Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by R.Santhanakrihnan R.Santhanakrihnan
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

வேதவிதிகளின் படி அக்கிரமக்காரர்கள் ஆறு வகையினர்: 1. விஷம் கொடுப்பவர் 2. வீட்டீற்கு நெருப்பு வைப்பவர் 3. பயங்கர ஆயுதங்களால் தாக்குபவர் 4. செல்வத்தை கொள்ளையடிப்பவர் 5. பிறர் நிலத்தை ஆக்கிரமிப்பவர் 6. பிறர் மனைவியை கடத்திச் செல்பவர் இந்த அக்கிரமக்காரர்களை உடனே கொல்லலாம். அதனால் பாவம் ஏதுமில்லை. இவ்வாரான அக்கிரமக்காரர்களை கொல்வது எல்லா சாதாரன மனிதர்களுக்கும் பொருந்தும். அர்சுனன் சாதாரன மனிதன் அல்ல. இந்தவகையில் எதிர்தரப்பினர் அனைவருமே அக்கிரமக்காரர்களாகவும், அதர்க்கு துணை போணவர்களாகவும், அக்கிரம செயலை கண்டும் காணாதவர்களாகவும் இருந்ததால் அவர்களை எந்தவகையில் கொன்றாலும் நியாயமே. இருப்பினும் திரு மெய்யப்பன் அவர்கள் கிருஷ்ணர் பகவான் என்பதையும், அர்சுனன் பக்தன் என்பதையும் மறந்துவிடுகிறார். ஆன்மீக விஷயங்களை ஆன்மீக கண்ணோட்டமில்லாமல் பெளதீக கண்ணோட்டத்தில் அணுகுவது அறியாமைக்கு அழைத்து சென்றுவிடும் என்பதில் நாம் கவணமுடன் இருக்க வேண்டும். ஜீவன்கள் அறியாமை என்ற இருளிலிருந்து விடுபட பகவத்கீதை என்னும் ஞான ஒளியை வழங்கி நம் போன்றவர்களுக்கு ஆன்மிக பார்வையை பகவான் மகாபாரதத்தின் மூலம் வழங்கியுள்ளார். தூய்மை யடைவதில் கங்கைக்கும் பகவத்கீதைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ஏனெனில் கங்கை பகவானின் பாதத்திலிருந்து வருகிறது. பகவத் கீதை பகவானின் திருவாயிலிருந்து வருகிறது. இதை ஒருவன் முறையான குரு சீடப்பரம்பரையிலிருந்து கற்றானானால் அவன் தூய்மையடைகிறான். தூய்மை அடைந்த அம் மாணவன் தொடர்ந்து இதிகாசம், புரானம், வேதம் என கற்கும் போது அதை உள்ளது உள்ளபடி ஏற்க முடியும். அப்படியில்லை எனில் சகோதரி ரேனுகாவைப்போல கண்ணன் கடவுளானால் அவர் செய்யும் தவருகள் எல்லாம் தர்மம் ஆகாது என பத்தாம் பசலி தனமாக கூர வேண்டியதுதான். பகவான் என்றால் எல்லையற்றவர் அவரை தர்மம் சட்டம் என்பதற்குள்ளாக வெல்லாம் சுருக்கிபார்பது அவரை பகவானிலிருந்து வேருபடுத்திகாட்டுகிறது. கிருஷ்ணர் பகவான் என்பதை ஏற்று தன்னை ஒரு சரணடைந்த சீடனாக பகவத் கீதையில் அர்ஜணன் அரிவிக்கிரான் கிருஷ்ணர் பகவான் என்பதை அர்சுனன் கண்மூடிதனமாக ஒன்றும் ஏற்கவில்லை நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற அதிகாரம் பெற்ற நபர்களாலும் அவர் பகவான் என்பது ஏற்றுக்கொள்ளப் பட்டிறுப்பதை (பகவத் கீதை 10:12-13) அர்சுனன் மேற்கோள் காட்டுகிறான். எனவே மகாபாரதம் போன்ற வேத இலக்கியங்கள் பக்தி உணர்வுடன் அணுகப்படவேண்டுமே அன்றி தான்தோன்றிதனமாக மன எழுச்சிகளின் பேரில் எற்படும் கற்பனை கேள்விகளுடன் அல்ல. கிருஷ்ணரை பகவான் என ஏற்பதில் ஆரம்ப நிலையில் அர்ஜனனுக்கு ஏற்பட்டதை போலவே பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். கிருஷ்ணர் 5,000 வருடங்களுக்கு முன்பு தோன்றியவர் யுதிஷ்டரை விட இளையவர் அவர் எப்படி பகவானாக இருக்கு முடியும் என்று. அப்படி ஒரு சந்தேகமிருந்தால் பகவத் கீதையோ, பாகவதமோ, மஹாபாரதமோ ஏற்பது அனைவருக்கும் சிறமமே. ஆனால் அந்த ஐயப்பாட்டை அர்ஜனனின் வழியில் நாம் தீர்த்துகொள்ள முயலவேண்டும். பகவத்கீதையில் பகவானே தன்னை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாக நிலைநாட்டுகின்றார். பிரம்மசம்ஹிதையிலும், எல்லாப்புராணங்களிலும், குறிப்பாக ஸ்ரீமத் பாகவதத்திலும் (க்ருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்) அவர் இவ்விதமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். எனவே, முழுமுதற் கடவுள் தானாகவே விளக்கியுள்ளபடி நாம் பகவத் கீதையை அதன் உண்மையுருவில் ஏற்றுக்கொள்ள வேண்டும். கீதையின் நான்காம் அத்தியாயத்தில் (4:1-3) பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:
பகவத் கீதை எனும் இந்த யோக முறை முதலில் சூரியதேவனுக்குச் சொல்லப்பட்டதாகவும், சூரியதேவன் அதை மனுவுக்கும், மனு இக்ஷ்வாகுவுக்கும் (ராமச்சந்திர பகவானின் குலத்தந்தை) விளக்கியதாக அர்ஜனனிடம் பகவான் கூறுகிறார். எனவே கிருஷ்ணர் ஒரு காலத்திற்கு உட்பட்டவரல்ல என்பதையும் நாம் அறிய வேண்டும். (இன்னும் அதாரப்பூர்வமான செய்திகளுடனும், யுகக்கணக்கு, காலக்கணக்குடன் பகவத் கீதையின் இந்த ஸ்லோகத்தை அணுக இஸ்கானின் பகவத் கீதை உண்மையுருவில் நூலை படிக்கவும்) குருக்ஷேத்திரத்தில் போர்புரிவதில் அர்ஜனனுக்கு கஷ்டமிருந்ததைபோல ஒவ்வொரு மனிதனும் பலவிதங்களில் கஷ்டப்படுகிறான். அர்ஜனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைந்தான், அதன் பயனாக கீதை உபதேசிக்கப்பட்டது. அர்ஜனன் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் பெளதீகவாழ்வில் கவலைகளில் மூழ்கியுள்ளோம். நமது வாழ்கை நிலையற்ற சூழ்நிலையில் அமைந்துள்ளது. எனவே நாம் ஒவ்வொருவரும் வீன் விதன்டாவாதங்களை தவிர்த்து பகவத் கீதை(4.34)ல் பரிந்துறைக்கப்பட்டுள்ளதை போல ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய்வோம். அடக்கத்துடன் அவரிடம் கேள்விகள் கேட்டு அவருக்கு தொண்டு செய்து, உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற அந்த ஆத்மாக்களால் நமக்கு ஞானத்தை அளிக்க முடியும்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே