Reply – Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?
— by நரேன் நரேன்
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இது முதலில் தமிழில் இயற்றப்பட்டது அல்ல.. அகவே வள்ளுவம் கூற்றுக்கு எற்பவெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. மேலும் மகாபாரதம் தற்கால சமநிலையை உறக்க சொல்லும் வேதம்.. அதன் மெய்ப்போருளையே நாட வேண்டும். அது ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளே நிறைத்திருக்கும் நல்ல மற்றும் தீய பண்புகள், அதன் வெளிப்பாட்டின் விளைவுகளையே பெரிதும் பேசுகிறது... இந்த உலகம் நன்மை தீமை நிறைந்தது. நன்மையையும் அறமும் செழிக்க வேண்டும், தீமைகள் அழிய வேண்டும். அதற்கான வழிகளை நாமே ஆராய வேண்டும். எனவே தான் ஒவ்வொரு கதாபாத்திரமும் நன்மை தீமை கலந்தே உருவகப்படுத்தப் பட்டுள்ளது...
தருமனும் பொய் உரைக்கிறான். துரியனும் அச்வதாமனிடம் இளம் பஞ்ச பாண்டவர்களின் சிரசை கொண்டுவரும்போது சினம் கொள்கிறான்... ஆனால் கவனிக்கப்பட வேண்டியது யாரிடம் எவ்வளவு நன்மையையும் தீமையும் உள்ளது என்பது மட்டுமே. மேலும் எங்கே அறம் மீறப்படுகிறதோ, அங்கே ஏன் மீறப்படுகிறது, எதற்காக, எப்படி எனவும் ஆராய்தல் அவசியமாகிறது...

வள்ளுவமே உரைக்கிறது "பொய்மையும் வாய்மையிடத்து அங்கே புரந்தீர்ந்த நன்மை பயக்குமெனின்"...

பாரதத்தில் பாண்டவர் பக்கம் சாரும் குறைகளும், அற மீறல்களும் நன்மை பயப்பதர்க்கே... ஆகவே அறம் ஓங்கட்டும்.. நலம் பெருகட்டும்...