Reply – Re: Parasuramar
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: Parasuramar
— by R.MANIKKAVEL R.MANIKKAVEL
 ஓம் ஸ்ரீமுருகன் துணை

அன்புள்ள நண்பருக்கு வணக்கம்!
ஜமதக்னி முனிவருக்கும் அவர் மனைவி ரேணுகாதேவிக்கும் பிறந்தவர் பரசுராமர்.

நாராயணமூர்த்தியின் முக்கிய 10 அவதாரங்களுல் 6வது அவதாரம் பரசுராமர் அவதாரம். ராமர் என்பது அவர் பெயர். பரசு என்னும் மரம்வெட்டும் கோடாரியை அவர் எப்போதும் தன் உடன் வைத்து இருந்ததால் அவர் பரசுராமர் என அழைக்கப்பட்டார்.

பிராமணக்குலத்தில் பிறந்தும் பெரும் வீரம் படைத்தவர். யாராலும் வெல்லமுடியாத கார்த்தவீரிய அர்ஜூனனை வென்றவர். ஷத்திரியர்களை அழிப்பதையே தனது கடமையாகக்கொண்டு வாழ்ந்து 21தலைமுறை ஷத்ரியர்களை அழித்தவர். தசரதராமனாகிய ஸ்ரீராமன் முன் தனது பலத்தை இழந்தவர். போர்த் தொழிலைக் கைவிட்டு தவம்மேற்கொண்டார். அதன்பின் அவர் தகுதிவாய்ந்த சீடர்களுக்கு தனுர்வேதம் என்ற வில்வித்தையைக்கற்றுக்கொடுத்தார்.

அவரின் சீடர்கள் பீஷ்மர். துரோணர்.கர்ணன். அவர் அழியாதவர். இன்றும் இருக்கிறார் என்பது நமது புராணங்களின் கூற்று.

விசுவாமித்திரர் ஷத்திரியராக பிறந்து பிரமணராக உயர்ந்தவர்.
பரசுராமர் பிராமணராக பிறந்து ஷத்திரியராக வாழ்ந்தவர்.

பிறப்பால் அல்ல நடத்தையால் குலம்மாறும் என்பது இதனால் தெரிகிறது.

நன்றி
வாழ்க வளமுடன்.