Reply – Re: அபிமன்யு
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: அபிமன்யு
— by R.MANIKKAVEL R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீமுருகன் துணை

வணக்கம்.
நண்பர் திரு.அருட்செல்வ பேரரசன் வழங்கியப்பதில் அற்புதம். ”மஹாபாரதம் முழுவதும் வரும் ஒரே கருத்து அறம் மிக நுட்பமானது என்பதே”

செயல்களால் மனிதன்  தன்னைத்தானே வாழ்க்கை வலையில் சிக்க வைத்துக்கொள்கின்றான். அந்த சிக்கலை அறுக்க சுயநலத்தை பயன்படுத்தினால் உலகமே அழியவேண்டி நிலைகள் ஏற்படும் என்பதை நாம் காலம் காலமாகப் பார்க்கின்றோம். வரலாற்றில் உண்மைகள் பரவிக்கிடக்கின்றன.

சுயநலம் இல்லாமல் இந்த வாழ்க்கை வலையின் சிக்கலை நீக்குவது எப்படி என்பதற்கு இறைவன் காட்டும் வழிதான் அறம்.

அறத்தின் வழியாகவே எல்லோரும் நடந்தால் வாழ்க்கை வலையின் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் செல்லமுடியும். ஆனால்  அப்படி நடக்கமுடிவதில்லை. காரணம் மனிதன் தனது அறியாமையால் அறம்மீறிகின்றான். அது நம்மை அறியாமலே நடக்கின்றது. அறியாமை என்பதை அறியும்வரை அறியாமைக்கூட அறிவுதான் என்று மனித மனம் நம்புகின்றது. பெற்றவர்களை விட்டுவிட்டு காதலன் என்ற நம்பிக்கையில் ஓடும் பெண்களுக்குள் இருப்பது அறிவென்னும் அறியாமையே. ஒரு உதாரணத்திற்கா சொல்கின்றேன்.  

அர்ஜுனன் தனது மனைவி சுபத்திரைக்கு சக்கரவியூகத்தை எப்படி உடைத்து உள்நுழைவது என்றும் அதிலிருந்து எப்படி வெளிவருவது என்றும் அவள் கருவுற்றபோது விளக்கினான். அன்று சுபத்திரை தூங்காமல் அதை முழுவதும் கேட்டு இருந்தால் அபிமன்யுவிற்கு சக்கரவியூகத்தில் நுழையவும், வெளியேறவும் தெரிந்து இருக்கும். முக்கியமான தருணத்தில் சுபத்திரை தூங்கியது ஒரு அறப்பிழை. காரணம் கணவன் மனைவிக்கு சொல்லித்தரும்போது அவன் குரு இடத்திலும் மனைவி சீடன் இடத்திலும் இருக்கிறார்கள்.

கருவுற்ற மனைவிக்கு போர்க்கலையைப்பற்றி விளக்கியது அர்ஜுனன் செய்த தவறு. கருவுற்றக்காலத்தில் இரத்தம் சிந்தும் சிந்தனையை மனைவியின் இதயத்தில் விளைவிப்பது குற்றம் மாறாக இறைவன் புகழ்பாடும் கதைகள் சொல்லப்படவேண்டும். இது அர்ஜுனன் செய்த அறப்பிழை. தவமாய் தவமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு கலையை எளிதாக மனைவிக்கு காரணமில்லாமல் புகட்டுவது. வெறும் காதல் மயக்கத்தில் விளைந்த அறப்பிழை.

கண்ணணுக்கு தெரியாமல் இரண்டு அறப்பிழைகள் நடந்து உள்ளது. இந்த அறப்பிழைதான் பெரும் அறப்பிழைக்கு வித்தாக அபிமன்யூவை யுத்தகலத்தில் பாதி தெரிந்த வித்தையில் மாட்டிவிட்டது. அவன் அன்று அந்த நெருக்கடியில் மாற்றி யோசிக்க தவறியது அவனின் பாதிக்கற்ற வித்தையால் வந்த விளைவு. அதை கண்ணன் அறிவான் நாம் அறிய மாட்டோம்.

பெரும் யுத்தத்தில் தனது கவனம் தலைவனைக்காப்பதில் இருந்து இருக்கவேண்டும். அர்ஜுனன் மாறாக தனது காண்டிபத்தை பழித்தான் என்பற்காக செயத்ரனை குறிவைத்து ஓடுவது போர்க்குற்றம். சூதாட்டத்தில் அடிமைப்பட்டபோதே அர்ஜுனன் காண்டீபமும் அடிமைப்பட்டது அதன் பெருமையை நிலைநாட்ட இது நேரம் இல்லை. அங்கு ஒரு அறம் தவறக்காரணமாக அர்ஜுனன் உள்ளான்.

நாம் செய்யும் எல்லா செயலும் அறம்போலத்தான் தெரிகின்றது ஆனால் அதன் முடிவில்தான் அது அறமா? அறம் இல்லையா? என்று தெரியவரும். காரணம் எந்த மனிதனும் ”நான்” என்ற ஆணவம் இல்லாமல்  எந்த செயலையும் செய்ய முடிவதில்லை. அந்த ஆணவம் இருக்கும் வரை அதற்கான கூலியை மனிதன் கொடுத்துதான் ஆகவேண்டும்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வதுபோல் நான் கர்த்தா அல்ல நீதான் கர்த்தா. நீ செய்விக்கிறாய் நான் செய்கின்றேன். நான் கருவி நீ கருவியை இயக்குபவள் என்று எண்ணம் வந்தால் அறம் அசையாமல் செய்ய முடியும் அது எளிதான காரியம் இல்லை.

திரு.ஜெயமோகன் எழுதும் வெண்முரசு மூலம் தெரிகின்ற உண்மை என்ன வென்றால். ஒரு செயலும் அந்த செயல் செய்யப்படும் நேரமும் அறம், அல்லது அறமீறல் என்ற நிலையை உருவாக்கிவிடுகின்றது.

நாம் எந்த செயலையும் காலத்தின் கைதியாக இருந்து செய்யாமல் இருந்தால் பெரும் அறமீறல்களில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கின்றேன்.

ஒரு செயலின் முடிவைத்தான் மனிதன் அறிந்துக்கொள்கின்றான் அதன்விதை எங்கோ எப்போதோ யாராலோ தூவப்படுகின்றது என்பதை அறியமுடியவில்லை. கவனமற்று விழும் ஒரு விதை சிக்கலான காலத்தில் முளைக்கும்போது விதியாகி அறமாகி மனிதன் முன்னே வந்து இயங்கமுடியாமல் வளைத்து நிற்கிறது. அப்போது செயல் செய்தே ஆகவேண்டி கட்டாயத்தில் மனிதன் தள்ளப்படுகின்றான். அதன் காரணமாக விளைவு அறம் அல்லது அறமீறல் என்ற நிலையை உருவாக்கி விடுகின்றது.

துரோணர் சக்கரவியூகம் அமைக்கும்போது அறத்தோடு அந்த வியூகத்தை அமைக்கவில்லை. செயத்ரதன் மூலம் ஒரு சதியை உருவாக்கி அறம்மீற தயாராகி சக்கரவியூகம் அமைக்கிறார்கள். அதன் முடிவு. துரோணர் தொடங்கி கர்ணன்வரை பெரும் அழியா பழியை காலம் உள்ளவரை சுமக்கிறார்கள். அது அவர்களுக்கான தண்டனை இத்தனை பெரிய அவமானம் அவர்கள் செத்து செத்து நெஞ்சுவெடித்திருப்பார்கள். கண்ணன் அவர்களுக்கு தந்த தண்டனை அது. அதை அவர்களே அறிய முடியும்.  

பகவான் ஸ்ரீகிருஷ்ணனை அந்த இக்கட்டான நேரத்தில் அழைக்க மறந்த அபிமன்யூவின் அறியாமைதான் எத்தனை கொடியது அதை நாம் நினைக்கவேண்டும்.
ஆண்கள் சிக்கலான தருணங்களில் இறைவன் பாதத்தில் விழமறந்து தங்கள் ஆணவத்தில் விழுகின்றார்கள்.

நன்றி
வாழ்க வளமுடன்.