pandavarkalin pillaikalil muthavan draupadi petra pillaya allathu subathirai petra abimayu va

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

pandavarkalin pillaikalil muthavan draupadi petra pillaya allathu subathirai petra abimayu va

sasikala
pandavarkalin pillaikalil muthavan draupadi petra pillaya allathu subathirai petra abimayu va  
etharkaka abimayuvirku muthalil thirumanam nadakirathu.mahabharathathil mikavum pava patta pen draupadi anal aval varisu illamal subathirayin varisuku mukiyathum alika patu ullathu. ivalavu kasdankalai anupavitha draupadiku per solla oru pillai illamal ponathu anal krishnarin thankai enbathal aval perapillaiku allava aatchi urimai kidaithu ullathu. draupadi apdi ena pavam seithal urankum poluthu tan puthalvarkalai pari kudukum alavirku  
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: pandavarkalin pillaikalil muthavan draupadi petra pillaya allathu subathirai petra abimayu va

தாமரை
Administrator
This post was updated on .
திரௌபதிக்கும் தருமனுக்கும் பிறந்த பிரதிவிந்தியனே அனைவரிலும் மூத்தவன் எனலாம். ஆனால் அவனினும் மூத்தவர்கள் இருவர் உண்டு. முதலாமவன் கர்ணனின் மூத்த மகன் விருஷகேது. இரண்டாமவன் பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்த கடோத்கஜன். கர்ணனின் மகன் என்றாலும், விருஷகேதுவின் தாய் சூத குலத்தைச் சேர்ந்தவள். அதனால் விருஷகேது இந்திரப்ரஸ்தத்திற்கு மட்டுமே அரசனாக்கப்படுகிறான். கடோத்கஜனின் தாய் இராட்சச குலத்தைச் சேர்ந்த இடும்பி. அதனால் அவனும் பதவிக்குரியவனாக கருதப்படவில்லை.

பிரதிவிந்தியன்(யுதிஷ்டிரன்) சதானிகன் ( நகுலன்) சுதசோமன் (பீமன்) சுருதசேனன் (சகாதேவன்) சுருதகர்மன் (அர்ச்சுனன்) என்பது திரௌபதியின் பிள்ளைகள் வரிசையாகும்.



சரி கதைக்கு வருவோம். பாரதப் போரின் இறுதியில் மிஞ்சிய மாவீரர்கள்

பாண்டவர் ஐவர். சாத்யகி, யுயுத்சு, கிருஷ்ணன் - பாண்டவர் பக்கத்தில்
அஸ்வத்தாமன். கிருபர், கிருதவர்மன் - கௌரவர் பக்கத்தில்

இதில் ஷத்ரிய வம்ச என்று பார்த்தால் யாதவர்களும் (இவர்களும் பின்னால் பேரழிவுக்கு ஆளானவர்கள்) பாண்டவர்களும்.

ஆக ஒரு ஷத்ரியர் கூட எஞ்சாமல் யுக முடிவிற்கு வித்திடுகிறது மஹாபாரதப் போர்.  பரீட்சித்தும் இறந்தே பிறக்கிறான். பின்னரே கிருஷ்ணனால் உயிரூட்டப்படுகிறான்.

ஆக புதுயுக மன்னனான பரீக்ஷித்தும் துவாபார யுகத்தில் மரித்தவனே...

அர்ச்சுனனின் மகங்களில் மூத்தவன் அபிமன்யூ என்பதால் உத்தரையின் திருமணம் அபிமன்யுவுடன் நடக்கிறது.

அபிமன்யூ பலராமனின் மகள் சசிரேகாவை மணந்ததாகவும் ஒரு கதை உண்டு. அதை வைத்தே மாயாபஜார் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

உபபாண்டவர்களுக்கும் மணம் நடந்திருக்கலாம். அவற்றைப் பற்றிய நாடோடிக்கதைகள் உண்டு.

பாரதப் போர் நடந்த போது பிரதிவிந்தியனின் வயது 24. அபிமன்யுவின் வயது 16.


யயுதேயர்கள் தர்மனின்   வழி வந்தவர்கள் என்றும், மாளவர்கள் பீமனின் வழிவந்தவர்கள் என்றும் சிலர் சொல்வதுண்டு. அர்ச்சுனனின் வழி வந்தவர்கள் அர்ச்சுனாயினர்கள் எனவும் சொல்லப்பட்டனர்.

அர்ச்சுனனின் இன்னொரு வாரிசு பப்புருவாஹனன் மணிப்பூரை ஆண்டான்.

பல்லவர்கள் அஸ்வத்தாமனின் வழி வந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

திரௌபதி அழிவிற்கெனவே உற்பத்தி ஆனவள் என்று சொல்வதுண்டு.

“ஜம்புல் அக்யான்” என்ற மகாராஷ்டிர நாடகத்தில்ஒரு குறிப்பு வருகிறது.

 அந்த நாடகத்தின் படி, ஒரு நாள் இரவு காட்டில் ஒரு குகை பார்த்து தூங்கி கொண்டிருந்த போது, யுதிஷ்டிரன் எழுந்து சென்று தூங்கி கொண்டிருந்த திரௌபதி பாதங்களை வணங்குவதை அர்ஜுனனும், பீமனும் காண்கின்றனர். அவர்கள் விளக்கம் கேட்டனர். இன்று இரவு தூங்க வேண்டாம் என சொல்லி முழித்திருக்க சொன்னான்.

அன்று இரவு அவர்கள் குகைக்கு வெளியே சிந்தூர சிவப்பில் ஓர் ஆலமரம் எழுவதை கண்டனர். அதன் கீழ் 9 லட்சம் பக்தர்கள், தேவியை தொழுது நின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கிறார் போல் திரௌபதி அவர்கள் முன் தோன்றினாள். அவளை ஒரு தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து மலர்கள் தூவினர்.

அப்போது தான் திரௌபதி சாதாரண பெண் அல்ல என்பதை பாண்டவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

திரௌபதி விஷ்ணுவின் சகோதரியான தேவியின் அவதாரம் என்றும் கிருஷ்ணனுக்கு துவாபார யுகம் முடித்து அதில் தர்மம் மறந்து போன அத்தனை ஷத்ரியர்களையும் முடித்து கலியுகம் தொடங்க உதவ வந்தவள் என்றும் சொல்வதுண்டு.  

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: pandavarkalin pillaikalil muthavan draupadi petra pillaya allathu subathirai petra abimayu va

தாமரை
Administrator
In reply to this post by sasikala
திரவுபதியின் கோணத்தில் இருந்து பார்த்தால் அவளுக்கு நேர்ந்த கொடுமை மட்டுமே தெரியும். ஆனால் நாம் வேறு கோணத்தில் இருந்து பார்க்கலாம்.

பாஞ்சாலர்கள் மற்றும் குருவம்சம் இருவருக்கும் இடையே பூசல். குருவமிசத்தின் அழிவையே பாஞ்சாலம் விரும்பியது.

இன்னொரு பக்கம் யாதவர்களுக்கும் மஹாபாரதப் போருக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் இரு புறமும் உதவி கேட்கப்பட யாதவர்களின் படை இருபுறமும் இணைந்து சண்டையிட்டது,பின்னர் காந்தாரியின் சாபத்தினால் யாதவ வமிசமே அழிந்தது.

யயாதியின் வாரிசுகளே யது வம்சமும் புரு வம்சமும்.யுக முடிவுக்கு ஆரம்பமும் இவ்விரு வம்சங்களே. முழுமையாக அழிந்ததும் இவ்விரு வம்சங்களே. ஆக இவ்விரு வம்ச இரத்தமும் கலந்த பரீட்சித்து புதுயுக தலைவனாக வருவதே பொருத்தமாக இருக்குமல்லவா?