Reply – Re: கர்ணன் சொன்னதுதான் சரி!
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: கர்ணன் சொன்னதுதான் சரி!
— by R.MANIKKAVEL R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீ முருகன் துணை

நன்றி நண்பரே! நல்ல பதில் அளித்துள்ளீர்கள்.

கர்ணன்  "ஓ துரியோதனா, நாம் அனைவரும் உனது விருப்பத்தைச் சாதிக்கவே முயல்கிறோம். ஓ மன்னா {துரியோதனா}, நான் இப்போது நம்மிட ஒருமித்த நிலை நிலவுவதைப் பார்க்கிறேன். ஆசைகளைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாண்டுவின் மகன்கள், உறுதி ஏற்றுக் கொண்ட காலத்தைக் கழிக்காமல் திரும்பி வரமாட்டார்கள். இருப்பினும்  தோல்வி மனப்பான்மையில் அவர்கள் திரும்பி வந்தால், அவர்களை மீண்டும் பகடையில் வீழ்த்து" என்றான்.

இந்த கருத்தை கர்ணன் அறம் தடுமாறி சொல்லவில்லை. அவன் உள்மன போராட்டத்தை பதிவு செய்கிறான். காரணம், இந்த பதில் வரும் முன்பு துரியோதனன் மனநிலை என்ன?

துரியோதனன் "பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} நகருக்குள் திரும்பி வருவதை நான் கண்டால், உணவையும், நீரையும் தவிர்த்து மீண்டும் மெலிந்தவனாகிவிடுவேன். விஷத்தை உட்கொள்வேன் அல்லது தூக்கு மாட்டிக் கொள்வேன், அல்லது நெருப்புக்குள் நுழைவேன் அல்லது எனது ஆயுதங்களைக் கொண்டே என்னை நான் கொன்று கொள்வேன். ஆனால் பாண்டுவின் மகன்கள் செழிப்பாக இருப்பதை என்னால் காண முடியாது’’,
 
துரியோதனனின் இந்த பதிலுக்கு பின்னே கர்ணன்  மனதில் எழுவது பச்சாதாபமில்லை, வெளி காட்டிக்கொள்ள முடியாத இகழ்ச்சி, இமயம் என்று நினைத்தவன் அதலபாதாளமா? அதனால் ஏற்படும் மன கொதிப்பு, இருந்தும் அதனை காட்டிக் கொள்ளமுடியாத நேரம்.காட்டிகொண்டால் நண்பன் இறப்பதை விரும்புவதுபோல் ஆகிவிடும்.  கர்ணன்  பேசாமலும் இருக்க முடியாது எனவே பேசுகிறான். பேச்சை கவனியுங்கள்

"ஓ துரியோதனா, நாம் அனைவரும் உனது விருப்பத்தைச் சாதிக்கவே முயல்கிறோம். ஓ மன்னா {துரியோதனா}, நான் இப்போது நம்மிடம் ஒருமித்த நிலை நிலவுவதைப் பார்க்கிறேன்". அப்படி என்றால் இதற்கு முன் நடந்த சூதுக்கு கர்ணன் இணங்கவில்லை என்பது தெரிகிறது.  

 "ஆசைகளைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாண்டுவின் மகன்கள் ''  இந்த இடத்தில் பாண்டவர்களுக்கு ஏன் பாராட்டு பத்திரம்?. காரணம் பாண்டவர்களின் ஆசை அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. துரியோதனன் ஆசையோ அடுத்தவரை நம்பி உள்ளது (கண்ணு தெரியாத திருதரச்டிரனை நம்பி, கோணல் புத்தி கொண்ட சகுனியை நம்பி) எனவே "அவர்களை மீண்டும் பகடையில் வீழ்த்து" என்றான்.

நான் அதற்கு தயார் இல்லை.   நீயே செஞ்சிக்க (கண்ணு தெரியாத திருதரச்டிரனை நம்பி, கோணல் புத்தி கொண்ட சகுனியை நம்பி) அதனால்தான் “வீழ்த்துவோம்” என்று சொல்லாமல் “வீழ்த்து” என்று சொல்கிறான்.

இந்த வார்த்தைக்கு பின்பு. மன்னன் துரியோதனன் மகிழ்ச்சியற்ற இதயத்துடன், தனது ஆலோசகர்களிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். இதையெல்லாம் குறித்துக் கொண்ட கர்ணன், தனது அழகான கண்களை விரித்து, கடுமையான கோபத்துடன் தனது உறுப்புகளை {உடலை} அசைத்து, அலட்சியத்துடன் துரியோதனன், துச்சாசனன் மற்றும் சுவலனின் மகனிடம் {சகுனிடம்}, "இளவரசர்களே, எனது கருத்தை அறிந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் மன்னனின் (துரியோதனனின்) நலத்தை விரும்பி, கூப்பிய கரங்களுடன் அவனுக்காகக் காத்திருக்கும் பணியாட்கள். ஆகையால், நாம் அவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும்!  

நண்பன் அவனும் இளவரசன் அவன் முன்பு நண்பனாக இருப்பவன், அங்க நாட்டின் அரசனாக இருப்பவன் கூப்பிய கையுடன் " உன் பணியாள்” என்றால் எதனை நக்கல். உள்ள கொதிப்பு. கோழையே என்று சொல்லாமல் சொல்லும் வன்மம்.

கடைசியாக கர்ணன் "அவர்கள் {பாண்டவர்கள்}, துயரத்தில் இருக்கும்வரை, சோகத்தில் இருக்கும் வரை, உதவியற்று இருக்கும் வரை, அந்தக் காலம் வரை மட்டுமே நாம் அவர்களுக்குச் சமமானவர்கள்! இதுவே என் மனம் {கருத்து}" என்றான்.

வனவாசத்தில் அப்படித்தானே இருக்கிறார்கள் பாண்டவர்கள். அப்படியும் உன்னால் வெற்றியாளனாக இருக்க முடிய வில்லையா? சரி வா  கொன்னே போட்டுடுவோம்.

இது கர்ணன் அறம் தடுமாறிய நிலை இல்லை. இது மாபெரும் வீரன் மாபெரும் கோழையின் நண்பனாகி. விரக்தியில் தவிக்கும் நிலை

விளக்கில் வைத்த நெருப்பு தீபம்
வீட்டில் வைத்த நெருப்பு சாபம்
பாவம் கர்ணன்! ஒரு தீபம் சாபமாகிறது.

நன்றி
வாழ்க வளமுடன்