Reply – Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?
— by நரேன் நரேன்
கர்ணனின் வீரம் :

௧. ஆரம்பம் முதலே அர்ச்சுனனின் தனுர் வித்தையின் ஆற்றல் கண்டு பொறாமை கொண்டு ஆசாரியர் துரோனரிடம் சென்று வெளிப்படையாகவே அர்ச்சுனனை தோற்கடிக்க தமக்கு மேம்பட்ட பிரம்மாஸ்திரத்தை பயிற்றுவிக்கும்படி கேட்பது...

௨. பிரம்மாஸ்திரம் மறுக்கப்பட்ட காரணமாகவே புதிய குருவை தேடிச்சென்று போய் சொல்லி பயின்று வந்தது...

௩. அழையா விருந்தாளியாய் மன்னவர்களின் மகன்கள் தங்கள் வீர பராக்கிரமத்தை வெளிப்படுத்தும் களத்திற்க்கு வந்து தானும் வில்லெடுத்து சாகசம் புரிந்து தான் முதல் அவமானத்தை சந்திப்பது...

௪. தன் பிறப்பை பற்றிய முழு உண்மை தெரியும் முன்னரே சபையிலும் பொதுவிலும் பாண்டவர் பிறப்பை குறித்து பேசுவது..

௫. சுதன் மகன் என சொல்லி தன்னை மறுத்ததால் சபை நடுவே வந்த பாஞ்சாலியின் துகில் களைய தூண்டியது...

௬. துரியனுக்கு நன்மை செய்கிறேன் என்று சொல்லியே பாண்டவர்கள் மீதிருந்த வன்மத்தை வளர்த்தது...

௭. கனகம் சென்றவர்களை பின்தொடர்ந்து சென்று படாடோபம் கட்ட முயன்று உயிர் நண்பனாம் துரியனையும் மற்றவர்களையும் கந்தர்வர்களிடத்து விட்டு புறம காட்டியது...

௮. மாடுபிடி சண்டையில் மற்றெல்லோரையும் விட்டு முதன் முதலில் புறமிட்டோடியது...

௯. பச்சிளம் பாலகனின் முன்னின்று தோற்று பின்னின்று மாய்த்தது...

௰. ஆறு  நாள் போரிலும் சேர்த்து பீமனிடம் மட்டுமே எட்டு முறை தோற்றது...

௧௧. தன்னிடம் தோற்ற சகதேவனையும் எள்ளி நகை ஆடியது...

௧௨. தான் தலைமை ஏற்றபின்பே அறமும் நலமும் நிலைக்க போர்புரிந்தது...


அர்ச்சுனன் வீரம்:

௧. குருவே துணை, குரு அருளே நிறை என நின்றது...

௨. தலைமைக்கு கீழ்படிந்தது, நண்பன் சொல்லின் வழி நின்றது...

௩. சுயம்வரம் முடிந்த சமரில் பீமானுடன் மட்டும் சேர்ந்து எதிரிகளை புறந்தள்ளியது...

௫. அண்ணன் சொல்லுக்கு கட்டுப்பட்டு கந்தர்வனிடமிருந்தும் எதிரியை மீட்டது...

௬. உலகில் எந்த ஒரு தேவரும், மாநனிடரும் பெறாத பாசுபதத்தையும் மற்றெல்லா தேவ அஸ்திரங்களையும் சீரிய தவத்தின் மூலம் பெற்றிருந்தாலும் அவற்றையெல்லாம் மானுட யுத்தத்தில் பயன்படுத்தாமல் அறவழி நின்றது...

௭. மாடுபிடி சண்டையில் தனி ஒருவனாகவே கௌரவ சேனையை வென்றது...

௮. மற்றெல்லா துணையும் விட கிருஷ்ணனே பெரும் துணை என வேண்டி பெற்றது...

௯. சொந்தத்தை கொன்று நாட்டை வென்றெடுக்க தயங்கியது...
 
௰. பலனை எதிர்பார்க்காது கடமை ஆற்றியது...

௧௧. குலத்தை அழித்த குருவின் மகனை பிழைக்க விட்டது...