Reply – Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
தமிழ் வள்ளுவர் அவர்களுக்கு வணக்கம்.

இப்படிப்பட்ட விவாதத்தைத் துவக்கி வைத்தமைக்கு நன்றி.

துரியாதோனன் பாண்டவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவருக்கும் நல்லவன்தான். அவன் உத்தமன் என்பதில் சந்தேகம் இல்லை.

அவன் பகைத்துக் கொண்ட மனிதர்கள்கூட பாண்டவர்கள் நிமித்தமாக பகைத்ததுதான்.

இருப்பினும் அப்பேற்பட்ட நல்லவனுக்குக்கூட பொறாமை என்ற உணர்ச்சி ஏற்பட்டால்,
சமுதாயத்திற்கு எப்பேற்பட்ட தீமையை விளைவிக்கிறான் என்பதை எடுத்துக்காட்டுவதாகவே
இந்நிகழ்ச்சிகள் அமைகின்றன என்று நான் நினைக்கிறேன். எனக்கு மகாபாரதப் பாத்திரங்களிலேயே மிகவும் பிடித்த பாத்திரம் துரியோதனன்தான். தொலைக்காட்சித் தொடரில் அவன் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவே நான் மகாபாரதம் படிக்க ஆரம்பித்தேன். அவனே கலியின் உருவம். ஆகையால் கலியுக மனிதர்களான நமக்கு அவனைப் பிடிக்காமல் போகாது. அவனைக் கயிறு என்று நினைத்து ஆதரிக்கவும் முடியாது. பாம்பு என்று நினைத்து எதிர்க்கவும் முடியாது. அதுதான் கலியின் உருவமான துரியோதனனின் தன்மை.

நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தை நான் படித்தது இல்லை.

வாங்கிப் படிக்க முயல்கிறேன்.

நன்றி!

அன்புடன்
செ.அருட்செல்வப் பேரரசன்