Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நண்பரே! (ரேணுகா தேவி)

மஹாபாரதம் முழுமைக்கும் வரும் நீதிகளில் அறம் நுட்பமானது. ஒருவருக்கு சரியாகப் படுவது பலருக்கு தவறாகத் தெரிந்தால், அது அறமாகாது. தனிப்பட்ட செயலை ஒருவன் செய்தாலும் அது பிறருக்குத் தீங்கிழைக்கா வண்ணம் இருக்க வேண்டும் அதுவே அறம் எனப்படுகிறது.

1. பரசுராமர் க்ஷத்திரியர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். அவர்களால் அவர் தனது மொத்த குடும்பத்தையும் இழந்திருந்தார். அதுவும் நேர்மையற்ற முறையில் அவரது குடும்பத்தினை க்ஷத்திரியர்கள் கொன்றார்கள். இதில் மிகவும் சீற்றம் கொண்ட பரசுராமர் க்ஷத்திரியர்களைக் கண்டாலே வெறுத்தார். 21 தலைமுறை க்ஷத்திரியர்களைக் கொன்றார். இதையெல்லாம் மனதில் கொண்டு கர்ணன் செய்த செயலைக் காணுங்கள் நண்பரே. பீஷ்மர் சத்திரியர்தானே அவருக்கு பரசுராமர் குருவாக இருந்தாரே என்று கேட்கலாம். ஆனால் இங்கு பீஷ்மர் அஷ்ட வசுக்களில் ஒருவர், கங்கையின் புதல்வர் என்பது பரசுராமருக்குத் தெரிந்திருக்காதா என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பீஷ்மரைத் தவிர மற்றுமொரு க்ஷத்திரியன் பரசுராமரிடம் தனுர்வித்தை கற்றான் என்றால் அது கர்ணன் தான்.

தன்னிடம் பொய் சொல்லி வித்தை கற்றுக்கொண்ட க்ஷத்திரியனை பரசுராமர் கொன்றே கூட போட்டிருக்கலாம். அவ்வளவு வெறி கொள்ள அவருக்கான நியாயம் இருந்தது. இருப்பினும் அவர் சாபத்தோடு விட்டார். இதுவெல்லாம் கர்ணனே தேடிக்கொண்டது. ஏகலவ்யனிடம் அர்ஜுனன் ஏன் பொறாமை கொண்டான் என்று எளிதாகக் கேட்டுவிடும் நாம். அர்ஜுனனிடம் காரணமே இல்லாமல் கர்ணன் ஏன் பொறாமை கொண்டான் என்று கேட்கத் தயங்குகிறோமே ஏன்?

2. குந்தி திருமணமாகாத சிறு பெண், நடக்கப் போவது அறியாமல் விளையாட்டாக மந்திரத்தைச் சொல்லப்போக குழந்தை பெற்றவள், அக்குழந்தையை ஆற்றில் விட்டாள் என்பது குற்றமா? இன்றைய நவநாகரிக மங்கையரை நினைத்துப் பாருங்கள். ஒன்று கர்பத்திலேயே கலைத்துவிடுகிறார்கள் அல்லது பிறந்தவுடன் கொல்கிறார்கள். குந்தி அப்படிச் செய்ய வில்லை. யாராவது கர்ணனைக் கண்டெடுத்து வளர்க்கட்டும் என்று எண்ணியே பேழையில் வைத்து குழந்தையை நதியில் அனுப்புகிறாள். மஹாபாரதாத்தில் பாவப்பட்ட பாத்திரங்களில் குந்தியும் ஒருத்தி. குந்தியாக இருந்து தியானித்துப் பாருங்கள். அவள் வாழ்வு முழுவதும் அழுதுகொண்டே இருந்தது புரியும்.

3. கர்ணன் வள்ளல்தான் வீரன் தான். அதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

4. சகுனி நல்லவனோ கெட்டவனோ. அவன் எப்போதுமே துரியனுக்கு முதலில் நல்லதையே சொன்னான். அவன் ஏற்காத பட்சத்தில்தான் கெட்டதைச் சொன்னான். எனவே, சகுனியும் நல்லவனே.

தர்மம் செய்வதற்காக அதர்மம் செய்வதும் தர்மமே என்பது மஹாபாரத நீதி. எனவே கிருஷ்ணன் தர்மவானே!

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்


On Tue, Jul 22, 2014 at 1:13 AM, renuka devi [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]> wrote:
karnan nallavane!!! kannan kadavul enpathal avar seiyum thavarukal tharumam akathu,than kuruvin urakam kalaiya kudathu enpatharkaha than valiyai poruthu kollvathu oru maanavanin kadamai,avan poi kuri avar ridam kalaiyai karrathu thavaru enru kuruvathu sari alla antha kalangalil arasu marrum praminarkale kalvi karkum ninai irunthathu ithuve thavaruthan.oru thaai than makanai aarril vittathu thavaru avan thavaranavarkal udan inaiya karanam avale aavaal.oru thaayi than kulanthaiyai aarril viduvathu anithiyaka ungaluku theriya villaiya?melum avanathu thanthaiyana suriyan kuriyum avan inthiranuku kodi valanginan athu avan tharmaththaiyum avan mathibaiyum eduthu kattukirathu.melum avan nakangalai nambi than verri illai enru kurinanan enrukurinirkale athu unmai enral avan atntha ayuthaththai muthal muraiye payan paduthi iruka maattan.nengal pala karanam kurinalum avan veeran enpathi yaralum maarra mudiyathu. oruvelai avan veeran illai enral en inthiran vanthu avan kavasangalai peravendum?kannan tharumavan enral!sakuniyum nallavane avan ungalaal ithai erkka mudiyume enral nanum erpen kannan nallavar enru......


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp256p285.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML