Reply – Re: Drona and Ekalaivan
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: Drona and Ekalaivan
— by R.MANIKKAVEL R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீ முருகன் துணை

வணக்கம் அய்யா! நல்லக் கேள்வி காலம் காலமாக கேட்கப்படும், முழு பதில் இல்லாக் கேள்வி. இதுவும் முழு பதில் இல்லை.

மனித இனம் சுயநல மில்லாமல் வாழ முடிவது இல்லை. சுய நலம் இல்லை என்றால் வாழ வேண்டிய தேவையும் இல்லை.

அப்பா அம்மாவை மணந்தது சுயநலம். அம்மா நம்மை சுமந்தது சுய நலம். இப்படி தொடக்கமே சுய நலமாக இருக்கும் போது, மனித வாழ்வு மட்டும் எப்படி சுய நலம் இல்லாமல் இருக்கும். அதற்காக எல்லோரும் சுய நலமாகத்தான் வாழ்கிறார்களா? இல்லை.

அப்பா தனது சுயநலத்தை அழிக்க அம்மாவிற்காக தனது உடல் பொருள் ஆவியை அர்பணிக்கிறார். அம்மா தனது சுயநலத்தை அழிக்க பிள்ளை களுக்காக தனது  உடல் பொருள் ஆவியை அர்பணிக்கிறார். இந்த தியாகத்தின் ஜோதியில் பல சுயநல குப்பைகள் சாம்பல் ஆகிவிடுகின்றன. தியாகத்தின் அளவைப் பொறுத்து உலகின் ஞாபகத்தில் எல்லோரும் நிற்கிறார்கள். தியாகத்தின் அளவு மாறுபாடு உடையதே அன்றி தியாகம் இல்லாமல் யாரும் இல்லை. அதனால்  மானிட வாழ்க்கை போற்றுதலுக்கு உரியதாகிறது.  

ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல்(படிகள்)  எப்படி ஒரு வீடு கட்டமுடியாதோ அப்படி, ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் ஒரு சமுகத்தை உருவாக்க முடியாது. காவலாளியில் தொடக்கி முதலாளி வரை இருந்தால் தான் ஒரு நிறுவனம் செயல் பட முடியும். சமூகமும் அப்படித்தான். பிறப்பின் அடிப்படையில் அது அமைந்தது துரதிஷ்டம். இது வேத காலத்தில்  இருந்ததும் இல்லை. நமது நாட்டுக்கு உரியதும் இல்லை. நமது பண்பாட்டுக்கு அன்னியர் நம் நாட்டை அபகரித்த போது உருவாகியதாக இருக்க வேண்டும். நமது மன்னர்கள் யாரும் கையுரைப் போட்டுக்கொண்டு கைக் குலுக்கியது இல்லை. கையுரைப் போட்டுக் கொண்டு கை குலுக்கும் நாகரிகம் உயர்ந்ததா? தான் மலம் இருந்ததும் குதம் துடைக்க மற்றவனை அமர்த்திக்கொண்டவன் கற்றுக் கொடுத்த சமதர்மம் நாம் இன்று பேசுவது. போகட்டும்.
அவன் அவன் தொழிலில்  தன்னை ராசாவாக நினைத்த மக்கள், நம் மக்கள். அதில் ஒரு தெளிவு, ஆத்மார்த்தம் இருந்தது அன்று.    நிற்க .
துரோணர் குருகுலத்தவருக்கு போர்க் கலை கற்றுக் கொடுக்க வந்தது அவரின் சுய நலத்தால். துருபதன் மீது பழி  தீர்க்க  வேண்டும். அதற்க்கு சரியான  வீரன் அர்ஜுனன். அர்ஜுனனுக்கும் அவர் முழு கலையை சொல்லித்தர வில்லை. அசுவத்தாமனைவிட குறைவாகவே சொல்லிக் கொடுத்தார். தனது பயிற்ச்சியால், முயற்ச்சியால்  துரோணர் இதயத்தில் இடம் பிடித்து அசுவத்தாமனை  தாண்டினான் அர்ஜுனன்.

துரோணரின் இந்த பிள்ளைப்  பாசம்  அவரை பிரம  ரிஷியாக ஆகவிடாமல் தடுத்தது. தனது  ஞானத்தை சீடர்களுக்கு வழங்கியதால்   துரோணரின் சுயநலம் எரிந்து மறைந்தது.

நல்ல காந்தம், நல்ல இரும்பை ஈர்த்து  விடும்,   இரும்பு தான் இரும்பு என்று சொல்ல தேவை இல்லை. ஏகலைவன் முதன் முதலில் குருகுலத்திற்கு வந்த போதே அவன் நல்ல இரும்பு என்பது குருவுக்கு தெரிந்து இருக்கும். தன் கூட இருந்தால் அவனும் காந்தமாகி விடுவான்  என்று தெரிந்து இருக்கும். தெரிந்த  உண்மையை எல்லாம் வெளியில் சொல்ல வேண்டிய தேவை இல்லை அது எதிர் விளைவை உண்டாக்கும்.    

ஒரு கதை: பிரமம் என்பது எல்லாம் ஒன்றுதான் இரண்டு இல்லை என்று குரு சொன்னதும்  , முட்டாள் மன்னன் வேலைக்காரியை ராணிபோல் இருக்க சொல்லி விட்டு  , ராணியை வேலைகாரியாய் பணி seyya சொன்னானாம். கேட்க வந்த குருவுக்கு எச்சில் சோறு வைத்தானாம். குரு பிரம ஞானி, உடனே பன்றியாகி எல்லாவற்றையும் தின்று தீர்த்து விட்டார்.

மன்னனுக்கு அப்பதுதான் புரிந்தது. அரைகுறையாக எதையும் புரிந்துக் கொண்டால் எல்லோருக்கும் துன்பம்.  

அறம் அறியாமல், பலம் மட்டுமே வளர்ந்து விட்டால் நன்மை உண்டாகுமா? அறம் அறியாமல், பதவி பலம் வந்ததால் இன வெறியன்  ராஜபக்சே  நடந்து கொண்டதைப் பாருங்கள். இவன் தருமம்  அறிந்தனா என்று அறிந்து ஆட்சியில் அமர்த்தி இருந்தால் இந்த கொடுமை நடந்திருக்குமா?


ஒரு புறாவுக்கு தனது சதையையே கொடுத்த  சிபி மன்னனை நினைத்துப் பாருங்கள்.

 நாய்   குறைப்பது அதன்  குணம். அதற்காக ஒரு நாயின் வாயின் உள் ஏழு அம்புகளை அடிப்பது தர்மமா? சீவ கருணை இல்லாத ஒருவன் , சுயக் கட்டுப் பாடு இல்லாத ஒருவன், பலவானாக ஆனால் தனது  சுய நலத் திற்கு உலகை அழிக்க மாட்டனா?  

நிஷாத குலத்தில் பிறந்து, வேட்டையை தொழிலாகக் கொண்ட ஏகலைவனுக்கு காரணமில்ல உயிர்க் கொலை பெரிதாகப் படவில்லை.

சூதாட்டக் களத்தில், திரௌபதி துகில் உரிப்புக்கு பின் பீமன் எரி தழல் கொண்டு வர சொல்லி தருமன் கையை கொளுத்துவோம் என்கிறான். அர்ஜுனன்  பீமனை சமாதனப் படுத்தி, தானும் நிதானமாக இருந்து தருமத்தை கடைப் பிடித்து, காத்திருந்து வெற்றி பெறுகிறான் அழியா புகழ் பெறுகிறான். கீதை என்னும் பெரும் நூல் கிடைக்க வழி வகுத்தான்.

அருவாள்மனையை அம்மா எடுத்தால் சமையல் நடக்கும். குழந்தை எடுத்தால் பறித்து விடுவோம்? கொடுக்க வில்லை என்றால் அடித்து பிடுங்குவோம்.  
 
துரோணர் மறுத்த பின்பு,  ஏகலைவன் துரோணரை குருவாக நினைக்காமல்,    துரோணரை சொல்லாமல் தனது திறமையை வளரத்து இருந்தால் இந்த விரல் காணிக்கை ஏற்பட்டு இருக்காது.

நண்பர் பேரரசு பதிலில் உள்ள குல வேற்றுமை இல்லை என்ற விளக்கம் சரியே என்பது எனது கருத்தும்.  

நன்றி, வாழ்க வளமுடன்