Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
அத்திருடர்களிடம் கர்ணனிடம் இருமுறை வென்ற அர்ஜுனனையே வீழ்த்தினரென்றால், அவர்களிடம் கர்ணன் வீழமாட்டான் என்றா நினைக்கிறீர்கள்?

//கீழ்க்கண்டவை ஆதிபர்வம் பகுதி 192-ல் உள்ளது...

விகர்தனனின் {சூரியனின்} மகன் கர்ணன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட சிறப்புமிக்க அர்ஜுனன், வில்லை எடுத்து, தனது கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான். வேகமதிகமுள்ள அந்தக் கூரிய கணைகளின் கடும் சக்தியால் ராதேயன் {கர்ணன்} மயக்கமடைந்தான். பிறகு சுயநினைவு திரும்பிய கர்ணன், இன்னும் அதிக பாதுகாப்புடன் அர்ஜுனனைத் தாக்கினான். பிறகு, வெற்றிகரமான வீரர்களில் முதன்மையான கர்ணனும் அர்ஜுனனும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள நினைத்து, வெறித்தனமாகச் சண்டையிட்டார்கள். அவர்கள் இருவரின் கை லாவகத்தால் இருவரும் தாங்கள் விடுத்த கணைகளாலேயே மறைந்து போனார்கள் {விரைவாக கணைகளை அடித்துக் கொண்டிருந்ததால் பார்வையாளர்கள் கண்களுக்கு மறைந்து போனார்கள்}. "எனது கரங்களின் பலத்தைப் பார்", "உனது அருஞ்செயலுக்கு எதிரான எனது எதிர்வினையைக் குறித்துக் கொள்." வீரர்களுக்கு மட்டும் தெரிந்த அவர்கள் பரிமாறிக் கொண்ட வார்த்தைகள் இவைதான். அர்ஜுனனின் ஆயுத வலிமையும், சக்தியும் உலகத்தில் நிகற்று இருப்பதை சூரியனின் மகனான கர்ணன் உணர்ந்து, மிகவும் சுறுசுறுப்பாகப் போரிட்டான். தன்மீது அர்ஜுனனால் வேகமாக ஏவப்பட்டக் கணைகளைத் தடுத்து, உரக்க கத்தினான். அவனது இந்த அருஞ்செயலைக் கண்ட பல வீரர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். பிறகு கர்ணன் தனது எதிர்ப்பாளனிடம், "ஓ அந்தணர்களில் முதன்மையானவனே, போரில் ஓய்வறியாத உனது கரங்களின் சக்தியை மெச்சுகிறேன். நீ கொண்டிருக்கும் ஆயுதங்களே உன்னை வெற்றியடைய வைக்கும். நீ உருவம் கொண்டு வந்த ஆயுத அறிவியலா? அல்லது அந்தணர்களில் சிறந்த ராமனா {பரசுராமனா}? அல்லது இந்திரனா? அல்லது இந்திரனின் தம்பியான அச்சுதன் என்றும் அழைக்கப்படும் விஷ்ணுவா? அந்தணனாக மாற்றுருவம் கொண்டு உனது ஆயுத சக்தி அனைத்தையும் தொகுத்து என்னிடம் போர் புரியும் நீ யார்? நான் போர்க்களத்தில் கோபமாக இருக்கும்போது, சச்சியின் கணவனையோ {இந்திரனையோ}, பாண்டுவின் மகன் கிரீடியையோ {அர்ஜுனனையோ} தவிர என்னுடன் போர் செய்யத் தகுதி வாய்ந்தவர்கள் யாரும் கிடையாது." என்றான்.

இதைக்கேட்ட பல்குணன் {அர்ஜுனன்}, "ஓ கர்ணா, நான் ஆயுத அறிவியலும் இல்லை, ஆதீத மனித சக்தி கொண்ட ராமனும் {பரசுராமனும்} இல்லை. நான், ஆயுதம் தாங்கிய வீரர்களில் முதன்மையான சாதாரண அந்தணன் மட்டுமே. எனது குருவின் அருளால், நான் பிரம்ம மற்றும் பௌரந்தர ஆயுதங்களைப் பெற்றிருக்கிறேன். உன்னைப் போரில் வெல்லவே நான் இங்கு இருக்கிறேன். அகையால், வீரனே சற்று பொறு!" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "(அர்ஜுனனால்)இப்படிச்சொல்லப்பட்டதை கேட்ட ராதையால் சுவீகரிக்கப்பட்ட மகன் கர்ணன், பிரம்ம சக்தி வெல்ல முடியாதது என்று கருதினான். ஆகையால் அந்தபெரும் பலம் வாய்ந்த ரத வீரன் போரிலிருந்து விலகினான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section192.html//

இப்படி எங்கிருந்தும் அர்ஜுனன் விலகியதில்லை சகோதரா. கள்வர்களிடம் மாட்டிக் கொண்டாலும் கூட அவன் எதிரியிடம் நேரே நின்றே தோற்றான் புறமுதுகிடவில்லை அல்லவா?


2014-07-22 12:32 GMT+05:30 மெய்யப்பஅருண் [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஜென் தத்துவம் ஒன்றுள்ளது

வில்வித்தையின் உச்சம் வில்லைதூக்கி எறிவது.

{{பிறகு மற்றவர்களை தூக்கி எறிந்த வில்லை கர்ணன தூக்கி எரிந்தான். அப்படி கர்ணன் தூக்கியெறிந்த வில்லை எடுத்து திரௌபதியை கைப்பிடித்தவன்தான் அர்ஜுனன். }}

பழமொழிகள் எல்லாம் முழுயான உணமைகளாகிவிடுவதில்லை, முழுமையான உணமைகளேல்லாம் பழ்மொஜியாவதுமில்லை.

எப்படியோ வெற்றிபெற்றவர்கள் எழுதியதே வரலாறாகிவிடுகிறது.


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp256p291.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML