Reply – Re: Parasuramar
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: Parasuramar
— by R.MANIKKAVEL R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீமுருகன் துணை

வணக்கம் சகோதரா!
அன்னை கோசலையின் மணிவயிற்றில் தசரத புத்திரனாக தோன்றிய ஸ்ரீராமன், லெட்சுமண, பரத, சத்ருக்கன இளைய தம்பிகள் புடைசூழ வளர்ந்து, ராஜமுனியாகிய ஜனகரின் திருமகளாய் உதித்த அன்னை ஜானகியை வில்லொடித்து மாலைசூடி மணந்தார். ஸ்ரீராமன் சிறியத்தாய் கைகேயியின் வரத்தால் காடு காண சென்று ஜானகியை மாயமான் சூழ்ச்சியால் இராவணன் சிறையெடுக்க தவித்து ஹனுமான் சேவையால் வானரக்கூட்டத்தின் உதவியால் இராவணனை வென்று சீதையை மீட்டு அயோத்தி அடைந்து ராமராஜ்யம் கண்டார்.

ஸ்ரீராமன் புகழ் சரித்திரம் சொல்லும் ஸ்ரீமத்ராமயணம் எழுதிய முதல்கவி என்று வர்ணிக்கப்படும் ஸ்ரீவால்மிகி முனிவரின் சீடர் பரத்வாஜமுனிவர். ஸ்ரீராமன் வைதேகி இளையபெருமான் ஸ்ரீலெட்சுமணனுடன் வானகம் செல்லும்போது கங்கையைத்தாண்டி பரத்வாஜர் ஆசிரம் சென்று பரத்வாஜருக்கு ஸ்ரீராமன் தரிசனம் கொடுத்தார்.

14 ஆண்டுகள் வனவாசம் முடித்து ராவணவதம் செய்து அன்னைஜானகியுடன் ஸ்ரீராமன் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் திரும்பும்போது வானத்தில் சென்றுக்கொண்டு இருந்த ஸ்ரீராமனை பரத்வாஜர் கீழ் இறங்கிவந்து தனது ஆசிரமத்தில் உணவு உண்டு செல்லவேண்டும் என்று சொன்னார். ஸ்ரீராமன் புஷ்பக விமானத்தை கீழ் இறக்கி பத்வாஜர் ஆசிரமத்திற்கு வந்தார் 14 ஆண்டுகள் முடிய சில நாழிகை நேரங்களே இருந்தது.

14 ஆண்டு முடிந்ததும் தாங்கள் வராமல் ஒருநாழிகை நேரம் ஆனாலும் தாங்கள் வரவில்லை என்று நினைத்து தீயில் விழுந்து உயிர் துறப்பேன் என்று பரதன் முன்னமே சொல்லி உள்ளான் எனவே அவன் அக்கினி வளர்த்து தீயில் விழ தயாராக உள்ளான்.

அங்கு அயோத்தியின் நந்திகிராமத்தில் தம்பி உயிர் துறக்க உள்ளான். ஸ்ரீராமன் ஆசிரமத்தில் பரத்வாஜரின் விருந்து உண்ண உள்ளான். எனவே ஸ்ரீராமன் ஹனுமனை வான்மார்க்கமாக பறந்து முன்னே சென்று ஸ்ரீராமன் வருகின்றார் என்று பரதனிடம் சொல்ல சொன்னார். ஹனுமான் பரதன் தீயில் இறங்கும் நேரத்தில் சரியாக சென்று “ராம்..ராம்..ஸ்ரீராம்” என்று கூறி தட்டு ஸ்ரீராமன் கொடுத்த கனையாழியைக் காட்டி பரதனைக்காத்தார். இந்த உயிர்ப்போகும் நிலையிலும் ஸ்ரீராமன் முனிவரின் வார்த்தையை மீறக்கூடாது என்று இருந்ததால் ரகுராமன், ஸ்ரீராமன், ஜானகிராமன், கோசலைரான், தசரதராமன், பட்டாபிராமன்,கோதண்டராமன் என்ற பெயருடன் ஸ்ரீராமனுக்கு சாப்பாட்டு ராமன் என்று ஒரு பெயரும் சேர்ந்துக்கொண்டது. இந்த பெயர் ஸ்ரீராமனுக்கு வர காரணமானவர் பரத்வாஜமுனிவர். உங்கள் கேள்வியால் ஸ்ரீராமன் புகழ்பாடும் சிறு வாய்ப்பு இன்று. ஸ்ரீராமநவமி திருவிழா நடக்கும் இன்னாளில் சொல்வதும் மனநிறைவு.  

உங்கள் கேள்விக்கு வருகின்றேன்.  ராமயணத்தில் வரும் இந்த பரத்வாஜர்தான் துரோணரின் தந்தை. துரோணரின் குரு பரசுராமர்.
பரசுராமர் முன்பதிவில் சொன்ன ஜமதக்கினி முனிவரின் மகன்.
ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. பரசுராமரின் தாய்.
ரேணுகா ஒருநாள் நதிக்கு நீர் எடுக்க சென்றார். நீர் எடுக்க செல்லும்போது அவர்கள் நம்போல் குடம் எடுத்துப்போவதில்லை. நதியின் கரையில் உள்ள மணலை அள்ளி குடத்தை மனதில் நினைத்தால் குடம்வந்துவிடும் அந்த குடத்தில் நீர் எடுத்து வந்து முனிவருக்கு பூஜைசெய்ய கொடுப்பார். ஒருநாள் அவர்கள் ஆற்றுக்கு நீர் எடுக்க சென்று குடத்திற்காக மணலை அள்ளி குடத்திற்காக குவிக்கையில் நதியில் வானத்தில் பரந்து செல்லும் கந்தர்வன் உருவம் தண்ணீரில் தெரிந்தது ஆ..இவ்வளவு அழகா என்று ரேணுகா நினைக்க மனம் மாசுப்பட்டது. மண் குடமாக வில்லை. குடம் இல்லாததால் ரேணுகா தண்ணீர் எடுக்காமல் தனது குடிலுக்கு திரும்பினார். ஜமத்கினி முனிவருக்கு என்ன நடந்தது என்று தெரிந்துவிட்டது. மனம் மாசுப்பட்டுவிட்டாள் உனது தாய் அவளை வெட்டுங்கள் என்று மூத்தப்பிள்ளைகளிடம் சொன்னார் அவர்கள் அன்னையின் பாசத்தால் தந்தையின் சொல்லைக் கேட்கவில்லை. முனிவர் கோபத்தில் தனது பிள்ளைகளை பேய்களாக மாற சாபம் இட்டார்.

காட்டில் விறகு சேர்க்க சென்ற பரசுராமர் திரும்பி வந்ததும். நடந்ததை சொல்லி தாயின் தலையை வெட்டு என்று தந்தை சொல்லவும். பரசுராமர் மறுப்பேச்சி இல்லாமல் தாயின் தலையை வெட்டினார். முனிவர் பரசுராமனின் தந்தை சொல் மீறாத தைரியத்தைப் பார்த்து மனம் மகிழ்ந்து என்ன வரம்வேண்டும் என்றாலும் கேட்கசொன்னார்.

பரசுராமர் தாயிக்கு உயிர்வேண்டும் என்றுக்கேட்டார். சகோதரர்கள் பழையபடி நலமாகவேண்டும் என்று கேட்டார். முனிவர் இருவரமும் தந்தார். வெட்டியத்தலையை ஒட்டியதும் ரேணுகா உயிர்ப்பெற்றார். பரசுராமரின் அன்னை ஸ்ரீரேணுகாபரமேஸ்வரியாக இன்றும் வணங்கப்படுகின்றார்.

இந்தக் கதையில் ஐந்து நீதி உள்ளது.
1) மனம் சஞ்சலப்பட்டால் செய்யும் செயலை சரியாக செய்யமுடியாது. அது அறிந்த பலதரம் செய்து பழக்கப்பட்ட தொழிலாக இருந்தாலும்.

2) தந்தை சொல் கேட்காத பிள்ளைகள் உடல்நலத்தையும், வாழ்க்கை சிறப்பையும் இழக்கிறார்கள்.


3) தர்மம் அறிந்த இறைவணக்கம் உடைய தந்தை பாசமிக்க அன்புக்குறிய ஒருவரை அவரின் தவறுக்காக தண்டிக்கச் சொன்னால், பாசத்தில் மயங்காமல் தண்டிப்பவருக்கும், தண்டனைப்பெற்றவருக்கும்   தந்தையின் கருணையால்  மீண்டும் நல்லுயிரும்  தெய்வீக கடாச்சமும் கிடைக்கும்.

4) தவறுக்கள் தண்டிக்கப்படவேண்டியது முக்கியம். தவறுகள் திருத்தப்பட்டால்தான் நன்மை உண்டாகும், புகழ் உண்டாகும்.

5) தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை, வாழ்க்கையும் இல்லை. அதற்கு தந்தையும் தவம் உடையவராக இருக்கவேண்டும்.


பரசுராமன் அவதாரத்தில் மட்டும் இல்லை, தந்தைச்சொல் கேட்டதிலும் ஸ்ரீராமனுக்கு மூத்தவர்.
நன்றி
வாழ்க வளமுடன்.