Reply – Re: கர்ணன் பெண்களைப் பற்றி ஏன் அவதூறாகக் பேசினான்?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: கர்ணன் பெண்களைப் பற்றி ஏன் அவதூறாகக் பேசினான்?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நண்பரே,

நீண்ட நாளுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்

வந்ததும் அருமையான ஒரு பதிவைத் தந்திருக்கிறீர்கள்

நன்றி.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்


2013/11/23 R.MANIKKAVEL [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>
ஓம் ஸ்ரீ முருகன் துணை  

 அவமதித்தல் என்பது கொலைக்கு சமானம்.அதுவும் நடை பிணம் ஆக்குவதற்கு சமம்.   அதனால்தான்  மன்னர்கள் போர் புரியும் போது கொலை செய்வதைவிட அவமானம் செய்வதையே விரும்பி இருக்கின்றனர். எதிரி மன்னனின் பல்லை பிடுங்கி கோட்டை வாசலில் வைப்பது எதிரியின் கிரிடத்தை தனது காலீல் வீர கழலாய் அணிவது எல்லாம் அவமானம் செய்யவே!

பெண் அவமானம் அடையும்  போது தனது குடும்ப மானம் போனதாக துயரம் அடைகிறாள். இது வரை கட்டிக் காத்த பாரம் பரியம் அழிந்ததாக நினைக்கிறாள். பெண் ஈன்று   புறம் தரும் தன்மையால் தனது பெண்மையின் மகத்துவத்தை புறத்தில் படரவிட்டு பேணி வளர்க்கிறாள் குடும்பமாக  குழந்தையாக, அதனால் தான் அவளால் மலம் பூசிக்கொண்டு வரும் தனது குழந்தையை அள்ளி கொஞ்ச முடிகிறது. காரணம் அவள் அகம் வெளியில் உள்ளது. குடும்பம் வேறு அவள் வேறு அல்ல.

ஆண் தான் அவமதிக்க படும் போது தன் அகம் நொறுங்குவதை உணர்கிறான்.தன் புறம் சரியாக இருப்பதாகவே நினைக்கிறான்.  புறம் ஆறும் தன்மையுடையது அகம் ஆறும் தன்மை உடையது இல்லை.  புலன் கடந்த முனிகளுக்கும் அது சாத்தியம் இல்லை.

கர்ணன் தன்னை ஆற்றில் விட்ட தாய் அரச வம்சத்தை உடையவள் என்பதை உணர அடையாளம் இருக்கு. எனவே அவள் முடியாமல் தன்னை விடவில்லை வேண்டும் என்றே தன்னை இந்த அவமானத்தில் விட்டு விட்டதாக அவன் ஆண் குணம் நினைக்கிறது. தன்னை விட்டதால் வேறு ஒரு கணவனுக்கு மனைவியாக இருப்பாள் என்று நினைக்கிறான். அவன் பார்வையில் தாய் ஒழுக்கம் கெட்டவள். எங்கு அவன் நல்லதை கற்கவேண்டுமோ அங்கேயே கெட்டதை கற்று கொண்டுவிட்டான்.

வீரத்திற்கு முதலிடம் தரும் இடமாகிய திரௌபதையின்   சுயம் வரம் மண்டபம் கர்ணனுக்கு பிறப்பை பற்றி பேசும் இடமாக அமைந்து விட்டது. பிறப்பு பெண்ணால் வருவது. அதை பற்றி பெண்ணே பேசி அவமதிக்கிறாள்.

பெண்ணால் அகம் உடையும் கர்ணன் அதை பெண்ணின் மீது எறிகிறான். பெண்ணை அவதுறாக பேசுகிறான். பெண்ணின் வல்லமை கண்டு பின்னால் பல நாள் வருந்துகிறான்    
நன்றி! வணக்கம்

வாழ்க வளமுடன்



If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp4p139.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML