Reply – Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
— by R.MANIKKAVEL R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீ முருகன் துணை

அம்புள்ள  நண்பருக்கு வணக்கம்!

தமிழ் வள்ளுவர் துரியோதனன் உத்தமன் தானோ என்று எழுப்பிய சந்தேகத்திற்கு

துரியாதோனன் பாண்டவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவருக்கும் நல்லவன்தான். அவன் உத்தமன் என்பதில் சந்தேகம் இல்லை என்று பதில் அளித்து உள்ளீர்கள் அதற்க்கான எதிர் பதில் இது குற்றம் காணவில்லை.

யார் உத்தமன்? எப்படி இருந்தால் அவனை இந்த உலகம் உத்தமன் என்று சொல்லும்.

ஆற்றலில் அறிவில் குணத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு, தன் பெற்றோரை காத்து, தன் குடும்பத்தை வளர்த்து, தன நாட்டை வளர்ப்பவன் உத்தமன்.

தன்னை வளர்த்துக் கொண்டதற்கு ஏகலைவனை உதாரணம் சொல்லலாம்,
பெற்றோரை   பாது காத்ததிற்கு பாண்டு ரங்கனை தன் குடிலுக்கு வரவைத்த  புண்டலீகனை சொல்லலாம்
தன் குடும்பத்தை வளர்த்ததுக்கு சாவித்திரியை சொல்லலாம் (டாஸ்மார்க் கடைக்கு போகாமல் வாங்கிய சம்பளத்தை வீட்டில்  கொடுக்கும் எல்லோரையும் சொல்லலாம், தான் உண்ணாமல் உழைத்து  தான் பெற்ற பிள்ளைகள் உண்ண வழிதேடும் தாயையும் சொல்லலாம்)
நாட்டை   வளர்த்ததுக்கு நம் சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரையும் சொல்லலாம்.இன்னும் லஞ்சம் வாங்காமல் சம்பளத்திற்கு மட்டும் உழைக்கும் உத்தமர்களை சொல்லலாம் (நல்லவர்கள்  தேடாமல் கண்களுக்கு தெரிவதில்லை)

துரியோதனன் நூறு யானை பலம் கொண்ட   திரிதிராஸ்டிரன்  மகன். மாபெரும் கதாயுத வீரன்.  பலராமனிடம் கதை போர் கற்றவன். பலராமனின் பாராட்டை பெற்றவன், இருந்தும் தன்வீரத்தை அவன் ஒரு இடத்தில கூட நம்பவில்லை.    தன்னை நம்பாதவன் வீரன் இல்லை அவனிடம் ஆற்றல் தங்குவதும் இல்லை.

குழந்தையாக இருந்தபோது குறுக்கு வழியில் சதி செய்தான். (பீமனை விஷம் குடிக்க வைத்து  ஆற்றில்  போட்டது)

இளவரசனாக இருந்தபோது திக்கு விஜயம் செய்யாமல், கர்ணனின் திக்கு  விஜயத்தில் மகிழ்ந்தது. (நரிதான் சிங்கம் அடித்ததை சந்தோசமாக சாப்பிடும், சிங்கம் தான் அடித்த இரை இடதுபுறம் விழுந்தால் கூட சாப்பிடாது)    போர் தொடுக்காமல்  சூதில் பாண்டவர்களை வென்றது.
(ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை- திருக்குறள்)

இறுதியில் தாய் பாசம் மகனை காக்க நிர்வாணமாக முன்வர சொன்னது. அதற்கும் சம்மதித்தான் துரியோதனன்.அப்படியாவது அம்மா பேச்சை சரியாக கேட்டானா? இல்லை அதனால் கெட்டான் (மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்) தன்னுடைய வீரத்தை நம்பவில்லை.

துரியோதனன் தனுக்கு தானே  உத்தமனா? இல்லை

ஒரு மன்னனின், இளவரசனின் கடமை, மக்களையும் அவர்களின் உடமைகளையும் காப்பது. வாழவைப்பது. பாண்டவர்கள் வனத்திலும் நிம்மதியாக இருக்க கூடாது என்று தனது பரிவாரத்துடன் வனத்திற்கு போன துரியோதனன் ஏன் வனகுல மங்கையின் கற்பை   சூறையாட நினைத்தான்? தனி மனித ஒழுக்கம் இல்லாதவன் எப்படி நாட்டை ஆள்வான். வேலியே  பயிரை மேயுவது உத்தம குணமா?

இளவரசனாக வரும்கால மன்னனாக அவன் உத்தமனா?

தாசியோ தாதியோ அவள் அனுமதி இல்லாமல் பெண்மையை சுகிக்க நினைப்பது தருமமா? அவன் அரண்மனை பணிப் பெண்கள்  நிலை என்னவாக இருக்கும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

கண்ணன் மனிதனாக பிறந்து இருந்தாலும் அவன் பகவான் என்பது நாடறிந்த விஷயம். மகா ஞானியான விதுரர் அறிந்து இருந்தார், மகா வீரரான பீஷ்மர் அறிந்து இருந்தார், சூதில் வல்ல சகுனியும் அறிந்து இருந்தான், கண்ணில்லா திரிதிராஸ்டிரனும் அறிந்து இருந்தான் அதனால் தான் துது வந்த கண்ணனுக்கு பசுவை பரிசாக கொடுத்தான். கண்ணன் பகவான் என்பது துரியோதனனுக்கு தெரியாதா? போகட்டும்  தூதுவனை தூதுவனாக கூட  பார்க்க தெரியாதா? ஏன் குழிவெட்டி கொல்ல நினைத்தான்? ஒரு தூதுவனை கையாள கையால் ஆகாதவன் எப்படி    ஒரு மாபெரும் நாட்டை கையாள்வான். போகட்டும் விட்டுப் பார்க்கலாம்.

போர் வந்தததும் அதே கண்ணனிடம் படைபலம் கேட்டு வாங்கியது உத்தம குணமா?

சல்லியரை குறுக்கு வழியில் தனது படையில் சேர்த்தது உத்தம குணமா?. ( அன்னம் இட்ட வீட்டில் கன்னம் வைக்க கூடாது- என்று சல்லியர் நினைத்தார்)

இதற்கு அவன் தருமரிடம் உனது நாட்டை எனக்கு கொடுத்துடு அண்ணா என்று கேட்டு இருக்கலாமே? கிடைத்து இருக்கும்.
துரியோதனன் தன்னம்பிக்கை இல்லாதவன், தனிமனித ஒழுக்கம் இல்லாதவன், தன்மானம் இல்லாதவன். இது மூன்றும் இல்லாதவன்  உத்தமனாக எப்படி இருக்க முடியும்.

பெற்றோர் பேச்சை கேட்கவில்லை, பெரியோரை மதிக்கவில்லை, கடவுள்(கண்ணன் என்னும் கடவுள் கண் முன்னே இருந்தும்) நம்பிக்கை இல்லை.

நல்ல நண்பனுக்கு உதாரணம் துரியோதனன் என்பார்கள்.  கர்ணன் கூடவே இரவு பகலாக இருந்ததால் மனைவிக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை கூட ஒதுக்காமல் மனைவியை தவிக்க வைத்தவன். அதனால் அவன் மனைவி வசிய மருந்து வைத்தால். (கழுத்து வலி போயி திருகு வலி வந்தது அது வேறுகதை) கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இருந்தது நல்ல நட்பு தானா?

அவன் நல்ல கணவனும் இல்லை நல்ல கணவனாக இருக்க முடியாதவன் நல்ல தந்தையாகவும் இருக்க முடியாது.

துரியோதன் ஒருவனாலேயே துச்சாதனன் பாவி ஆனான். அவன் நல்ல வழியில் போக சொல்லி இருந்தால் துச்சாதனன் போயிருப்பான். அவன் நல்ல அண்ணனும் இல்லை.

துரியாதோனன் பாண்டவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவருக்கும் நல்லவன்தான். அவன் உத்தமன் என்பதில் சந்தேகம் இல்லை என்று பதில் அளித்து  துரியோதனை துக்கிப் பிடிப்பது சரியல்ல.

கலங்கம் இருந்தால் என்ன அதுக்கும் நிலன்னுதான் பேரு (முதல் மரியாதை -வைரமுத்து). தேய்ந்து வளரும் நிலவுக்கு அது பொறுந்தும். தேயாத சூரியனுக்கு கலங்கம் கூடாது. கலங்கம் இருந்தால் அது சூரியன் இல்லை. உத்தம குணம் கலங்கம் இல்லாதது, சூரியன் போன்றது. அதனால்தால் உத்தமர்கள்   தன்னையும் வெளிச்ச படுத்துகிறார்கள் உலகத்தையும் விடியவைக்கிறார்கள்.

நன்றி!

வாழ்க வளமுடன்