Re: கடிதங்கள்

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கடிதங்கள்

	HARIKRISHNAN.R
        VANAKKAM NANBARE!...
DRAUPADI AMMAN ENGAL KULA DEIVAM. MIGA PALAMAYANA KOVIL. NAAN 9TH PADIKKUM PODU THAAN ENAKKU NINAIVU THERINDU TIRU VIZHA NADATHA PATTADU... ADU ENGAL SONDA KOVIL ENBADAL NANGAL CHENNAIYILIRUNDU 1 MAADAM MUNBE VIZHA VELAIGALAI SEIYA KILAMBINOM... 18 NAAL BARATHA SORPOZHIVU NADAI PETRA BODU THAAN EN SEVIGALIL BARATHAM PAAYA AARAMBITHADU.. ENAKU IPA 20 VAYADU TAAN AAGIRADU AANAL EN MUNNORGAL PATRIYA THAGAVALGALAI EN THAAI MOZHI TAMIL IL MULUVADUM SUVAIKA VIRUMBUGIREN .. DAYAVU SEIDU MULU MAHABARATHATHAYUM TAMIL IL MOZHI PEYARCHI SEITHU EN MINNANJAL MUGAVARIKKU ANUPPINAL ADAI PRINT SEIDU EN VAALKAI POKKISHAMAGA PAADUKAPEN AND SURELY I\'LL PUBLISH IT TO MY SORROUNDING ALSO(NOTE: I HAVE ALREADY READS RAJAJI\'S VYASAR VIRUNDU SO EN MUNNORGALIN KADAYAI PATRI NAAN ARIYA ENAKU UDAVUNGAL )
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கடிதங்கள்

Selvaraj
வணக்கம் ஐயா,

வாழ்த்துக்கள்!!!!

முதலில் நான் ஒரு கிறி(ஸ்)த்தவன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

உங்கள் புகைப்படத்திற்கும் நீங்கள் செய்து வரும் சேவைக்கும் பொருத்தம் இல்லை.

வயதில் குறைந்து காணப்படும் நீங்கள் “முழு மஹாபாரதம்” என்ற இந்த முயற்சியால் வானளவில் உயர்ந்துவிட்டீர்கள்.

இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், உடல் நலத்தையும், உள்ளத்தில் குறையாத ஆர்வத்தையும், வாழ்வில் நிம்மதியையும், வற்றாத அறிவையும், பொருளாதார வசதியையும் தருவாராக.

நான், படத்துடன் கூடிய பிடிஎப் (PDF) பார்மட்டில் வெளியிட்டுள்ள பதிப்பில் 150ம் பகுதி வரை படித்து குறிப்பெடுத்து வைத்துள்ளேன்.

பொதுவாக இணைய தளங்களில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்வதற்கு சிரமமாக இருக்கும் ஆனால் உங்களது தாராள மனதால் (தன்னலம் கருதாக உழைப்பால்) எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடிந்தது. நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. பொதுவாக நான் யாரையும் அவர்கள் முகத்திற்கு முன்னால் பாராட்டுவதை விரும்பாதவன், ஆனால் உங்கள் பதிவுகளை படித்துவிட்டு பாராட்டாமல் இருந்தால் நன்றி கெட்டவன் ஆகிவிடுவேன்.

உங்களது முயற்சியை தொடருங்கள்....
மகாபாரதத்தில் இன்னும் எத்தனை பகுதிகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்.

மேலும் விரைவாக மகாபாரதத்தை முடித்துவிட்டு, இராமாயாணத்தையும் படிக்க ஆவலாக உள்ளேன். தாங்கள்தான் அதற்கு உதவ வேண்டும்.

இராமாயாணத்தை இதுபோன்று பதிவு செய்யும் எண்ணம் உள்ளதா? அல்லது ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தால் அதன் இணைய தள முகவரியை தாருங்கள்.

அல்லது இதுபோன்று வேறு யாராவது இராமாயாணத்தை எளியமுறையில் படித்துக் கொள்வதற்கு இணையதளம் வடிவமைத்துள்ளார்களா? தெரிந்தால் கொஞ்சம் உதவுங்கள்.

எனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவரிடமும் விசாரித்துவிட்டேன் ஒருவரும் சரியான பதில் கூறவில்லை-அதாவது இராமருடைய சரித்திரம் இராமாயாணம் அதுபோல சிவபெருமானின் திருவிளைாயாடல் அடங்கிய புத்தகத்தின் பெயர் என்ன அது எங்கு கிடைக்கும்? அதுபோல முருகர், விநாயகர் போன்ற தெய்வங்களின் முழுசரித்திரம் அடங்கிய புத்தகம் உள்ளதா? நமக்கு கிடைக்குமா? என்று விசாரித்து பதில் கிடைக்கவில்லை. தாங்கள் தெரிந்தால் உதவுங்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றி ஒவ்வொரு விதமான வரலாறு சொல்கின்றார்கள். அதனால் நானே அந்த வரலாறு-திருவிளையாடல்களை படித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

ரிக், யசூர், சாமம், அதர்வணம் போன்ற வேதங்கள் தமிழல் உள்ளனவா. படிப்பதற்கு கிடைக்குமா? எதிர்காலத்தில் தாங்கள் அதனை தமிழில் வெளியிடும் வாய்ப்பு உள்ளதா? ஆர்வமாக உள்ளேன் படிப்பதற்கு...

எனது கேள்விகள் மூலம் உங்களுக்கு இன்னும் எவ்வளவு வேலைகள் பாக்கி இருக்கிறது என்பது தெரிகிறதா...

உற்சாகமோடு உங்கள் பதிவுகளை வெளியிடுங்கள் படிப்பதற்கு ஆர்வமுள்ள என்னைபோன்ற நண்பர்கள் பலர் காத்திருக்கிறோம்.

உங்களது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்...

உங்களை பாராட்டும் இந்த வேளையில் இதன் மூலபதிப்பை உருவாக்கிய வியாசர், அதை ஜனமேஜயனின் வேள்வியில் எடுத்துரைத்த வைசம்பாயணர் அவர்களின் நினைவுதிறனையும் பாராட்ட (வணங்க) கடமைபட்டுள்ளோம்.

(தவறு இருந்தால் மன்னித்துவிடுங்கள், அதற்காக மனச்சோர்வடைந்துவிடாதீர்கள்)

நன்றி! நன்றி!! நன்றி!!!
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கடிதங்கள்

Arul Selva Perarasan
Administrator
வாழ்த்தியமைக்கும், மேலும் செய்ய வேண்டிய பணிகளை ஞாபகப் படுத்தியமைக்கும் நன்றி நண்பரே.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கடிதங்கள்

Vathana
I was really searching for mahabaratham for a very long time, But I just found this page. I really appreciate your job. I have to let you know something that in the 1st part 3rd chapter (janamejayan thuyaram) i could not read
3ஆ பௌசியனும் உதங்கரும்
3இ ஜனமேஜயன் துயரம்
can you please recheck the links.
Thanks Again,

Vathana
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கடிதங்கள்

Arul Selva Perarasan
Administrator
நண்பரே!

நீங்கள் சுட்டிக்காட்டியவாறே, வலது புறத்தில் இருக்கும் லிங்குகளில் 3 ஆ பௌசியனும் உதங்கரும் மற்றும் 3இ ஜனமேஜயன் துயரம் ஆகிய பதிவுகளுக்கான உரல் நிரலி சரியாக இடப்படவில்லை.

இப்போது அதைத் திருத்திவிட்டேன்.

மேலும், உங்கள் கவனத்திற்கு

3 அ நீதிகேட்ட நாயின் சாபம் பதிவிலேயே, அந்தப் பதிவிற்கு கீழே

என்ற பட்டன்கள் இருக்கும்.

அதில் அடுத்து  என்ற பட்டனைச் சொடுக்கினால் 3 ஆ பௌசியனும் உதங்கரும் பதிவிற்குச் சென்றிருக்காலம்.
அதே போல  3 ஆ பௌசியனும் உதங்கரும் பதிவிற்கு கீழே இருக்கும அதே பட்டன்களில் அடுத்து பட்டனை அழுத்தினால் 3இ ஜனமேஜயன் துயரம் பதிவிற்கு சென்றிருக்கலாம்.

இதை உங்கள் தகவலுக்காகவும், முழு மகாபாரதத்தை எளிமையாகப் படிப்பதற்காகவும் குறிப்பிடுகிறேன்.

இனி நீங்கள் எப்போதும் தொடர்ந்து தடையின்றிப் படிக்கு இப்பட்டன்களையும் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அதனால் தான் என்னால் அதைத் திருத்த முடிந்தது.

இல்லையென்றால் அப்படி ஒரு தவறு இருப்பதே எனக்குத் தெரிந்திருக்காது.

நன்றி, தொடர்ந்து படியுங்கள்.

அன்புடன்
செ.அருட்செல்வப் பேரரசன்