Reply – Re: தனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை.
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: தனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை.
— by ஆர்.மாணிக்கவேல் ஆர்.மாணிக்கவேல்
ஓம் ஸ்ரீ முருகன் துணை

வணக்கம்!

தனது தம்பியைக் கொன்ற கந்தர்வனுடன் பீஷ்மர் ஏன் போரிடவில்லை? நல்ல கேள்வி திரு.ஆண்டனி.

கதைகளை ஒட்டி திரு. அருள்செல்வ பேரரசின் பதிலும் நன்று.

நான் சற்று உள் சென்று பார்க்கலாம் என்று நினைக்கிறன்.

ஒரு போர் என்பது பதவியும், படையும், வாளும், தோளில் தினவும் இருப்பதாலேயே நடந்து விடுவதில்லை. அப்படி நடக்கவும் கூடாது. அப்படி நடந்தால் தமிழ் இனம் இன்று இலங்கையில் அடைந்த கொடுமையை அடைந்துவிடும் போரில் அடிப்பட்ட நாடு. எனவே போருக்கு தருமா நீதி அதி முக்கியம்.

தருமநீதியை கடைப்பிடித்தே போர்கள் நடந்தன, அதனால்தான் போர்கள் திட்டமிட்ட இடத்தில், திட்டமிட்ட காலத்தில் நடந்தாது. குறிப்பாக நதிக்கரையில். செங்கிஸ்கான், மாலிக்காபூர் போன்ற  நெறி அறியாதவர்கள் செய்தபோர்கள் எளிய அப்பாவி மக்களை கொன்று கோவித்தது. நிற்க.

போருக்கு ஒரு காரணம் வேண்டும், எதிரி நாட்டு மன்னன் அதர்ம ஆட்சிப் புரிகிறான் என்றல் போர் தொடுக்கலாம்.

நான் மன்னனாகி விட்டேன் என் வீரத்தை வெளிப்படுத்த திக்விஜயம் செய்கிறேன், என்னுடன் நண்பராக உள்ளவர்கள் கைகுலுக்கலாம். எதிர்ப்பவர்கள் வாள் எடுக்கலாம் என்று ஒரு நெறியை கொண்டு போர் தொடுக்கலாம். இந்தவகையை சேர்ந்ததுதான் நாட்டு எல்லையை விரிவுப் படுத்துவதும்.

இந்தவகையில் மன்னனாகிய சித்ராங்கன் பல மன்னர்களையும், சில அசுரர்களையும் வென்று இறுமாப்பு கொள்கிறான்.
மன்னர்களை வென்ற சித்ராங்கன், அசுரர்களை வென்றதால் பலத்தின் மீது இருந்த ஆசை தனது பெயரின்மீது கொள்ளும் புகழ் ஆசையாக பேராசையாக உயர்கிறது. கந்தர்வர்கள், மனிதர், அசுரர்களை விட மேம்பட்ட நிலையில், தேவர்களைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள்.

கந்தர்வர்கள் பறந்து செல்லும் திறன்படைத்தவர்கள். உல்லாசிகள். இந்த நிலையை அடைய மந்திர தந்திரங்கள் அறிந்து இருக்க வேண்டும். வெறும் ஆசை மட்டும் கொண்டு முரட்டுத் தைரியத்தால் அவர்கள் உடன் போரிட முடியாது. பீஷ்மரின் தம்பியாகவும், சீடனாகவும் இருக்கும் சித்ராங்கன் பீஷ்மர் போலவே தன் புகழை பேரை தேவலோகம் வரை கொண்டு செல்ல நினைக்கிறான். மற்றொரு காரணமும் இதில் உண்டு, அண்ணனாகிய பீஷ்மன் விட்டுக் கொடுத்ததாலேயே இந்த மன்னன் பதவி தனக்கு கிடைத்து இருக்கிறது , ஒரு பிட்சையபோல என்ற நினைப்பும் சித்ராங்கன் உள்ளதை அரித்துக்கொண்டுதான் இருக்கும். அதற்கு ஒரு முடிவுக் கட்டவும், தேவர்களை வெல்வதன் மூலம் அது நீங்கும் என்றும் சித்ராங்கன் நினைத்து இந்த போரை தொடர்ந்திருக்கலாம். கந்தர்வர்கள்  உடன் போரிட்டு வெல்லாமல் தேவர்கள் உடன் போரிட முடியாது.
பாண்டவர் பூமியில் கவிஞர் வாலி சொல்வதை பாருங்கள்

புவியில்-
பேராசையில்-வேந்தர்
புரிவதுண்டு போர்; இது-
பேராசையில் வந்த போர் அல்ல
பேர் ஆசையில் வந்த போர்
சிறு-
அக்கப் போராக-
ஆரம்பம் ஆனது-பெரும்
வர்க்கப் போராக
உக்கிரம் அடைந்தது .

சிறந்த தர்ம ஆத்மாவும், போர்களை வல்லுனரும் ஆகிய பீஷ்மர் இந்த போருக்கு முன்னே, சித்ராங்கனிடம் பேர் ஆசையில் போர்க் கூடாது என்று விளக்கி இருப்பார். அதை மீறியே சித்ராங்கன் சென்று இருக்கக் கூடும். அல்லது வழி வழியாய் வரும் குரு குல மன்னர்கள் தங்கள் புகழ் பெயரை தேவலோகம் வரை நீட்டிப்பது வழக்கு, எனவே பிள்ளையில் விளையாட்டை ரசிக்கும் தந்தைபோல பீஷ்மரும் தம்பியின் வளர்ச்சியை ரசித்திருக்க வேண்டும். தீயில் உருகி கருகாமல் இருந்தால் தான் அது பொன், இல்லை என்றல் அது பொன்னாகவே இருந்தாலும் பொன் அல்ல. போர் என்று வந்தபின் வெற்றி அல்லது வீரமரணம் இரண்டும்தான் வீரனுக்கு சொர்க்கம்.  

பேர் ஆசையிலோ அல்லது பேராசையாலோ நடந்தப் போரில் குருமன்னன் சித்ராங்கன் இறந்தான் என்பதற்காக பீஷ்மர் போர் தொடுத்தால் அது சிறு பிள்ளைத்தனமாகி விடும். போர் தருமம் அறியாத கற்றுக் குட்டி நிலையாகி விடும்.

பீஷ்மரின் வில்லுக்கு முன்னாள் பரசு ராமரே நிற்கமுடியாது என்னும் போது கந்தர்வன் சித்ராங்கன் எம்மட்டு. புல்லைப் புடுங்க யாரவது அக்கினி ஏவுகணை போடுவார்களா? இருந்தும் கந்தர்வ சித்ராங்கன் மேல் உலகம் போய்விட்டான், பீஷ்மர் மீது இருந்த பயமே காரணமாக இருக்கலாம். பயந்தவனை மீண்டும் போருக்கு இழுப்பது பீஷ்மருக்கு அழகல்ல.

தாயும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்னும் பழ மொழி இங்கு நினைக்க, பேராசைக் கூட பெரும் பசிதான் அதற்கு அடுத்தவர் சாப்பிட்டால் வயிறு நிரம்பாது அவர் அவர்தான் சாப்பிட வேண்டும். சித்ரான்கனின் பேராசைக்கு அவன் சாப்பிட்டது விஷமாகி விட்டது.

மன்னனோ மனிதனோ கடமையை செய்யவேண்டுமே தவிர, பேராசையை கடமையாக நினைக்கக் கூடாது.

நன்றாக நடித்து பணம் சம்பாதித்து, பேராசையில் தயாரிப்பாளர்கள் ஆகி கடன்காரர்களாகி திண்டாடும் சில நல்ல நடிகர்கள், நடிகைகள் இங்கு ஏனோ ஞாபகத்தில் வருகிறார்கள்.

நல்ல சிந்தனைக்கு வழி தந்தமைக்கு நன்றி. திரு.ஆண்டனி, திரு.அருள்செல்வ பேரரசு.

வாழ்க வளமுடன்