மஹாபாரதக் கால அட்டவணை - 3

classic Classic list List threaded Threaded
1 message Options
Reply | Threaded
Open this post in threaded view
|

மஹாபாரதக் கால அட்டவணை - 3

தாமரை
Administrator
This post was updated on .
 ஸ்ரீகிருஷ்ணனின் அமைதிக்கான பேச்சுவார்த்தை: சுபகிருது ஆண்டுக் கார்த்திகை மாதம் வளர்பிறை 2ம் நாளில், ரேவதி நட்சத்திரத்தில் புறப்பட்ட ஸ்ரீகிருஷ்ணன், 13ம் நாளில் ஹஸ்தினாபுரத்தை அடைந்து, அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தேய்பிறையின் 8ம் நாள் வரை நடத்தினான். கடைசி நாளில் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தினான். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அதே நாளில் பூசம் நட்சத்திரத்தில் தன் பயணத்தைத் தொடங்கி, கர்ணனிடம் 7 நாட்களில் அமாவாசை நாளில் கேட்டை நட்சத்திரத்தில் அனைவரும் பெரும்போருக்காகக் குருக்ஷேத்திரத்தில் கூட வேண்டும் என்று சொல்லி உபப்லாவ்யம் திரும்பினான்

http://mahabharatham.arasan.info/2016/04/Mahabharata-Chronology3.html

புறப்பட்டது வளர்பிறை 2 ஆம் நாள். அதாவது ஐப்பசி அமாவாசை முடிந்து இரண்டாம் நாள். ஐப்பசி அமாவாசை எந்த நட்சத்திரத்தில் வரும் என யோசிக்க வேண்டும்.  சித்திரை, ஸ்வாதி மற்றும்  விசாகம் இந்த மூன்று நட்சத்திரங்களில் ஒன்றிலேயே ஐப்பசி அமாவாசை வந்தாக வேண்டும். கார்த்திகை மாதம் வளர்பிறை 2 ஆம் நாள் ரேவதி நட்சத்திரமிருக்க சாத்தியமே இல்லை. இதுவே பங்குனி மாதமெனில் வளர்பிறை இரண்டாம் நாள் ரேவதி நட்சத்திரமிருக்க சாத்தியம் உண்டு.

இரண்டாவது அஸ்தினாபுரம் நோக்கிய பயணம் மொத்த நாட்கள் 11. இரண்டாம் நாள் தொடங்கி 13 ஆம் நாள் அடைகிறான்.  அவன் அங்கே சென்று சேரும்  நாளே பூர நட்சத்திரம் வந்திருக்கும்.  அடுத்து பௌர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வந்திருக்கும். எனவே தூது சென்றது கார்த்திகை மாதம் அல்ல. பங்குனி மாதம் என்பது உறுதியாகிறது.

இதையெல்லாம் பார்க்கும்பொழுது  பூச நட்சத்திரத்தன்று அஸ்தினாபுரத்திலிருந்து தன்  பயணத்தை தொடங்கினான் என்பது சரியல்ல.  அதன் பின் தேய்பிறை எட்டாம் நாள் வரை பேச்சு நடத்தினான் என்றால் 10 நாட்கள் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது என்று பொருள். அதாவது பூரம் முதல் பூராடம் வரை பேச்சு நடந்திருக்க வேண்டும். அதாவது பூர்வாஷட நட்சத்திரம் புஷ்ய நட்சத்திரமாக மாறி இருக்கிறது.

அத்தினாபுரத்தில் இருந்து உபப்லாவ்யம் வந்து சேரவே 11 நாட்கள் ஆகும் என்ற நிலையில் ஏழு நாட்களில் போர்தொடங்கும் என்று கிருஷ்ணன் எப்படிச் சொல்லி இருக்கமுடியும்? அவன் புறப்பட்டபோது தேய்பிறை அஷ்டமி ஏழு நாட்களில் அமாவாசை வரும். ஆனால் அதற்குள் அவன் உபப்பிலாவியம் சென்று படை திரட்டிவந்து குருஷேத்திரம் சேர்ந்து படைகளை அணிவகுத்து இயலாத காரியம்.

தேய்பிறை அஷ்டமியில் பயணம் தொடங்கிய் கிருஷ்ணன் உபப்லாவியம் சென்று சேர சித்திரை மாதம் வளர்பிறை நான்காம் நாளே சேர்ந்திருக்க வாய்ப்புண்டு. அதன்பிறகு உபப்பிலாவியத்தில் படை திரண்டு அங்க்கிருந்து குருசேத்திரம் செல்ல வேண்டும். உபப்லாவியத்தில்ருந்து ஹஸ்தினாபுரம் 11 நாட்கள் தேரில் என்றால் குருஷேத்திரம் காலாட்படைக்கும் யானைப்படைக்கும் கண்டிப்பாக ஒரு மாதமாவது ஆகி இருக்க வேண்டும் எனவே ஆனி மாதமே படை குருஷேத்திரத்தில் முகாமிட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.

இது 37 நாட்களாக இருக்கும் பட்சட்தில் 11 நாட்கள் கிருஷ்ணன் சென்று, 9 நாட்கள் படை நடந்து குருஷேத்திரத்தில் 12 நாட்கள் படை ஒத்திகை முடிக்க வைகாசி அமாவாசை வந்திருக்கும். அது ரோகிணி நட்சத்திரம். சூரியனும் சந்திரனும் ரோகிணியைப் பீடிக்கிறார்கள் என்பது உண்மையாகி இருக்கும்.

அதன் பின் ஆனியில் 14 ஆம் நாள் பௌர்ணமி அன்று கீதாபதேசம் நடந்திருக்க வேண்டும். அதன் பின் போர் ஆரமித்து இருக்க வேண்டும்.

சந்திரமானக் காலண்டரின் ஆனி மாத இறுதியில் பீஷ்மர் சாய்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் அவர் வீழ்ந்த பின்னே தட்சிணாயினம் தொடங்கியிருப்பதை அறிகிறார். சூரிய காலண்டரில் அது ஆடி மாதமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இது அதிக மாசத்தால் உண்டான விளைவாக இருக்கலாம்.

மஹாபாரதத்தில் கோள்களின் நிலைகளை மாற்றாமல் மாதங்களை மட்டும் மாற்றி இருக்கிறார்கள் என்பதற்கு இது இன்னொரு ஆதாரம்.


ஆக கார்த்திகை மார்கழி என்பது தவறு..

பங்குனியில் தூது.. அதன் பின் 26 நாட்களே கொண்ட மாதம் வந்திருக்கிறது. அது ஆனி மாதம். அதனால் ஆனியின் பௌர்ணமி அன்று, அதாவது அனுஷம்-கேட்டை சங்கமத்தில் பகவத்கீதை சொல்லப்பட்டிருக்கிறது. இதன் பிறகு வருவது சுவாரசியமான ஒன்று.

தேய்பிறை பிரதமையில் தொடங்கியது போர். 14 ஆம் நாள் வீழ்ந்தான் ஜெயத்ரதன். அதாவது ஜெயத்ரதன் விழுந்த அன்று அமாவாசை. அதாவது சூரிய கிரகணத்திற்கு சாத்தியமுள்ள நாள்... அதாவது சூரியன் மறைந்து வெளிப்பட்டது.

இதை ஜோதிடர்கள் கணிக்கத் தவறி இருக்கலாம். ஏனெனில் 13 நாட்களே கொண்ட பட்சங்கள் வந்தன. இதனால் ஜோதிடர்களின் கணிப்பு தவறாகி இருக்கலாம். அரவான் களப்பலிக் கதைகளில் இதை கிருஷ்ணர் அமாவாசையை ஒரு நாள் முன்னதாகக் கொண்டு வந்ததாகக் காட்டி இருப்பார்கள்.  

இதில் ஆனிதானே வருகிறது ஆடி எங்கே வருகிறது? தட்சினாயிணம் எங்கே வருகிறது என்று கேள்வி கேட்கலாம். அதற்கு பதில் இதோ

சந்திரக் காலண்டரில் வருடத்திற்கு 354 நாட்கள்தான் என அறிவோம். அதற்கு 365.25  நாட்கள் கொண்டதாக மாற்ற ஒரு வழி அதிமாசம் - க்ஷயமாசம் என்ற அமைப்புகளாகும்.

மூன்று வகையான சாத்தியங்கள் உண்டு

1. ஒரு சந்திர மாதத்தில் சூரியன் ஒரு முறை மட்டுமே இராசி மாறும். அது எந்த ராசிக்கு மாறுகிறதோ அந்த மாதத்தின் பெயர் அதுவாகவே ஆகி விடும்.

2. ஒரு சந்திர மாதத்தில் சூரியன் இராசி மாற்றம் நடவாது போகும். அது எந்த ராசிக்கு அடுத்து மாறுமோ அந்த பெயரிலான அதிக மாசம் என அது கருதப்படும்.

உதாரணமாக பங்குனி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குச் செல்ல வேண்டும். ஆனால் செல்லவில்லை என்றாக் அந்த மாதத்தை அதிக பங்குனி என அழைப்பர். அதன்பிறகு வரும் மாதத்தை நிஜ பங்குனி என அழைப்பார்கள்.

3. இதே போல ஒரே மாதத்தில் சில சமயம் சூரியன் இரண்டு இராசிகள் மாறலாம். உதாரணமாக ஒரு பங்குனி மாதத்தில் சூரியன் ஒண்ணாம் தேதி சூரியன் கும்பத்தில் இருந்து மீனத்திற்கு மாறி, 30 ஆம் தேதி மீனத்தில் இருந்து மேசத்திற்கு மாறினால் அது பங்குனி-சித்திரை மாதம் என அழைக்கப்படும்.

அதிகமாசம் என்பது 2-1/2 வருடங்களுக்கு ஒரு முறை வரும்.
ஒரு சந்திர மாதத்தில் இரண்டு முறை சூரியன் ராசி மாறும். க்ஷய ஆண்டுகள் 19, 46, 65, 76, 122, 141 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு விதங்களில் வரும்.
‘குறை’ மாதமும் ‘அதிக’ மாதமும் அடுத்தடுது வருவது மிகமிக அபூர்வம். இது கடைசியாக 1315-ல் அக்டோபர் 18 – நவம்பர் 15 வரை ‘அதிக’ கார்த்திகை மாதமாகவும் நவம்பர் 16 – டிசம்பர் 15 வரை (விருச்சிக-தனுர் சங்கராந்திகள் நிகழ்ந்ததால்) கார்த்திகை-மார்கழி ‘குறை’ மாதமாகவும் இருந்தன. டிசம்பர் 16 இலிருந்து (அடுத்த ஜனவரி 15க்குள் மகர சங்கராந்தி வந்துவிடுவதால்) தை மாதம் ஆரம்பித்தது.

இதனால் சூரிய காலண்டருக்கும் சந்திர காலண்டருக்கும் இரு மாதங்கள் வரையிலான வித்தியாசங்கள் வருகின்ற சாத்தியங்கள் உண்டு.


வைகாசி அமாவாசை குருஷேத்திரத்தில் படைகள் முகாமிட்டன.
12 நாட்கள் பயிற்சிகள்.
13 ஆம் நாள் பௌர்ணமி. இதை பீஷ்மர் சொல்கிறார். அன்றே கீதாபதேசம் நடந்தது.
ஆனி-ஆடி தேய்பிறை முதல் நாள் போர்துவக்கம்.
பத்தாம் நாள் பீஷ்மர் விழுந்தார், அதாவது ஏகாதசி அன்று.

பீஷ்மர் அம்புப்படுக்கையில் அஷ்ட பஞ்ச சத நாட்கள் இருந்தார்... அதாவதி எட்டு ஐந்து நூறு... அதாவது நூற்று ஐம்பத்தெட்டு நாட்கள் இருந்தார். என்பதை இந்த நட்சத்திரங்கள் காட்டுகின்றன. 158 நாட்கள் என்பதை ஐம்பத்தெட்டு நாட்கள் என்று மொழி பெயர்த்துவிட்டதால் தேதிகளை போட கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

158 நாட்கள் என்பது 5 மாதங்கள் 11 நாள். அதாவது  ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,மார்கழி இந்த ஐந்து மாதங்கள் முடிந்து மார்கழி  ஏகாதசியில் இருந்து 11 நாட்கள் கூட்ட தை மாதம் வளர்பிறை அஷ்டமி வருகிறது. அன்று பீஷ்மர் தருமனுக்கு உபதேசம் செய்கிறார்.

சந்திரமான காலண்டரில் ஆனி-ஆடி என்ற க்ஷயமாதம் என்படால் தஷிணாயனம் வந்துவிட்டது. தை மாதம் உத்திராயணம் ஆரம்பத்திருக்கிறது.