Reply – Re: ஐவருக்கு ஒருத்தியா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: ஐவருக்கு ஒருத்தியா?
— by R.MANIKKAVEL R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீ முருகன் துணை

தமிழ் வள்ளுவர் ஐயா! வணக்கம்!

உலகம் உய்ய நல்ல வழி காட்டி, அந்த வழியில் நடந்து, வாழ்ந்து உலகுக்கு ஒரு சான்றாக இருப்பவன் சான்றோன். தமிழரில் உயர்ந்த நாயன்மார்கள். நாயன்மார்களில் ஒருவர் இயற்பகை நாயனார். அவர் சான்றோரா?

 சிவனடியாருக்கு இல்லை என்று சொல்லாத குறிக்கோளோடு வாழ்ந்ததால் தனது மனைவியையே கொடுத்தவர். தடுக்க வந்த உறவுகளை வெட்டிப் போட்டவர். உலக நடைமுறைக்கு அதுவும் தமிழர் பண்பாட்டுக்கு சரியா?

இன்னும் இன்னும் கேள்விகள் கேட்டுக் கொண்டே செல்லலாம். எத்தனை கேள்வி கேட்டாலும் ஒரே பதில்தான் இயற்பகை நாயனார் சன்றோர்தான். காரணம் இருமையை(நீ- நான், மானம் -அவமானம், ஆண் -பெண் ) தாண்டி, அகமும் புறமும்   ஓன்று ஆனவனுக்குத்தான் இறைக் காட்சி கிடைக்கும். இயற்பகை இறைவனை அடையும் நிலை அன்று, இறைவன் வந்து 'உனது மனைவியை" கொடு என்று கேட்டார். இயற்பகை நாயனார் கொடுத்து விட்டார்.

நமக்குதான் இயற்பகை நாயனார் மனிதன். இறைவனுக்கு அவர் இறை நிலையில் இருப்பவர். இறைவனும் தானும் வேறல்ல என்ற நிலையில் இருப்பவர். பக்திக்கு அந்த  சக்தி உண்டு.

இப்ப ஐவருக்கு ஒருத்தியா? கேள்விக்கு வருவோம்.

1) திரௌபதி தீயில் பிறந்தவள், பிறக்கும் போதே கன்னியாக, திருமண வயதில் பிறந்தவள்.
2) அவள் அழைத்தால் வைகுண்டத்தில் இருந்தாலும் கண்ணன் வருவான். ராதை அழைத்துக்கூட கண்ணன் சரியான நேரத்திற்கு வந்ததாக வரலாறு உண்டா?
3) அவள் கையிலும் அட்சய பாத்திரம்   இருந்தது.
4) தன்னை முதலில் சூதில் வைத்து இழந்து பின் என்னை தோற்றாரா? இல்லை, என்னை முதலில் சூதில் வைத்து இழந்து பின் தன்னை தோற்றாரா? என்ற மாபெரும் பகுத்தறிவு கேள்வியை கேட்டு அறிவு உலகத்தை ஆட்டிப்பர்த்த பெரும் ஞானி அவள்.
இந்த இடம் எல்லாம் வரும்போது அவள் தெய்வ பெண் என்று ஒதுங்கி விடுவோம்.

ஐந்து கணவர்களின் மனைவி என்றதும், அவளை கடை சரக்காக்கி விடுவோம்.
கற்பு  என்பதை  பெண்ணின் பிறப்பு உறுப்பை ஒட்டி நாம் நினைக்கிறோமே தவிர மனதை மையப் படுத்தி நினைக்கிறோமா? இல்லை ..ஏன்?  
நாம் பெண்களை உருவமாக பார்க்காமல் உறுப்புகளாக பார்க்கிறோம்.

வசைப் பாட கூட  நாம் அதிகமாக     பயன் படுத்துவது பெண்களின் பிறப்பு உருப்பை. அதனாலே பெண்ணின் பிறப்பு உறுப்பு அங்கமாக நம் மனதில் பதியாமல் அசிங்கத்தின் அடையாளமாக பதிந்து விட்டது. எனவே கற்பு  என்பதை  பெண்ணின் பிறப்பு உறுப்பை ஒட்டி நாம் நினைக்கி க்கும் போது.உயர்த்த மனத்தின் உன்னத வெளிப்பாடு கற்பு என்பது நமக்கு எப்படி புரியும்.
தங்க தமிழச்சி கண்ணகியை கற்புக்கு அரசி  என்கிறோம் எதனால், அவள் உள்ளத்தில் விளைந்த எண்ணத்தின் எழுச்சியே, நாவின் வழியாக வந்த சொல்லாகி, சொல்லே தீயாகி சுட்டதால்.  இங்கு உடலை மையப் படுத்தி கண்ணகியை கற்புக்கரசி என்று சொல்லவில்லை.


சாவித்திரியை கற்புக்கு அரசி என்கிறோம். உள்ளம் கவர்ந்த கணவனின் இறுதி காலம் தெரிந்தும், அவனை மணந்து அவனுக்காக எமனோடு வாதாடி வென்று கணவன் உயிரை மீட்டு வாழ்ந்தது.உள்ளம் நிறைந்த அன்பால், உள்ளத்தில் விளைந்த எண்ணத்தால். இங்கும் உடம்பு சார்ந்து கற்பு வரையறுக்கப் படவில்லை.

ஆண்ட சராசரங்களையும் ஆட்டிப் படைத்த ராவணனை துரும்பாக சீதையை நினைக்க வைத்தது எது? சீதையிடம் அது அவிளின் வலிமை மிகுந்த எண்ணம் இன்றி வேறு எது. அதுவே சீதையின் கற்பு. இன்னும் இன்னும் கற்பு கரசிகள் உயர்ந்த எண்ணங்களால் கற்பை நிலை நிறுத்தினார்கள்.

திரௌபதி சுயம்வர மண்டபத்தில் ஐந்து மாலைகளை ஏந்தி நின்று ஐந்து கணவனை வரிக்கவில்லை. ஒரு மாலையோடு இருந்து ஒருவனையே வரித்தாள். காலம் (விதி) அவளுக்கு ஐந்து கணவனை கொடுத்தது. இரண்டு புள்ளிகளுக்கு (ஆண், பெண்) இடையில்  நேரக்  கோடாக இருக்கும் வாழ்க்கை, திரௌபதியைப் பொருத்தமட்டில்  அறுங்கோணம் ஆகிவிட்டது (ஒரு பெண், ஐந்து ஆண்). திரௌபதி அந்த அறுங்கோணத்தை சிதைக்கவே இல்லை.  

நேர்க்கோடாக இருக்க வேண்டிய தம்பதிகள் எத்தனைப் பேர் நேரக் கோடாகவே இருக்கிறார்கள். சில கோடுகள் புள்ளியாகி போகின்றன. (நேர்க் கொடு வரைய  இரண்டு புள்ளிகள் முக்கியம்). காரணம் இருவருக்கும் இரண்டு மனம். சின்னக் காரணத்திற்கு கூட பிறந்து விடுகிறார்கள். எவ்வளவு பெரிய கொடுமைக்கு பின்னும் திரௌபதி கணவர்களை நேசிக்கிறாள். அவள் நினைத்து இருந்தால் பாஞ்சாலம் போயி இருக்கலாம்.

திரௌபதியை பொருத்தமட்டில் பிரம ஞானியாகவே தான் தெரிகிறாள். யாரிடமும் அவள் வேற்றுமை காணவில்லை குற்றமும் காணவில்லை. தருமரை எப்படி நினைத்தாலோ அப்படியேதான் சகாதேவனையும் நினைக்கிறாள். உள்ளம் உயர்வடையாமல் யாராலும் இப்படி நினைக்க முடியாது. அவள் ஏற்று கொண்ட அறுகோணம் (வேதியலின் பென்சின் வடிவம் C6H6) வடிவம் சிதையவே இல்லை. கற்பு உடலில் இருந்தால் உடல் தளருரும் போது கற்பும் தளர் உறும். இதனால் ஒரு பெண் பலரை மணப்பது தவறில்லையா என்ற கேள்வி எழும். சமுக ஒழுக்கத்தை யாவரும் கடைப்பிடித்தே தீரவேண்டும். விதி விளக்காக ஓன்று நடந்து விட்டால் அதற்காக அது குற்றம் ஆகிவிடாது. விதி விளக்கையே எல்லோரும் கைக்கொள்ளவும் கூடாது.  

கற்பு உடலில் இல்லை.மனதில் உள்ளது.திரௌபதியின் மனமோ கண்ணன் என்னும் இறைவனின் பாதமலரில் பக்தியாய் உள்ளது. பக்தியால் எதுதான் உயர்ந்ததாகாது.

பக்தியால் எச்சில் கனிக்  கூட இறைவன் ஏற்கும் பிரசாதமாகி விடும்.

நல்லதொரு சிந்தனையை தூண்டிய தமிழ் வள்ளுவர் அய்யா நன்றி கலந்த  வணக்கம்.
 
நன்றி
வாழ்க வளமுடன்