Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by மெய்யப்பஅருண் மெய்யப்பஅருண்
அண்ணா நீங்க கேட்ட கேள்விகளில் சிலவற்றுக்கு ஒப்புதலும், பதிலும் அளித்துள்ளேன் கருதுகின்றேன். மேலும் சிலவற்றுக்கு
(போருக்கு முன்பு நடந்த தரு-அதர்ம செயல்களுக்கு அப்பாற்ப்பட்டு யார் மாக சிறந்த வீரன் என்ற கோணத்தில்)

ஒரு மாணவர் பள்ளி , மற்றும் பலகலைகழக் தேர்வுகளை உச்ச மதிப்பென்களை பெற்று தங்கப்பதக்கம் ஆனால்  பிறகு வந்த (negative marks)உயர் நுழைவுத் தேர்வில் விதிமுறைகளை மீறி(mal practices)  ஜஸ்ட் பாஸாகிறார். ஆனால் இது எப்படியோ வெளியில் தெரிந்து  எப்படி நியாயமாகும் பல விமர்சனங்கள் எழுகின்றன அதற்கு அதரவாக நான் ஏற்கனவே தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளேன் அதனால் இது செல்லுபடியும் ஆகும், இந்த நுழைவுத் தேர்வின் சிறந்த மாணவனும் நானே ஆவேன்  என்றார். இவர் சொன்ன பதில் என் சிற்றறிவுக்கு எட்டியவரை நியாயமாக படவில்லை .

மேலும் ..,

சக்திஆயுதத்தை  இழந்த பின் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்கின்றார் இனிமேல்தான் நான் நிம்மதியாக தூங்குவேன் உன்னுடைய நல்ல நேரம் சிசுபாலன் , ஜராசந்தன், ஏகலைவன் , போன்றோர் வதைக்கப்பட்டு போரில் பங்கு கொள்ள முடியவில்லை , உன்னுடைய நல்ல நேரமாகவே கர்ணன் தன் கவச குனடலங்களை இழந்தான் , இருந்தாலும் அவனுடைய சக்தி ஆயுதம் என்னை பயமுறுத்திக்கொண்டே இருந்தது இப்பொழுது அதுவும் உனக்காக இழக்கச்செய்யபட்டது. ஆனால் இப்பொழுதும் கர்ணன் முழு உணர்வுகளுடன் போரிட்டால் இந்திரானாலும் , தேவர்களாலும் வெல்ல முடியாதவன், எனவே அவனக்கு அவன் தேர் செயல்படமுடியாத தனுசை கீழே வைக்கும் நிலை ஒன்றுள்ளது அதை நான் உனக்கு ஞாபகப்டுத்துவேன் அப்பொழுது அவனை வீழ்த்துவாயாக. இங்கு அனைத்தும்  உணர்ந்த் கிருஷணர் கர்ணனை விட சிறந்த வில்வீரன் என்று கருத்திருந்தால் மற்றும் பிற்காலத்தில் எழும் அர்ஜுனனை பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் தவிர்க்க அர்ஜுனன் நியாயமாகவே போரிட்டு கர்ணனை வெல்ல முடியம் என்று நினைத்திருந்தால் கிருஷணர் ஏன் கொல்வதற்கு அதர்மமான வழியை காட்டிருக்க வேண்டும்.

(சமஸ்கிருத மூல நூலில் இருவகைய கூற்றுகள் உள்ளன அவற்றில் ஒன்று)
அஸ்வசேனன் எனற அந்த நாகம் திரும்பவும் தன்னை ஏவும்மாறும் இந்திரனே வந்தாலும் அவனை காக்கமுடியாது என்று கர்னனனிடம் மன்றாடியது அதற்கு கர்ணன் நூறு அர்ஜுனன்களை கொளவதாக இருந்தாலும் ஒரு கனையை ஒருமுறைக்கு மேல் ஏவமாட்டேன் (என்று தாய்க்கு அளித்த வாக்குறுதி என்ற என்ற யுத்ததர்மத்தை காக்க வேண்டும்   மனதில்கொண்டு) என்று கூறி நிராகரித்தான்.

நிற்க இங்கு..,
 நூறு மகா சக்திவாய்ந்த எதிராளியை வீழ்த்த முடியும் என்றாலும் யுத்தவிதிமுரைகளை மீறி வீழ்த்த மாட்டேன் என்று தன் தர்ம முறையில் செயல்படும் தனுர்வித்தையை முழுமையாக நம்பியவன் எதிராளியை விடச் சிறந்தவான ???

அல்லது தனது தனுர்வித்தை திறமையை நம்பாமல் துவந்த யுத்த விதிமுறைகளை மீறினாலும் பாராவாயில்லை எதிராளியை வீழ்த்த வேண்டும் என்று செயல்பட்டவன் எதிராளியை  சிறந்தவானா ?????


இங்கு அர்ஜுனன் கர்ணனை முன்பு தர்மமான தோல்வியடைய செய்தைதை போன்று இப்பொழுதும் தோல்வியடைய செய்திருந்தால் நானும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் அர்ஜுனன் முதன்மையான  வில்வீரன் என்று . ஆனால் இப்போது எண்ணத்தோன்றுகின்றது எதோ அப்பொழுது  அர்ஜுனனின் அதிர்ஷ்டம் ஜெய்த்துவிட்டான் என்று.


கர்ணன் –கிருபாச்சாரியார்

கர்ணன் கிருபாச்சாரியாரின் பேசிய மொழிகளை கவனிப்பது போல் கர்ணன்  ஏன் அவ்வாறு பேசினான் என்பதையும் கவனிக்கலாமே .
ஒரு சாதாரண வீரன் தன் “உயிர் மேலிருக்கும் ஆசையை” விட்டு மாவீரர்களான பஞ்சபாண்டவர்களை வீழ்த்துவேன் என்று கூறி போர்களத்துக்கு புறப்பட்டாலே அவனை அவன் சார்ந்த சேனையில் உள்ள உயர் பொறுப்புகளில் உள்ள வீரர் அவனை வெகுவாக ஊக்கபடுத்தி அனுப்பவேண்டும் அது அந்த சேனையின் வெற்றிக்கும் வழிவகுக்கும் இது ஒரு சாதாரண நடைமுறை செயலும் கூட. அப்படியிருக்கும் பொழுது  தனக்கு சேனாதிபதியின் பதவி வந்த பின்னும் அது துரோனருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று மறுத்து அடுத்த சேனாதிபதி பதவிக்காக காத்திருப்பவனான கர்ணன் பஞ்சபாண்டவர்கள் தானே வீழ்த்துவேன் என்று கூறி போர்க்களத்துக்கு போகுபோழுது கிருபாச்சாரியார் நீ ஒரு டம்மி பீஸு என்று அளவில்  மட்டம் தட்டி பேசும் பேச்சை கேட்டால்  சாதரான வீரனுக்கே மகா கோவம் வரும் சேனையின் சேனாதிபதிக்கு கோவம் வந்து அவ்வாறு பேசியதில் என்ன ஆச்சரிய அதிசயம் உள்ளது , இன்னும் ஏன் தருமன் கர்ணன் விடையத்தில் அர்ஜுனனை மட்டம் தட்டியபோது அர்ஜுனன் தருமனை கொள்ளவே சென்றானே...

காரணமற்ற பொறாமையா

ஒருவரின் குணநலன்கள் பாதி மரபு வழி மூலமாகவும், பாதி அவர் சார்ந்த சூழ்நிலையும் தீர்மானிக்கின்றது. பொதுவாகவே ஒரு துறையில் இருவர் மிகச்சிரந்தவாராக இருக்கும் பொழுது போட்டியும் பொறாமையும் ஏற்ப்படுவது மிக இயல்பானதே . இங்கு கர்ணனை பிறப்பும் அர்ஜுனனைப்போன்றே உயர் க்ஷத்திரிய பிறப்பாக உள்ளது அதைசார்ந்த பிறப்பு குணமும் இருக்கின்றது ஆனால் அர்ஜுனனை போன்று அவனுக்கு சாதரணமாக திறமைக்கு கிடைக்கும்  அங்கிகாரம் சிறுவயதிலிருந்தே கிடைக்கவில்லை. எனவே அதனால் ஏற்ப்படும் பொறாமையை காரணமற்ற பொறாமை என்று எப்படி சொல்ல முடியும்.

சான்று

குருவானார் மாணவனை தனுர்வித்தையின் திறமையையுன் அவனுடைய மனக்கட்டுப்பாடையும் பொருத்து பிரம்மாஸ்த்திரத்தை ஏவுதல் மற்றும் திரும்ப பெறுதல் ஆகியவற்றின் வித்தையையும், மந்திரத்தையும் அளிப்பார். அந்த தகுதியை பூர்த்தி செய்தால் அர்ஜுனனுக்கு அப்படியே மோழுவது கொடுத்தார். அவ்வாறே அவ்வாறே அஸ்வத்தாவின் திறமையை கண்டு ஏவும் வித்தையையும், மந்திரத்தை மட்டும் கற்று கொடுத்தார்.  
இதை அறிந்த கர்ணன் துரோணரிடம் சென்று நானும் அர்ஜுனனிடம் சமமான யுத்தைதை மேற்கொள்ள விரும்புகின்றேன் எனக்கும் பிரம்மாஸ்த்திர வித்தையை கற்றுக்கொடுங்கள் என்று வேண்டினான் அனால் துரோணர் அதை மறுத்து பிராமணர்களுக்கும், மனதை கட்டுபடுத்தக்கூடிய க்ஷ்த்ரியர்களுக்கும் மட்டுமே அது உரியது என்று கர்ணனை தவறாக கணித்து அனுப்பிவிட்டார்.
இங்கு உண்மையில் கர்ணனை க்ஷ்த்ரியரியன் அல்ல வென்றும் மனக்கட்டுப்பாடு அற்றவன் என்றும் தவாறாக கணித்துள்ளார்(அங்கிகாரத்தை கொடுக்க மறுத்துவிட்டார்) . உண்மையில் அவன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் இருந்திருந்தால் மகாபாரதப்போரில் திவாயஸ்த்திரங்க்களை அர்ஜுனனை தவிர்த்து பல மாவீர்களின் மீது பிரயோகித்திருப்பான் குறு துரோனருக்கே குருவான பரசுராமாரும் கர்ணனுக்கு பிரம்மாஸ்த்திரத்தை ஏவுதல் மற்றும் திரும்ப பெறுதல் அளித்திருக்க மாட்டார்.  இதில் கொடுமை என்னவென்றால் துரோணர் மனக்கட்டுப்பாடு அற்றவன் என்றும் தவாறாக கணித்து உயர்ந்த வித்தையை கற்றுகொடுக்க வில்லை, பரசுராமாரோ கர்ணன் இராட்சத பூச்சி துடையில் இந்த பக்கம் சென்று அந்த பக்கம் வந்த பொழுது மனக்கட்டுபாடோடு சிறிதும் அசையாமல் இருந்தாதால் உயர்ந்த வித்தை மறந்து போகும் என்ற சாபத்தையும், உனக்கு சமமான க்ஷத்திரியன் இந்த உலகத்தில் இருக்கமாட்டான் என்ற வரத்தையும் வாங்கிவாந்தான்.