56 நாட்கள் இருக்கின்றன - ஆடிப் போர்

classic Classic list List threaded Threaded
1 message Options
Reply | Threaded
Open this post in threaded view
|

56 நாட்கள் இருக்கின்றன - ஆடிப் போர்

தாமரை
Administrator
This post was updated on .
ஓ! குருக்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, நீர் உயிர் வாழ இன்னும் ஐம்பத்தாறு {56} நாட்கள்[1] இருக்கின்றன.

[1]  கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் ஐம்பத்தாறு நாட்கள் என்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் வேறு வகையில் இருக்கிறது. அது பின்வருமாறு, "உமது தவத்தால் திரும்பவும் ஸம்ஸாரத்திற்கு வரத்தகாத உத்தம உலகங்கள் உமது வரவை எதிர்பார்க்கின்றன. ஓ! குருஸ்ரேஷ்டரே, உமது ஜீவ காலம் இன்று முதல் இன்னும் முப்பது நாட்களிருக்கின்றன. அவை நூறு நாட்களுக்குச் சமமானவை. அதன்பின், இந்தச் சரீரத்தைவிட்டு நீர் உமது நற்கர்மங்களின் பயனை அடைந்து விளங்கப் போகிறீர்" என்றிருக்கிறது. மேலும் இது சம்பந்தமான அடிக்குறிப்பாக, "பீஷ்மர், தாம் படுத்தது முதல் ஐம்பத்தெட்டு நாளென்று சொல்லப்போகிறார். அவைகளில் இதுவரைசென்ற நாட்கள் இருபத்தெட்டு; விவரம் வருமாறு: பீஷ்மர் படுத்த பின்பு யுத்தம் நடந்த நாள் எட்டு; பிறகு துரியோதனன் இறந்த ஆசௌசதினம் பதினாறு; இருபத்தைந்தாவது நாள் ஸ்ராத்தம்; இருபத்தாறாவது நாள் பட்டணப்பரவேசம்; இருப்பத்தேழாவது தினம் பட்டாபிஷேகம்; இருபத்தொன்பதாவது நாள் பீஷ்மரிடம் வந்தது; அன்று முதல் மிச்சம் முப்பது நாள் என்றறிக" என்றிருக்கிறது.

இதுவும் ஆடி மாதப் போருக்கு ஆதாரமே.

==============================================================


பீஷ்மரின் எஞ்சிய ஆயுள்


முதன்முறை யுதிஷ்டிரன் பீஷ்மரைச் சந்திக்கச் செல்கையில், பீஷ்மருக்கு இன்னும் 56 நாட்கள் வாழ்க்கை பாக்கி இருப்பதாக கிருஷ்ணன் சொல்கிறான்.

மூலம்: சாந்தி பர்வம், அத்தியாயம் 51, ஸ்லோகம் 14
http://www.sacred-texts.com/hin/mbs/mbs12051.htm


ஓ! குருக்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, நீர் உயிர் வாழ இன்னும் ஐம்பத்தாறு {56} நாட்கள் இருக்கின்றன. நெருப்பின் வடிவிலான தேவர்கள் மற்றும் வசுக்கள் அனைவரும், சூரியன் வட பாதையில் நுழையும் காலம் வரை {கண்களுக்குப்} புலனாகாத நிலையில் உமக்காகக் காத்திருக்கின்றனர்.

சமஸ்கிருதத்தில் 56 என்பதை ஷட் பஞ்ச சத் எனச் சொல்லுவார்கள். இங்கும் பஞ்ச சதம் சட் என்பது 56 என்று எப்படி மொழிபெயர்க்கப்பட்டது எனப் புரியவில்லை. இதை எப்படி சரியாக மொழிபெயர்ப்பது என்பதைப் பார்ப்போம்.


pañcā śataṃ ṣaṭ ca – என்பது ஸ்லோகத்தின் உண்மையான வார்த்தைகள் ஆகும்.

pañcā – ஐந்து; śataṃ – நூறு; ṣaṭ – ஆறு

https://en.wikisource.org/wiki/Sanskrit_Grammar/Chapter_VI

நமக்குத் தெரிந்து சதம் என்ற வார்த்தை ஒரு எண்ணுக்கு முன்னோ அல்லது பின்னோ இணையும்.

ékaçatam 101; aṣṭāsatam 108; triṅçácsatam 130; aṣṭāviṅçatisatam 128 என பின்னால் இணையும்.

அல்லது dáça çatáṁ ca 110; çatám ékaṁ ca 101 என பின்னால் இணையும்.

நூறும் பத்தும், நூறும் ஒன்றும் என இங்கு பொருள் வரும். “ஸதம் ஷட் ” என்று இங்கே சொல்லி இருப்பதால் இதை 106 என்று கொள்ள வேண்டும். ஆனால் அந்த பஞ்ச (पञ्चा) என்பது என்ன?

பஞ்ச என்பது அடைமொழியாக (Adjective) ஆக விரிந்த, பரந்த என்று பொருள் தரும்.  அதாவது இன்னும் விரிந்த 106 நாட்களுக்கு என்று கிருஷ்ணன் சொல்லுகிறார்.

கும்பகோணம் பதிப்பு 5x6 முப்பது நாட்கள் என்றும், மற்றவர்கள் 56 நாட்கள் என மொழி பெயர்த்துள்ளதும் தவறு. மாசி அஷ்டமி அன்று பீஷ்மர் இறக்கப் போகிறார். அவர்களின் கணக்குப்படியே அதிகபட்சம் 23 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன.

இன்னொரு முக்கிய விஷயமும் இருக்கிறது. யுதிஷ்டிரன் பதவி ஏற்ற அடுத்த நாளே பீஷ்மரை சந்திக்கக் கிளம்பவில்லை. ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் சொத்துக்கள் அளிக்கிறான். பின்னர் போரில் இறந்த அனைவருக்கும் சிரார்த்தம் செய்கிறான். அதன் பின்னரே பீஷ்மரை பார்க்கக் கிளம்புகிறான்.


சாந்தி பர்வம் அத்தியாயம் 42 முழுக்க சிரார்த்தம் நடந்ததைச் சொல்கிறது.

மூலம்: சாந்தி பர்வம், அத்தியாயம் 42, ஸ்லோகம் 1-6
http://www.sacred-texts.com/hin/mbs/mbs12051.htm


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இதன்பிறகு, மகத்தான ஆன்மா கொண்டவனான மன்னன் யுதிஷ்டிரன், போரில் கொல்லப்பட்ட உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் சிரார்த்தச் சடங்குகளைச் செய்ய {ஈமக்கடன்களைச் செலுத்தச்} செய்தான்.(1) பெரும்புகழைக் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனும், அடுத்த உலகில் இருக்கும் தன் மகன்களின் நன்மைக்காகச் சிறந்த உணவு, பசுக்கள், அதிகச் செல்வம், விலைமதிப்புமிக்க அழகிய ரத்தினங்கள் பல ஆகியவற்றை (பிராமணர்களுக்குக்) கொடையாக அளித்தான்.(2) திரௌபதியின் துணையுடன் கூடிய யுதிஷ்டிரன், துரோணர், உயர் ஆன்ம கர்ணன், திருஷ்டத்யும்னன், அபிமன்யு, ஹிடிம்பையின் மகனான ராட்சசன் கடோத்கசன், விராடன், தனக்கு மாறாப்பற்றுடன் தொண்டு புரிந்த நலன் விரும்பிகள் பிறர், துருபதன், திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோருக்காக அதிகச் செல்வத்தைக் கொடையளித்தான்.(3,4) இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் மன்னன், செல்வத்தையும், ரத்தினங்களையும், பசுக்களையும், துணிமணிகளையும் ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்குக் கொடையளித்தான்.(5) எந்த உறவினரையும், நண்பரையும் விட்டுவிடாமல் போரில் வீழ்ந்த மன்னர்கள் ஒவ்வொருவரும் அடுத்த உலகில் நன்மை பெறுவதற்காகச் சிரார்த்தச் சடங்கைச் செய்தான்.(6)

185 நாட்கள் அம்புப் படுக்கையில் இருக்கிறார் பீஷ்மர். அதில் 8 நாட்கள் போர், 12 நாட்கள் இறுதிக் காரியங்கள்(ஆடி முடிவு), 27 நாட்கள் கங்கைக் கரை வாசம்(ஆவணி முடிவு) என 47 நாட்கள் ஓடிவிடுகின்றன.

மிச்சம் இருந்தது 138 நாட்கள். அதில் இன்னொரு மாதம் யுதிஷ்டிரன் பதவியேற்பு மற்றும் சிரார்த்தச் சடங்குகள் நடந்தன. அது புரட்டாசி மாதம். பித்ருக்களுக்கு புனிதமானது என்பதால் சிரார்த்தங்களை யுதிஷ்டிரன் செய்கிறான்.அமாவாசையே சிரார்த்தங்கள் செய்ய தகுந்த நாள் என்பதால் புரட்டாசி முடிவுக்கு வந்ததை இங்கு உறுதி செய்கிறோம்.  பீஷ்மர் அம்புப்படுக்கையில் வீழ்ந்த பின்

08 நாட்கள் --------------- போர் நடந்தது
12 நாட்கள் --------------- நீர் காணிக்கை செலுத்தல்
27 நாட்கள் --------------- கங்கைக் கரை வாசம்
27 நாட்கள் --------------- பட்டாபிஷேகம், சிரார்த்தம் செய்தல்
------------------
74 நாட்கள் --------------- மொத்தம் கழிந்தது        :
------------------

185 நாட்களில் 74 நாட்கள் கழிந்து விட்டன. மாதம் என்பது 27 நாட்களாக குறுகி இருந்ததை இங்கே கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். அமாவாசை  சிரார்த்தம் வரை சென்றது 74 நாட்கள். அதன் பின் சில நாட்கள் (5 நாட்கள்) கழித்து யுதிஷ்டிரன், கிருஷ்ணன் ஆகியோர் பீஷ்மரைச் சந்திக்கிறார்கள்.

புரட்டாசி மாத அமாவாசை இன்றும் இறந்தோருக்கு சிரார்த்தம் செய்ய மஹாளய அமாவாசை என மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.

சாந்தி பர்வம் அத்தியாயம் 43 முழுதும் யுதிஷ்டிரன் நூறு பெயர்கள் (சதநாமாவளி) கூறி கிருஷ்ணனை வணங்குகிறான். சாந்தி பர்வம் அத்தியாயம் 47 முழுவதும் பீஷ்மர் கிருஷ்ணரை ஸ்ரீ விஷ்ணு ஸ்தவராஜம் கூறித் துதிக்கிறார். பீஷ்மரும், யுதிஷ்டிரனும் கிருஷ்ணனை புகழ்ந்து வணங்கிய இந்தப் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்குப் பிரியமானதாக இன்னும் கருதப்படுகிறது.

ஆக முதன்முறை யுதிஷ்டிரன் சந்திக்க வந்த போது 106 மிச்சம் இருந்தது என்பது பீஷ்மரின் அம்புப்படுக்கை  185 நாட்கள் என்பதை உறுதி செய்கிறது.