WHO IS ARJUNAN?

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

WHO IS ARJUNAN?

SALWIN
I NEED GOOD OF ARJUNAN..
WHAT HE DID FOR WORLD?
WHAT IS GOOD HABBITS?
WHAT IS DIFFERENT BETWEEN ARJUNAN AND KARNAN?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: WHO IS ARJUNAN?

Arul Selva Perarasan
Administrator
பயிற்சி ஒரு மனிதனை எந்த நிலைக்கு இட்டுச் செல்லும், விடாமுயற்சி எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், உண்மையான களங்கமில்லாத அன்பு எப்படிப் பட்ட நட்புகளை ஏற்படுத்தும் என்பதற்குச் சிறந்த  உதாரணமாக அர்ஜுனன் வாழ்ந்து காட்டினான். அதுவே அவனது நல்ல பழக்கங்களும் கூட.. மேலும் பாரதத்தை மீண்டும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்ததில் அவனது பங்கு அளப்பரியது. பாரதம் முழுவதுமான பண்பாட்டு ஒற்றுமையிலும் அவனது பங்கு நிச்சயம் இருக்க வேண்டும்.

கர்ணனும் நல்லவனே... ஆனால் பொறாமை, அலட்சியம், கூடா நட்பு ஆகியவை ஒரு மனிதனுக்கு என்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதற்கு உதாரணமாக அவன் திகழ்ந்திருக்கிறான்.


On Sun, Mar 5, 2017 at 2:50 PM, SALWIN [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]> wrote:
I NEED GOOD OF ARJUNAN..
WHAT HE DID FOR WORLD?
WHAT IS GOOD HABBITS?
WHAT IS DIFFERENT BETWEEN ARJUNAN AND KARNAN?



If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/WHO-IS-ARJUNAN-tp854.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: WHO IS ARJUNAN?

தாமரை
Administrator
In reply to this post by SALWIN
அர்ச்சுனன் உலகிற்கு என்ன செய்தான்?

காலங்களைத் தாண்டி நிற்கும் தர்மங்களை கொடுத்தது மஹாபாரதம் என்று சொன்னால் அதில் அர்ச்சுனனின் பங்கு அளப்பரியது. பகவத் கீதை என்னும் மாபெரும் பொக்கிஷத்தை பெற்றுத் தந்தவனே அர்ச்சுனன்.

அர்ச்சுனனின் நற்பழக்கங்கள் என்ன?

ஒரு மாவீரன், மாபெரும் திறமைசாலி என்றாலும் எதையும் அலட்சியம் செய்யாமல் அனாவசியமாக எண்ணாமல் உரிய மரியாதை கொடுத்தவன் அர்ச்சுனன்.

தனது வாழ்க்கையை ஒரு பாடமாக உலகிற்கு விட்டுச் சென்றிருக்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனன் மூத்தோருக்குக் காட்டிய மரியாதை அவனது மிகச் சிறந்த குணமாகும். இன்னும் பலகுணங்கள் இருந்தாலும் அர்ச்சுனனை தனிப்படுத்தி அடையாளப்படுத்துவது இக்குணம்.

கர்ணனுக்கும் - அர்ச்சுனனுக்கும் என்ன வித்தியாசம்?

கர்ணன் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதி. புரட்சியாளன். அவன் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் முனைப்பானவன்.  இந்தக் குணங்கள் இல்லாதிருந்தால் அவனால் தேரோட்ட மட்டுமே முடிந்திருக்கும்.

அர்ச்சுனன் அப்படி அல்ல, இராஜ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் அவனுக்குத் தடைகள் குறைவு. அதனால் அவனால் சாத்வீகம் பயில முடிந்தது. நினைத்ததை அடைய உரிமை இருந்தது.

அதிரதன் கையில் கிட்டாமல் ஒரு அரசன் கையில் கிட்டி இருந்தால், முக்கியமாக பாஞ்சால மன்னன் துருபதன் கையில் கர்ணன் சேர்ந்திருந்தால் மஹாபாரதத்தின் போக்கே மாறி இருக்கும்.

அண்ணன் தம்பிகளின் சண்டையாக இல்லாமல் துரியோதனனும் பீமனும் அர்ச்சுனனும் கர்ணனின் கையால் மடிந்திருப்பார்கள்..