Reply – Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
கண்பார்வை அற்றதால் தகுதியிழந்த திருதராஷ்டிரனின் பிள்ளைகளுக்கு இயல்பாகவே தகுதி ரத்தாகி விடுகிறது. இதை மறுத்தாலும், அந்த சந்ததியில் யுதிஷ்டிரனே மூத்தவன். குருஜங்காலம் என்ற பெரிய நாடு உருவாவதற்கு காரணம் பாண்டுவின் வீரமேயன்றி திருதராஷ்டிரனின் வீரம் காரணம் அல்ல. அதன் பிறகும் நாடுவளர்ந்ததற்குக் காரணம் பாண்டவர்களின் வீரத்தாலன்றி துரியோதனனின் வீரத்தால் அல்ல.

நீங்கள் சொல்வது போல திருதராஷ்டிரனின் வாரிசுகள் மட்டும் எப்படி நேரடி வாரிசுகளாக முடியும். வியாசர் கொடுத்த மருந்தாலே வெறும் சதைப்பிண்டம்தான் காந்தாரிக்குப் பிறக்கிறது. அதை நூறு கூறுகள் போட்டு குடங்களில் இட்டுப் பிறந்தவன்தான் துரியோதனன்.

இக்கட்டான இச்சூழலில்தான் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, வரண்ட காண்டவப் பிரஸ்தம் பாண்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது. கவனிக்க.... வரண்ட காண்டவப் பிரஸ்தம்!

நாடு பிரிக்கப்படுவதற்கு முன்னரேகூட துரியோதனன் நல்லவனாக இருந்திருந்தால், அவன் ஏன் பாண்டவர்களைக் கொல்ல முனைய வேண்டும்?

இங்கே நாம் திருதராஷ்டிரனின் பார்வையில் பார்க்காமல் பீஷ்மரின் பார்வையில் பார்ப்பதுதான் சிறந்தது என்று நான் கருதுகிறேன்.