2013 விஜய் டிவி மற்றும் சன் டிவி மகாபாரதம்

classic Classic list List threaded Threaded
6 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

2013 விஜய் டிவி மற்றும் சன் டிவி மகாபாரதம்

ராம்குமரன்
நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் விஜய் மற்றும் சன் டிவியில் இருவேறு மகாபாரதங்கள் ஒளிபரப்படுகிறது , விஜய் டிவி ஹிந்தி மகாபாரதத்தின் தமிழாக்கம் இதில் இந்த காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்துள்ளார்கள் , உதாரணத்திற்கு சத்தியவதி ஒரு வீரமிக்க , அரச வேட்கை கொண்ட லட்சியமான பெண்ணாக காண்பித்து இருகிறார்கள், திருதிராஷ்ட்ரன் ஒரு பலம் வாய்ந்த அனால்  ஊனத்தால் ஆட்சியை பெற முடியாதவனாக அழகாக சித்தரித்து உள்ளனர் , அதே போல காட்சிகளும் , அரங்குகளும் நன்றாக வடிவமைக்கபட்டிருகிறது. இதன் செலவு மொத்தம் 100 கோடி என்கிறார்கள். அதே போல் சன் டிவி மகாபாரதமும் நன்றாக இருக்கிறது. மகாபாரத பிரியர்களுக்கு இந்த இரண்டு மகாபாரத தொடர்களும் , இந்த முழு மகாபாரதமும் திகட்டாத விருந்து, இவற்றை பற்றி உங்களின் கருத்துக்களையும் பகிரலாமே
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: 2013 விஜய் டிவி மற்றும் சன் டிவி மகாபாரதம்

Arul Selva Perarasan
Administrator
வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: 2013 விஜய் டிவி மற்றும் சன் டிவி மகாபாரதம்

Mani
In reply to this post by ராம்குமரன்

Sun TV Mahabharatham is very similar to the serial they make. Boring and too dramatic.

Vijay TV Mahabharatham was amazing. To the point and relevant.  The characters were legendary in Vijay TV as it suppose to be.

Sun TV Characters are miserable apart from Saguni, Bheem etc.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: 2013 விஜய் டிவி மற்றும் சன் டிவி மகாபாரதம்

தாமரை
Administrator
In reply to this post by ராம்குமரன்
விஜய் டி.வி மஹாபாரதம் பற்றி முதலில் சொல்லியாக வேண்டும்.

இதற்கு திரைக்கதை வசனம் எழுதியவரை பாராட்டியே ஆகவேண்டும். பல இடங்களில் மூலத்திலிருந்து வேறுபட்டாலும், இதில் வரும் வசனங்கள் மிக ஆழமானவை. நிகழ்வு கோர்ப்புகள் மிக அருமையாக இருக்கிறது. இந்த மஹாபாரதம் கிருஷ்ணன் தன் வாயால் சொல்வதாக வடிவமைக்கப்பட்டது. சில பல போர்க்காட்சிகள் போன்றவை எடுக்கப்பட்ட விதம் சரியில்லை என்றாலும்.. உதாரணமாக அபிமன்யு வதம்... போர்களத்தின் பல காட்சியமைப்புகள் அழகாக இருக்கும்.

விராடப் போரில் கூட கர்ணன் அர்ஜூனன் போரை பீஷ்மர் குறுக்கிட்டு வெற்றி தோல்வியின்றி முடித்ததாகவே காட்டுவார்கள். வனவாசம் ஐந்தே அத்தியாயங்களில் முடிக்கப்பட்டு விடும்.

அனுமன் பீமனுக்கு கொடுக்கும் பயிற்சி எப்படி இறுதிப் போரில் பீமனுக்கு உதவியது என்றும் இணைத்திருப்பார்கள். ஒவ்வொரு மாவீரனின் மரணத்துக்கும் கிருஷ்ணன் ஏன் எதற்கு என விளக்கமளிப்பது தெளிவைத் தருவதாக இருக்கும்.

சத்யவதி, குந்தி, திரௌபதி, காந்தாரி, சுபத்ரா, என பெண்களின் பாத்திரங்கள் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கும். பாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு மிகச் சிறப்பாக பொருந்தி இருக்கும்.

சிகண்டி கதை இதில் சற்றே மாறுபாடாக இருக்கும். அதாவது சிகண்டி போரின் பத்தாம் நாள் மட்டுமே ஆண் உரு பெறுவதாக காட்டி இருப்பார்கள்.

பீஷ்மர் இருக்கும் வரை ஒரு கௌரவர் கூட இறக்காதது போல் காட்டி இருப்பார்கள். துரோணரின் பதினைந்தாம் நாள் வீரத்திற்கும் ஒரு சிறு கதை உண்டு.

சகுனியின் தந்திரங்கள் இதில் மிக  நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

267 அத்தியாயங்களில் மஹாபாரதத்தை அடக்குவது மிகச் சிரமமான காரியம். 70 மணி நேரத்தில் முழு மஹாபாரதமும் பார்த்த திருப்தி இருக்கும்.

இதில் தர்மனுக்கு அஸ்தினாபுரத்தை தர மறுக்க தர்மம் மீறி ஐவரும் ஒருத்தியை மணமுடித்ததையே பீஷ்மர் காரணமாக்குவார்.

ஆக விஜய் டிவியின் மஹாபாரதம் சற்று சுவை கூட்டப்பட்ட மஹாபாரதம். பலருக்கும் பிடிக்கும்.

சன்டிவியின் மஹாபாரதம் அப்படி அல்ல.

முழுமுதற் காரணம் நடிகர்கள் பஞ்சம். புராண நாயகர்களுக்கான முகவெட்டும் உடற்கட்டும் நம் நடிகர்களிடம் சற்று குறைவு. அதனால் முகங்கள் மனதில் பதிவதில்லை.

அடுத்ததாக இந்த மகாபாரத வசனம். வசனங்களில் புதுமையோ கருத்துச் செரிவோ குறைவு. சம்பவங்களை கோர்க்கவும் கதை சொல்லுவதுமான வசன பாணி மாற வேண்டும். ஒவ்வொருவர் வசனமும் உண்மையான அவர்களின் குணாதிசயங்களோடு தோய்த்தெடுத்து வரவேண்டும். அப்பொழுதுதான் இவர்தான் அவர் என மனதில் அழுத்தமாகப் பதியும்.

முக்கிய பிரச்சனை இது வாரத்தொடர் என்பது. அதனால் கதை மிக இழுப்பது போலத் தோன்றும். தொடர்ச்சி விட்டுப் போகிறது.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: 2013 விஜய் டிவி மற்றும் சன் டிவி மகாபாரதம்

ஏ.வி.மோகன் குமார்
ஐயா வணக்கம்,
 
தங்கள் விளக்கம் அருமை,தொடரட்டும் உங்கள் பணி...

"நன்றி"
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: 2013 விஜய் டிவி மற்றும் சன் டிவி மகாபாரதம்

YAJNASENI S.B.P.GAYATHRI
In reply to this post by ராம்குமரன்
Vijay TV MAHABHARATHAM is good.Acting is also very good.Eventhough some mistakes exist in vijay tv MAHA,dialogues are very good.Explanation about every incident given by SHRI KRISHNA is also fantabuluous.