58 நாட்கள்

classic Classic list List threaded Threaded
1 message Options
Reply | Threaded
Open this post in threaded view
|

58 நாட்கள்

தாமரை
Administrator
This post was updated on .
http://sacred-texts.com/hin/m13/m13b132.htm

கங்கூலியின் ஆங்கில மொழி பெயர்ப்பு:

I have been lying on my bed here for eight and fifty nights. Stretched on these sharp-pointed arrows I have felt this period to be as long as if it was a century. O Yudhishthira, the lunar month of Magha has come. This is, again, the lighted fortnight and a fourth part of it ought by this.

அதன் தமிழ் மொழிபெயர்ப்பு :

இங்கே நான் இந்த என் படுக்கையில் 8 மற்றும் 50 ராத்திரிகளாக படுத்திருக்கிறேன். இந்த கூர்மையான அம்புப் படுக்கையில் படுத்திருக்கையில் இந்த காலம் ஒரு நூற்றாண்டைப் போலத் தோன்றுகிறது. ஓ யுதிஷ்டிரா, சந்திர மாதம் மாசி வந்து விட்டது, மேலும் என் கணக்குப்படி இன்று வளர்பிறையில் நான்காம் பிறையாக இருக்கலாம்.


மூன்று பாகங்கள் சென்று விட்டன என்பதை மூன்று பாகங்களே மிச்சமிருக்கின்றன எனச் சிலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.


ஆனால் இதற்கான ஸ்லோகம் என்ன சொல்கிறது.

AshtaPanchasatam ratrya sayana syasyama gatha
Sarashu nisitagresu yatha varsha satam tatha
Tribhaga seshah pakshyam suklo

அஷ்ட - எட்டு
பஞ்ச - ஐந்து
சதம் - நூறு

எட்டு ஐந்து நூறு எப்படி 58 ஆகியது?

அர்த்தசதம் தான் நூறு. பஞ்சசதம் என்றால் ஐநூறு அல்லவா?

அஷ்ட பஞ்சதசம் என்றிருந்தால் அது 8 + (5 x 10) = 58 என்று வரும்.  சதம் என்றால் நூறு என்று எல்லோருக்கும் தெரியுமே.

5 x 8 = 40 அஷ்ட பஞ்ச என்றால் எட்டு ஐந்துகள் என்றும் பொருள் வரும்
சதம் என்றால் நூறு.

(5 x 8) + 100 = 140 ஆக அஷ்ட பஞ்ச சதம் என்பதை 140 என்றும் பொருள் கொள்ளலாம். இது புரட்டாசி மாதம் போர்  நடந்தது என்று சொல்லும்

அல்லது

8 ஒன்றுகள் 5 பத்துகள் 1 நூறு அதாவது 158 நாட்கள் என்றும் கொள்ளலாம். இது ஆவணி மாதம் போர் நடந்தது என்று சொல்லும்.

இந்த ஸ்லோகங்கள் முழுதாகக் கிடைத்தால் ஆராய முடியும். ஏனென்றால் ஸ்லோகத்தில் இதுவரை மாசி மாதம் என்று சொல்லவில்லையே.. சுக்ல பக்ஷம் 3 பாகங்கள் முடிந்துவிட்டது என்று மட்டுமே இருக்கிறது. அதாவது 4 ஆம் நாள்.. எந்த மாதம் எந்த அயனம் எதுவும் காணோமே


... கொஞ்சம் ஆழமாய் பார்க்கவேண்டும்..