியூகத்தின்படி பாண்டவர்களின் சேனையால் முதல் அடுக்கில் இருந்த ஜெயத்ரதனைத் தாண்ட முடியவில்லை.

அபிமன்யூ ஜெயித்தானா?

ஆமாம், ஜெயத்ரதனைத் தவிர எந்த மஹாரதியாலும் பாண்டவர் பக்கம் போக முடியவில்லை, சக்கரம் சுழலாமல் சிக்கிக் கொண்டது. வெளிவர முனைந்த அனைத்து மஹாரதிகள் யாராலும் அபிமன்யுவைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.


நாமும் அப்படித்தான் சக்ரவியூகம் கண்டு பயப்படுகிறோம், யாராச்சும் ஆர்வக்கோளாறில் உள்ளே நுழைந்தால் சுத்தி நின்னு எல்லோரும் வேடிக்கை பார்க்க முடியுமே தவிர உதவ முடியாது. இப்படிச் சக்கரவியூகத்தில் உள்ளே மாட்டிய பிறகு எதிராளியின் உணர்ச்சிகளுக்கு வெறியேற்றினால் அவர்கள் இப்படித்தான் தர்மம் நீதி நேர்மை எல்லாத்தையும் உடைச்சு வெறியாட்டம் போடுகிறார்கள்.

அபிமன்யு வதம் போரின் போக்கை மாற்றிய ஒரு நிகழ்வு.. அதுவரை பாண்டவர்களின் கை சற்றுத்தாழ்ந்தே இருந்தது. அவனின் மரணமே பாண்டவர்களிடம் இருந்த தயக்கமான போராட்ட பாணியை மாற்றியது.

கண்ணன் அபிமன்யுவைக் காக்கவில்லை ஏன்?

அப்படிக் கண்ணன் காப்பாற்றி இருந்தால் என்ன நடந்திருக்கும்?

18 ஆம் நாள் இரவு அஸ்வத்தாமனின் திருட்டுத்தனமான தாக்குதலில் இறந்திருப்பான். பெயரே பலருக்குத் தெரியாத வண்ணம் இறந்த இளம்பஞ்ச பாண்டவர்கள் போல அபிமன்யூவும் பெயரில்லாமல் மறைந்திருப்பான்.

ஒரு வீரனுக்கு அவனுக்குரிய புகழைத் தர என்பது முக்கியக் காரணம்.
எதிர்கால இளங்காளைகளுக்கு ஒரு அனுபவப் பாடம் தர,
பாண்டவர்களின் இதயத்தில் மிச்சமிருந்த தயக்கங்களை அகற்ற என்பது துணைக்காரணங்கள்.

அபிமன்யூவிற்கு வீரமரணம் தந்து அவன் புகழை உயர்த்தியதின் மூலம் கண்ணன் அவனுக்கும் நன்மையே தந்திருக்கிறார்.