KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES

classic Classic list List threaded Threaded
9 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES

YUGATHIS
Dear sir,

kindly give KARMA VS VITHI EXPLAINATION AND EXAMPLES
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES

தாமரை
Administrator
This post was updated on .
 விதி என்பது இன்புட்.
 கர்மா என்பது அவுட்புட்.
 பிறவி என்பது
 இவை
 இரண்டும் இணைக்கப்பட்ட
 ஃபீட்பேக் பிராஸஸ்.



Reply | Threaded
Open this post in threaded view
|

Re: KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES

தாமரை
Administrator
This post was updated on .
இடுக்கண் வருங்கால்  நகுக.

காரணம் இருக்கிறது. சென்ற பிறவியின் அவுட் புட்டான கர்மங்கள் இந்தப் பிறவியின் விதியாக அமைகின்றன.

ஒரு துன்பம் வருகின்றது என்றால், அது ஒரு தீய கர்மத்தினால் விளைந்த விதி என உணர்க. ஆக ஒரு துன்பத்தை அனுபவிப்பதன் மூலம் ஒரு தீய கர்மத்தைத் தொலைக்கிறோம். அதற்கு நாம் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்?

பல பக்தர்கள் இப்பிறவியில் பலப்பல துன்பங்கள் அனுபவிக்கக் காரணம் அவர்களின் தீயகர்மங்கள் விரைவில் தொலையவே என்பதைச் சிந்தித்தோமானால், பக்தியினால் ஒருவன் விரைவில் இறைவனை அடைவதை காணலாம்.

அதே சமயம் தீயவர்களின் நற்கருமங்கள் விரைவில் தீர்ந்தாலே அவர்கள் தீய கருமங்களுக்கான பலனை முழுதாகப் பெற முடியும். ஆக தீயவர்கள் சுகிப்பது தம் நற்கருமங்களை விரையமாக்கவே....

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் எண்ணப் படும்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் - நற்கருமங்களைத் தொலைக்கும். தூக்கி எறியப்போகின்ற சட்டையில் விலையுயர்ந்த பொத்தான்கள் பதிக்கப்பட்டிருந்தால் எடுத்து வைப்பதைப் போல..

செவ்வியான் கேடு - சற்றே அடிபட்ட பழத்தில் பாதிக்கப்பட்ட சிறு பகுதியை நீக்கி உண்பது போல...

அங்கே சட்டை எறி்யப்பட்டது. இங்கே பழம் உண்ணப்பட்டது. முழுமையாகப் பார்க்கும் பொழுது மாத்திரமே நமக்கு விவரங்கள் புரிகின்றது. இல்லையென்றால் பழத்தை வெட்டி வீசுகிறான் என்றும் சட்டையைப் பத்திரப்படுத்துவதாகவும் தோன்றும்.

விதியை மதியால் மாற்ற முடியும் என்பது இதனால்தான். இன்றைய கருமங்கள் நாளைய விதியை உருவாக்கவல்லவை. இன்று மரம் வளர்த்தால் மழை ஒழுங்காகும். மரம் வெட்டினால் மழை தாறுமாறாகும். நீர் தேக்கினால் நிலத்தடி நீர் பெருகும். இப்படி இன்றைய செயல்களின் விளைவு நாளைய விதி ஆகும். இன்று என்ன நடக்கிறது என்பது விதி. நாளை என்ன நடக்கும் என்னும் விதி கருமங்களால் விளைகிறது. அதனால் நம் மதியால்  நாளை என்பதை கருமங்களைக் கொண்டு நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

ஒரு முயற்சி என்பது பலன் தராமல் போகவே போகாது.

விதியை யாரோ எழுதுவதில்லை.  நம் விதியை நம் கர்மங்களால் நாமே எழுதிக் கொள்கிறோம்.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES

YUGATHIS
THANKS SIR,

GOOD EXPLANATION.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES

Arul Selva Perarasan
Administrator
நல்ல விளக்கம் நண்பரே


On Wed, Feb 10, 2016 at 11:47 AM, YUGATHIS [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]> wrote:
THANKS SIR,

GOOD EXPLANATION.




If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/KARMA-VS-VITHI-NEED-EXPLAIN-AND-EXAMPLES-tp640p643.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES

விஜய சாரதி
In reply to this post by தாமரை
தாங்கள் எளிமையாக புரியும்படிக்குக் கூறியுள்ளீர்கள்.

இதை மேலும் ஆராய்ந்தால் கர்மா மூன்று விதங்களாலானது. சஞ்சித, பிராரப்த, க்ரியமான கர்மாக்கள் என்று சொல்லப்படும்.

சஞ்சித என்பது நமது கர்மாக்களின் மொத்த தொகுப்பு. அதில் இந்த ஜன்மாவுக்கு பலன் கொடுப்பது பிராரப்தம் எனப்படும். இந்த ஜன்மாவில் சேர்க்கும் கர்மா க்ரியமான கர்மாவாகும். அவை அடுத்து வரும் ஜன்மாக்களில் பலன் தரும்.

விதி என்று நாம் சொல்வது பிராரப்த கர்மாவாகும். சஞ்சித, க்ரியமான கர்மாக்களைப் மகான்களின் ஆசிகொண்டோ, தீர்த்தயாத்திரைக் கொண்டோ போக்கிக் கொள்ளலாம். பிராரப்தம் போக்க முடியாதது. ஆனால் அதன் விளைவைக் குறைக்க முடியும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES

தாமரை
Administrator
நீங்கள் சொல்வதே நான் சொன்னதுதான். எளிமைப்படுத்திப் பாருங்கள் புரியும்.

சஞ்சித என்பது நமது கர்மாக்களின் மொத்த தொகுப்பு.

அதாவது சஞ்சித கர்மா = பிராரப்த கர்மா (பிராப்தம் - விதி - சென்ற பிறவியின் கர்மா) + கிரியமான கர்மா (இப்பிறவியில் செயல்களால் உண்டாகும் கர்மா)

சஞ்சித கர்மாவை மாற்ற முடியுமெனில் அதன் பொருள், பிராரப்த கர்மாவையும் மாற்ற முடியும் என்பதே ஆகும்.

அதாவது ஒரே பிறவியில் நாம் பிராரப்த கர்மாவைத் தீர்த்துவிட முடியாது. பல பிறவிகளில் அது தொடரலாம். நம்முடைய கிரிய மான கர்மா, அடுத்தடுத்த பிறவிகளில் பிராரப்த கர்மாவை மாற்றவல்லது.

 நீங்கள் இந்தத் தொடர்பை பார்க்கவில்லை, அதனால் பிராரப்த கர்மா மாற்ற முடியாதது என்று சொல்கிறீர்கள்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES

விஜய சாரதி
சஞ்சித கர்மா என்பது அம்பறாதூணியில் இருக்கும் அம்புகள் போல. பிராரப்தம் என்பது விடுப்பட்ட அம்பு போல.

சஞ்சித கர்மாவை சென்ற பிறவியின் கர்மா என்று கொள்ள வேண்டாம். அது பல பிறவி கர்மாக்களின் தொகுப்பு. அது அத்தனையும் ஒரே ஜன்மாவில் அனுபவிக்க முடியாது. அதை கடவுள் அவர் கருணையால் பிரித்துக் கொடுக்கிறார்.

இந்த ஜன்மாவில் நாம் எங்கு பிறக்கிறோம், அதன் சூழ்நிலை என்று பல விஷயங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு விதி அமைகிறது. அதற்கேற்றபடி சஞ்சிதத்தின் ஒரு பகுதி பிராரப்தமாகிறது.

'நம்முடைய கிரிய மான கர்மா, அடுத்தடுத்த பிறவிகளில் பிராரப்த கர்மாவை மாற்றவல்லது. ' - நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் அடுத்தடுத்த பிறவிகளின் பிராரப்தத்தை (future prarabdha)  பிராரப்தம் என்று சொல்வதில்லை. அடுத்தடுத்த பிறவிகளின் பிராரப்தம் தற்போது சஞ்சிதம்தான். அடுத்த பிறவியில்தான் அது பிராரப்தம். அதாவது அது பிராரப்தம் ஆவதற்கு முன்பே, சஞ்சிதமாக இருக்கும்போதே அழிக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவர் ஒரு தவறிழைத்து விட்டார். கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. அவர் செய்த தவறு இப்போது சஞ்சிதம். அதற்கு தீர்ப்பு வந்துவிட்டால் பிராரப்தம். அந்த கேஸ் நடக்கும் போதே அவர் செய்த தவறுக்கு நஷ்டஈடு கொடுத்து கேஸை வாபஸ் பெற செய்தால் செய்யலாம். அந்த நஷ்டஈடு தான் க்ரியமான கர்மம்.

சற்றேறக்குறைய ஒரே விஷயத்தைதான் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். பெயர்கள்தான் மாறுகின்றன. அதனால் இத்துடன் இந்த திரியை விட்டுவிடுகிறேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES

தாமரை
Administrator
1. செயல்களினால் மட்டுமே கர்மங்கள் உருவாகின்றன.  வேறு எவ்வகையினாலும் கர்மங்கள் உருவாவதில்லை.

2. மார்க்கண்டேயனின் ப்ராரப்த கர்மா படி அவன் 16 வயதில் மரிக்க வேண்டும். ஆனால் மரித்தானா?

3. ஆதிசங்கரரின் பிராரப்த கர்மாவின்படி அவர் 12 வயதில் மரிக்க வேண்டும். மரித்தாரா?

பிராரப்த கர்மாவையும் மாற்ற இயலும். இது எஞ்சின், இது முதல் வகுப்பு பெட்டி, இது இரண்டாம் வகுப்புப் பெட்டி, இது குளிரூட்டப்பட்ட பெட்டி என்று இப்பொழுது சம்பாதிக்கும் கர்மா, இந்தப் பிறவிக்கு வாய்த்த விதி (பிராரப்த கர்மா) மொத்த கர்மா (சஞ்சித கர்மா) என எத்தனை விதமாக மாற்றிக் கூறினாலும்

விதியை எந்த  நிலையிலும் கர்மாக்கள் மாற்ற வல்லவை.