Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

நம்பி
நல்ல விவாதம்...

ஒரு சிறு சந்தேகம் இங்கு (கால அட்டவணை பற்றி)....

தர்மர் 46 வயதில் பட்டம்சூட்டப்பட்டார், இந்திரப்பிரஸ்த நகரம் அன்றே இருந்தது...பிறகு ஏன், 16 வருடம் ஆண்டதாக மட்டும் கணக்கு? மொத்தமாக 30-31 வருடங்கள் இல்லையா? ஏன் மயசபைக்கு பின் மட்டும்? விளக்கம் பெற்றால் மகிழ்ச்சி...

நன்றி..
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

நம்பி
நெறியாளர் மன்னிக்கவும், ஏன் இது தனி விவாதமாக அட்டவணை படுத்தப்பட்டதென, நான் "Reply" மட்டுமே உபயோகித்தேன்...
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

தாமரை
Administrator
In reply to this post by நம்பி
காண்டவப்பிரஸ்தம் தான் தர்மன் ஆண்ட பகுதி. தர்மன் பட்டாபிஷேகம் நடந்து 46 ஆம் வயதில். அது பிங்கள வருடம்.

அதன்பிறகு அடுத்த வருடம் 12 ஆண்டுகால தீர்த்த யாத்திரை சென்றான் அர்ச்சுனன். (12+1 = 13)

மயன் இந்திரபிரஸ்த நகரத்தை அமைக்க எடுத்துக் கொண்ட காலம் 1 ஆண்டு. ஆக முதல் பதினான்கு ஆண்டுகள் இந்திரப்பிரஸ்த நகரம் கிடையாது. அதன் பின்னரே யுதிஷ்டிரன் இந்திரப்பிரஸ்த மன்னனான். அதுவரை அது காண்டவப்பிரஸ்தம்.

எனவே தர்மன் காண்டவப் பிரஸ்தம் ஆண்டது 14 ஆண்டுகள். இந்திரப்பிரஸ்தம் ஆண்டது 16 ஆண்டுகள். ஆக மொத்தம் 30.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

தாமரை
Administrator
In reply to this post by நம்பி
விவாதங்களின் ஆழங்களில் பல அரிய தகவல்கள் புதைந்து போவது உண்டு. இந்தக் கால அட்டவணை மிக முக்கிய ஒன்று என்பதால் இதை நான்தான் தனிப்பட்ட விவாதமாக்கினேன். வஞ்சகன் கண்ணனா கர்ணனா திரியைப் படிக்க அதில் பதில் அளிக்கும் எனக்கே தலை சுற்றுகிறது.

அதனால் முக்கிய விஷயங்கள் எளிதில் அணுகப்படவேண்டியதாய் இருக்கட்டும் என தனித்திரி ஆக்கினேன்.  
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?

நம்பி
மிக்க நன்றி விளக்கத்திற்க்கு...

தனித்திரி யோசனை சரியானதே..ஒரு வேளை தவறாக நானேதும் செய்துவிட்டேனா என்று அஞ்சி, அந்த கேள்வியெழுப்பினேன்...