Reply – Re: Illegal relationship in Mahabaratha
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: Illegal relationship in Mahabaratha
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நண்பரே

அந்தக் காலத்தில் மன்னர்கள் பலரை மணப்பது என்பது இயல்புதான். தன் நாட்டின் பாதுகாப்புக்காக மன்னர்கள் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது. மன்னனே role model என்பதால் சில அமைச்சர்களும், சில உயர் குடிமக்களும் கூட அப்படி இருந்திருக்கலாம். ஆனால், சாதாரண மனிதர்களுக்கு அது விலக்கப்பட்டதாகவே இருந்திருக்க வேண்டும்.

காமத்தை வெல்லவே முனிவர்கள் அனைத்தையும் துறக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களையே காமம் வீழ்த்திவிடும் என்பதைக் காட்டுவதற்காகக் கூட இதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன்.

மேலும், மகாபாரதத்தில் வரும் பெரும் துறவிகளின் இத்தகு செயல்கள், அந்தக் காவியத்திலேயே விமர்சனத்திற்கும், நிந்தனைக்கும் உள்ளாகியிருக்கின்றன என்பதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அறம் மிக நுட்பமானது என்று எண்ணற்ற இடங்களில் மஹாபாரதம் திரும்பத் திரும்பப் போதிக்கிறது. இக்கதைகளின் மூலம் நமக்கு ஏதோ அறத்தைப் போதிக்க நினைத்திருக்கிறார் வியாசர். ஆனால் அது மிக நுட்பமானதாக இருப்பதால், அதை நம்மால் அறியமுடியவில்லை என்று நாம் இவ்விஷயங்களில் சமாதானம் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அப்படிச் சமாதானமடைந்தால் மட்டுமே மஹாபாரதம் சொல்லும் நீதிகளை நம்மால் ஏற்க முடியும்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த மகாபாரதத்தின் ஆசிரியரான வியாசர் இதை மறைக்க நினைத்திருந்தால் எளிதாக மறைத்திருக்கலாமே! ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லையே. தனது நாயகர்களின் பிறப்பைக் கேள்விக்குறியாக்க எந்தக் கதாசிரியன் துணிவான்.

"தம்பி அப்படிப் போனால் விழுந்துவிடுவாய்" என்று ஒரு குடிகாரன் சொன்னான் என்பதற்காக, ஏற்கனவே சென்று விழுந்தவனின் அனுபவத்தை ஏற்றுக் கொள்ளாமல், குடிகாரன் பேச்சுதானே என்று அதை முற்றிலும் உதாசீனப்படுத்த முடியாதல்லவா? அப்படியும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

வாழ்ந்து கெட்டவர்களின் முதுமொழிகள், நமக்கு வாழ்ந்து பார்க்காத அனுபவத்தைக் கொடுக்கின்றன என்றால், அது மிகையல்ல. அனுபவமே ஞானம், ஞானமே செல்வமல்லவா?

விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட எதுவும் கிடையாது என்பதும் உண்மைதான். ஆனால், அது {கதையில்} மேற்கொண்டு நம்மை நகரவிடாமல் தடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வளவும் சொன்னேன்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்