Reply – Re: arjunanin sakthi enna
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: arjunanin sakthi enna
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நண்பரே (@Varadharaju)

அர்ஜுனன்
துரோணரிடம் இருந்து பிரம்மாஸ்திரம் பெற்றான் {துரோணர் தன் மகனுக்குக் கூட {முழுமையாக} கற்றுக் கொடுக்கவில்லை}.
அக்னி தேவனிடம் இருந்து காண்டீபம் பெற்றான்
சிவனிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற்றான்.
இந்திரனிடம் இருந்து அவனது ஆயுதங்கள் அனைத்தையும் பெற்றான்.
லோகபாலகர்களிடம் இருந்து பல திவ்ய ஆயுதங்கள் பெற்றான்.
யமனின் கதாயுதம், வருணனின் நாகபாசம், குபேரனின் அந்தார்த்தனம் ஆகியவற்றையும் பெற்றான்.

பாண்டவர்களின் வனவாசத்தில் ஒவ்வொருவரும் பல சக்திகளை அடைந்தனர்.

நாகாஸ்திரத்தில் இருந்து தப்பியதைத் தவிர, கிருஷ்ணன் இல்லாமலும் அர்ஜுனன் வென்றிருக்கலாம் என்றே நினைக்கிறேன். தேரை கிருஷ்ணன் அழுத்தவில்லையென்றால் நிச்சயம் அர்ஜுனன் மாண்டிருப்பான் அல்லவா? கர்ணனிடம் அவன் பெற்ற முதல் தோல்வியாகவும் அது இருந்திருக்கும். கர்ணனின் இலட்சியமே அர்ஜுனனை வெல்ல வேண்டும், அர்ஜுனனைவிட சிறந்த வீரனாக இருக்க வேண்டும் என்பதுதான். அது நிறைவேறியிருக்கும். கிருஷ்ணன் அது உனக்குத் தகாது எனத் தடுத்துவிட்டான்.

கடவுளே {கிருஷ்ணனே} அவர்கள் பக்கம் இல்லையென்றாலும், தர்மத்தின் பக்கம் அவர்கள் நின்றதால், அவர்களே {பாண்டவர்களே} வென்றிருக்கக்கூடும் {கிருஷ்ணன் இல்லாவிட்டாலும்} என்றுதான் நான் நினைக்கிறேன். பலர் வேறுபடலாம்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்