Sir,
Karnan and Bhismar's Guru Parasuramar. One of Parasuramar's son cut his mother's head. Is it both the parasuramar same? Pls. answer |
ஓம் ஸ்ரீமுருகன் துணை
அன்புள்ள நண்பருக்கு வணக்கம்! ஜமதக்னி முனிவருக்கும் அவர் மனைவி ரேணுகாதேவிக்கும் பிறந்தவர் பரசுராமர். நாராயணமூர்த்தியின் முக்கிய 10 அவதாரங்களுல் 6வது அவதாரம் பரசுராமர் அவதாரம். ராமர் என்பது அவர் பெயர். பரசு என்னும் மரம்வெட்டும் கோடாரியை அவர் எப்போதும் தன் உடன் வைத்து இருந்ததால் அவர் பரசுராமர் என அழைக்கப்பட்டார். பிராமணக்குலத்தில் பிறந்தும் பெரும் வீரம் படைத்தவர். யாராலும் வெல்லமுடியாத கார்த்தவீரிய அர்ஜூனனை வென்றவர். ஷத்திரியர்களை அழிப்பதையே தனது கடமையாகக்கொண்டு வாழ்ந்து 21தலைமுறை ஷத்ரியர்களை அழித்தவர். தசரதராமனாகிய ஸ்ரீராமன் முன் தனது பலத்தை இழந்தவர். போர்த் தொழிலைக் கைவிட்டு தவம்மேற்கொண்டார். அதன்பின் அவர் தகுதிவாய்ந்த சீடர்களுக்கு தனுர்வேதம் என்ற வில்வித்தையைக்கற்றுக்கொடுத்தார். அவரின் சீடர்கள் பீஷ்மர். துரோணர்.கர்ணன். அவர் அழியாதவர். இன்றும் இருக்கிறார் என்பது நமது புராணங்களின் கூற்று. விசுவாமித்திரர் ஷத்திரியராக பிறந்து பிரமணராக உயர்ந்தவர். பரசுராமர் பிராமணராக பிறந்து ஷத்திரியராக வாழ்ந்தவர். பிறப்பால் அல்ல நடத்தையால் குலம்மாறும் என்பது இதனால் தெரிகிறது. நன்றி வாழ்க வளமுடன். |
Administrator
|
அருமையான விளக்கம் நண்பரே 2014-04-03 15:39 GMT+05:30 R.MANIKKAVEL [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>: ஓம் ஸ்ரீமுருகன் துணை |
Thanks brother.
But my question is one of a munivar's son had cut his mother's head on the order of his father munivar. Is that same parasuramar (who killed the sathriyar). Pls. answer |
Dear Brother,
Duronar's guru is bharathwagar ! AM i rights? or who is bharathwagar? Then who is the father of Duronar? Pls. clarrify me. Thanks |
ஓம் ஸ்ரீமுருகன் துணை
வணக்கம் சகோதரா! அன்னை கோசலையின் மணிவயிற்றில் தசரத புத்திரனாக தோன்றிய ஸ்ரீராமன், லெட்சுமண, பரத, சத்ருக்கன இளைய தம்பிகள் புடைசூழ வளர்ந்து, ராஜமுனியாகிய ஜனகரின் திருமகளாய் உதித்த அன்னை ஜானகியை வில்லொடித்து மாலைசூடி மணந்தார். ஸ்ரீராமன் சிறியத்தாய் கைகேயியின் வரத்தால் காடு காண சென்று ஜானகியை மாயமான் சூழ்ச்சியால் இராவணன் சிறையெடுக்க தவித்து ஹனுமான் சேவையால் வானரக்கூட்டத்தின் உதவியால் இராவணனை வென்று சீதையை மீட்டு அயோத்தி அடைந்து ராமராஜ்யம் கண்டார். ஸ்ரீராமன் புகழ் சரித்திரம் சொல்லும் ஸ்ரீமத்ராமயணம் எழுதிய முதல்கவி என்று வர்ணிக்கப்படும் ஸ்ரீவால்மிகி முனிவரின் சீடர் பரத்வாஜமுனிவர். ஸ்ரீராமன் வைதேகி இளையபெருமான் ஸ்ரீலெட்சுமணனுடன் வானகம் செல்லும்போது கங்கையைத்தாண்டி பரத்வாஜர் ஆசிரம் சென்று பரத்வாஜருக்கு ஸ்ரீராமன் தரிசனம் கொடுத்தார். 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து ராவணவதம் செய்து அன்னைஜானகியுடன் ஸ்ரீராமன் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் திரும்பும்போது வானத்தில் சென்றுக்கொண்டு இருந்த ஸ்ரீராமனை பரத்வாஜர் கீழ் இறங்கிவந்து தனது ஆசிரமத்தில் உணவு உண்டு செல்லவேண்டும் என்று சொன்னார். ஸ்ரீராமன் புஷ்பக விமானத்தை கீழ் இறக்கி பத்வாஜர் ஆசிரமத்திற்கு வந்தார் 14 ஆண்டுகள் முடிய சில நாழிகை நேரங்களே இருந்தது. 14 ஆண்டு முடிந்ததும் தாங்கள் வராமல் ஒருநாழிகை நேரம் ஆனாலும் தாங்கள் வரவில்லை என்று நினைத்து தீயில் விழுந்து உயிர் துறப்பேன் என்று பரதன் முன்னமே சொல்லி உள்ளான் எனவே அவன் அக்கினி வளர்த்து தீயில் விழ தயாராக உள்ளான். அங்கு அயோத்தியின் நந்திகிராமத்தில் தம்பி உயிர் துறக்க உள்ளான். ஸ்ரீராமன் ஆசிரமத்தில் பரத்வாஜரின் விருந்து உண்ண உள்ளான். எனவே ஸ்ரீராமன் ஹனுமனை வான்மார்க்கமாக பறந்து முன்னே சென்று ஸ்ரீராமன் வருகின்றார் என்று பரதனிடம் சொல்ல சொன்னார். ஹனுமான் பரதன் தீயில் இறங்கும் நேரத்தில் சரியாக சென்று “ராம்..ராம்..ஸ்ரீராம்” என்று கூறி தட்டு ஸ்ரீராமன் கொடுத்த கனையாழியைக் காட்டி பரதனைக்காத்தார். இந்த உயிர்ப்போகும் நிலையிலும் ஸ்ரீராமன் முனிவரின் வார்த்தையை மீறக்கூடாது என்று இருந்ததால் ரகுராமன், ஸ்ரீராமன், ஜானகிராமன், கோசலைரான், தசரதராமன், பட்டாபிராமன்,கோதண்டராமன் என்ற பெயருடன் ஸ்ரீராமனுக்கு சாப்பாட்டு ராமன் என்று ஒரு பெயரும் சேர்ந்துக்கொண்டது. இந்த பெயர் ஸ்ரீராமனுக்கு வர காரணமானவர் பரத்வாஜமுனிவர். உங்கள் கேள்வியால் ஸ்ரீராமன் புகழ்பாடும் சிறு வாய்ப்பு இன்று. ஸ்ரீராமநவமி திருவிழா நடக்கும் இன்னாளில் சொல்வதும் மனநிறைவு. உங்கள் கேள்விக்கு வருகின்றேன். ராமயணத்தில் வரும் இந்த பரத்வாஜர்தான் துரோணரின் தந்தை. துரோணரின் குரு பரசுராமர். பரசுராமர் முன்பதிவில் சொன்ன ஜமதக்கினி முனிவரின் மகன். ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. பரசுராமரின் தாய். ரேணுகா ஒருநாள் நதிக்கு நீர் எடுக்க சென்றார். நீர் எடுக்க செல்லும்போது அவர்கள் நம்போல் குடம் எடுத்துப்போவதில்லை. நதியின் கரையில் உள்ள மணலை அள்ளி குடத்தை மனதில் நினைத்தால் குடம்வந்துவிடும் அந்த குடத்தில் நீர் எடுத்து வந்து முனிவருக்கு பூஜைசெய்ய கொடுப்பார். ஒருநாள் அவர்கள் ஆற்றுக்கு நீர் எடுக்க சென்று குடத்திற்காக மணலை அள்ளி குடத்திற்காக குவிக்கையில் நதியில் வானத்தில் பரந்து செல்லும் கந்தர்வன் உருவம் தண்ணீரில் தெரிந்தது ஆ..இவ்வளவு அழகா என்று ரேணுகா நினைக்க மனம் மாசுப்பட்டது. மண் குடமாக வில்லை. குடம் இல்லாததால் ரேணுகா தண்ணீர் எடுக்காமல் தனது குடிலுக்கு திரும்பினார். ஜமத்கினி முனிவருக்கு என்ன நடந்தது என்று தெரிந்துவிட்டது. மனம் மாசுப்பட்டுவிட்டாள் உனது தாய் அவளை வெட்டுங்கள் என்று மூத்தப்பிள்ளைகளிடம் சொன்னார் அவர்கள் அன்னையின் பாசத்தால் தந்தையின் சொல்லைக் கேட்கவில்லை. முனிவர் கோபத்தில் தனது பிள்ளைகளை பேய்களாக மாற சாபம் இட்டார். காட்டில் விறகு சேர்க்க சென்ற பரசுராமர் திரும்பி வந்ததும். நடந்ததை சொல்லி தாயின் தலையை வெட்டு என்று தந்தை சொல்லவும். பரசுராமர் மறுப்பேச்சி இல்லாமல் தாயின் தலையை வெட்டினார். முனிவர் பரசுராமனின் தந்தை சொல் மீறாத தைரியத்தைப் பார்த்து மனம் மகிழ்ந்து என்ன வரம்வேண்டும் என்றாலும் கேட்கசொன்னார். பரசுராமர் தாயிக்கு உயிர்வேண்டும் என்றுக்கேட்டார். சகோதரர்கள் பழையபடி நலமாகவேண்டும் என்று கேட்டார். முனிவர் இருவரமும் தந்தார். வெட்டியத்தலையை ஒட்டியதும் ரேணுகா உயிர்ப்பெற்றார். பரசுராமரின் அன்னை ஸ்ரீரேணுகாபரமேஸ்வரியாக இன்றும் வணங்கப்படுகின்றார். இந்தக் கதையில் ஐந்து நீதி உள்ளது. 1) மனம் சஞ்சலப்பட்டால் செய்யும் செயலை சரியாக செய்யமுடியாது. அது அறிந்த பலதரம் செய்து பழக்கப்பட்ட தொழிலாக இருந்தாலும். 2) தந்தை சொல் கேட்காத பிள்ளைகள் உடல்நலத்தையும், வாழ்க்கை சிறப்பையும் இழக்கிறார்கள். 3) தர்மம் அறிந்த இறைவணக்கம் உடைய தந்தை பாசமிக்க அன்புக்குறிய ஒருவரை அவரின் தவறுக்காக தண்டிக்கச் சொன்னால், பாசத்தில் மயங்காமல் தண்டிப்பவருக்கும், தண்டனைப்பெற்றவருக்கும் தந்தையின் கருணையால் மீண்டும் நல்லுயிரும் தெய்வீக கடாச்சமும் கிடைக்கும். 4) தவறுக்கள் தண்டிக்கப்படவேண்டியது முக்கியம். தவறுகள் திருத்தப்பட்டால்தான் நன்மை உண்டாகும், புகழ் உண்டாகும். 5) தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை, வாழ்க்கையும் இல்லை. அதற்கு தந்தையும் தவம் உடையவராக இருக்கவேண்டும். பரசுராமன் அவதாரத்தில் மட்டும் இல்லை, தந்தைச்சொல் கேட்டதிலும் ஸ்ரீராமனுக்கு மூத்தவர். நன்றி வாழ்க வளமுடன். |
In reply to this post by Balakrishnan பாலகிருணன்
Yes. Both are Same
|
Administrator
|
பரசுராமருக்கும் விஷ்வாமித்திரருக்கும் இன்னொரு தொடர்பும் உண்டு.
அம்வசு வம்சத்தினரான குசும்பா என்ற நாட்டை சேர்ந்தவர் புருவன் என்ற மன்னன். அவருக்கு காதி என்ற மகன் இருந்தார். குசும்பா மன்னனுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. அவர்களின் வம்சத்தில் சிலர் ரிஷி முனிவர்களாக இருந்தார்கள். காத்தியும் ஒரு முனிவர் என்பதினால் ஒரு காட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சத்யாவதி என்பது. அவள் நல்ல அழகும் நற்பண்புகளும் பெற்றவளாக இருந்தாள். அதே காட்டில் பிருகு முனிவரும் இருந்தார். அவருக்கு ரீக்கா என்ற மகன் இருந்தார். ரீக்கா என்ற அந்த மகன் சத்யாவதி மீது ஆசைக் கொண்டு அவளை மணக்க விரும்பினார். சாதாரணமாக திருமணம் நடந்தால் பெண் வீட்டினர்தான் மாப்பிள்ளை வீட்டினருக்கு நிறைய சீதனம் தருவார்கள். ஆனால் அதற்கு மாறாக பிருகு முனிவரின் மகனான ரீக்காவோ ஒரு பக்கம் காது கருப்பாக இருந்த ஆயிரம் குதிரைகளை சீதனமாக தந்து சத்யாவதியை மணந்து கொண்டார். திருமணம் நடந்து முடிந்து சில காலம் ஆகியது. சத்யவதி கர்பமுற்றாள். அதைக் கண்ட சத்யாவதியின் தாயாருக்கு தானும் கர்பவதி ஆகி ஒரு குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவளும் கர்ப்பம் அடைந்தாள். தனது ஆசையை சத்யாவதிக்கும் கூறி இருந்தாள். சத்யாவதிக்கு திருமணம் ஆகி சில காலம் பொறுத்து அங்கு வந்த பிருகு முனிவரிடம் தனது தாயாரின் ஆசையும் கூறி இருவருக்கும் நல்ல குழந்தைப் பிறக்க அவருடைய அருள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் . அதைக் கேட்டு மகிழ்ந்த மாமனாரும் இரண்டு பாத்திரங்களில் சிறிது பாயசத்தை ஊற்றி அதை அவளிடம் தந்து விட்டுக் கூறினார் 'இதில் 1 என எழுதி உள்ள பாத்திரம் உனக்கு. 2 என எழுதி உள்ள பாத்திரம் உன் தாயாருக்கு. உங்கள் இருவருக்கும் நல்லபடியாக நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அதற்கேற்ற மந்திரத்தை ஓதி வைத்து உள்ளேன். இதை நாளை குளித்து விட்டு நீயும் உன் தாயாரும் சாப்பிட வேண்டும். ஆனால் ஒன்றை கவனமாகக் கேட்டுக் கொள். பாத்திரத்தை மாற்றி விடாதே. அதில் கவனமாக இரு'. சத்யாவதியும் தன் தாயாரிடம் சென்று அதைக் கூறினாள் . மறு நாள் காலை சத்யாவதி எழுந்திருக்கும் முன்பே அவளுடைய தாயார் எழுந்து விட்டாள். பாயசத்தைக் குடிக்க பாத்திரத்தை எடுத்தவளின் மனதில் சிறு சலனம். பிருகு முனிவர் தனது மருமகளுக்கு தனக்கு பிறக்க உள்ள குழந்தையை விட அதிக அழகான, அறிவுள்ள பிள்ளை பிறக்க வைக்க மந்திரம் ஓதி இருப்பாரோ என நினைத்தாள் . ஆகவே சற்றும் யோசனை செய்யாமல் தனது மகளுக்கு வைத்து இருந்த பாத்திரத்தில் இருந்த பாயசத்தை எடுத்துக் குடித்து விட்டாள். அதன்பின் குளித்துவிட்டு வந்த சத்யாவாதி தன்னுடைய தாயார் தனக்கு வைத்திருந்த பாத்திரத்தில் இருந்த பாயசத்தைக் குடித்து விட்டாளே எனப் பதறியவாறு அவளிடம் அது பற்றிக் கேட்டதற்கு தான் தவறுதலாக அதை மாற்றிக் குடித்து விட்டேன் என அவளுடைய தாயார் கூறி விட்டாள். ஆகவே வேறு வழி இன்றி இன்னொரு பாத்திரத்தில் இருந்த பாயசத்தை சத்யாவதி குடித்தாள். மறுநாள் அங்கு வந்த பிருகு முனிவரிடம் சத்யாவதி நடந்ததைக் கூறி அழுதாள். அவரும் அதைக் கேட்டு வருந்தினார். நடக்கக் கூடாதது நடந்து விட்டது. ஆனால் என்ன செய்ய முடியும், சரி நடப்பது நடக்கட்டும் என கூறி விட்டு சத்யாவதிக்கு பிறக்க இருந்த குழந்தையின் குணங்கள் அவளது பேரனுக்கு போகட்டும் என்று ஆசிர்வதித்து விட்டு சென்று விட்டார். சில நாட்களில் மகளும் தாயாரும் இரண்டு குழந்தைகளை பெற்று எடுத்தார்கள். சத்யாவதிக்கு ஜமதக்னி முனிவரும் அவளுடைய தாயாருக்கு விஸ்வாமித்திரரும் பிறந்தார்கள். அதனால்தான் சாத்வீக குணம் கொண்ட சத்யாவதிக்கு அவளுடைய சாந்த குணத்தைக் கொண்ட ஜமதக்னி பிறந்தார். ஜமதக்னி முனிவர் வளர்ந்து பெரியவர் ஆனார். காலாகாலத்தில் அவருக்கும் ரேணுகா தேவிக்கும் திருமணம் நடந்தது. ரேணுகா தேவி ஒரு முனிவரின் பெண்ணாக காட்சி தந்தார். அவர்களுக்கு சில குழந்தைகள் பிறந்தன. அதில் பரசுராமரும் ஒருவர். பிறந்த குழந்தைகளில் முதல்வர் பரசுராமர். பேரனுக்குப் போகவேண்டிய ஷத்ரிய குணம் பரசுராமனுக்கு வந்தது. விசுவாமித்திரர் பிரம்மரிஷி ஆனார். |
Free forum by Nabble | Edit this page |