Reply – Re: Re : Why Subathirai has not gone with Pandavas to Vanavasam
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: Re : Why Subathirai has not gone with Pandavas to Vanavasam
— by R.MANIKKAVEL R.MANIKKAVEL
 ஓம் ஸ்ரீமுருகன் துணை

வணக்கம் திரு.பாலகிருஷ்ணன்.

அன்னை பாஞ்சாலி ஐந்து குழந்தைகளின் தாய். அவர்கள் பாஞ்சாலியின் அண்ணன் திருஷ்டத்தூய்மனன் கண்காணிப்பில் பாஞ்சால நாட்டில் வளர்ந்தார்கள்.

குருசேத்திரப்போர் பாண்டவர்களுக்கு வெற்றியை தந்த நாளின் இரவில் அவர்கள் படைவீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது, துரோணரின் மகன் அஸ்வத்தாமனும், குலகுரு கிருபாச்சாரியாரும் துரியோதனின் சாவுக்கு பழிவாங்கும் எண்ணத்தில் பாஞ்சாலியின் மகன் ஐவரையும்  ஐந்து பாண்டவர்கள் என்று நினைத்து யாருக்கும் தெரியாமல் பதுங்கி வந்து தூங்கும்போதே கொன்று விட்டார்கள். கொன்றப் பின்புதான் தெரிந்தது பாண்டவர்கள் யாரும் சாகவில்லை அவர்கள் கண்ணபெருமான் உடன் குருசேத்திரத்தின் வேறு இடத்தில் இருந்து  இருக்கிறார்கள் என்பது.

குருசேத்திரப்போரில்…
காந்தாரி 100 பிள்ளைகளை இழந்தாள்
குந்தி-1மகன் கர்ணனை இழந்தாள்
பாஞ்சாலி-5 பிள்ளைகளை இழந்தாள்
சுமத்திரை-1மகன் அபிமன்யுவை இழந்தாள்

குருசேத்திரப்போரின் முடிவில் ஒரு உண்மை புலப்படுகின்றது. போரில் யார் வென்றாலும், யார்த்தோற்றாலும் தாயின் மடி மட்டும் கண்ணீரால் நிறம்பும் என்பது தெரிகின்றது.

தொடர்ந்து மகாபாரதம் படியுங்கள் பல உண்மைகள் புலப்படும்.

நன்றி
வாழ்க வளமுடன்.