20 இலட்சமா? இல்லை 40 இலட்சமா?

classic Classic list List threaded Threaded
2 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

20 இலட்சமா? இல்லை 40 இலட்சமா?

தாமரை
Administrator
முனிவர்கள் {சூதரான சௌதியிடம்}, "ஓ! சூதரின் குமாரனே {சௌதியே}, அக்ஷௌஹிணி என்பது என்ன? அதில் எத்தனை குதிரைகள், காலாட்கள், தேர்கள், யானைகள் இருக்கும்? முழுவதும் கூறு" என்றனர்.


18 அக்ஷௌஹிணி படைகள்
சௌதி சொன்னார், "ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்கள், மூன்று குதிரைகள் அடங்கியது ஒரு பத்தி, மூன்று பத்திகள் ஒரு சேனாமுகம், மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படும். மூன்று குல்மாக்கள் ஒரு கணம், மூன்று கணங்கள் ஒரு வாகினி, மூன்று வாகினிகள் சேர்ந்தது ஒரு பிருதனை என்றழைக்கப்படும். மூன்று பிருதனைகள் சேர்ந்தது ஒரு சமு, மூன்று சமுக்கள் ஓர் அனீகினி, பத்து அனீகினிக்கள் சேர்ந்ததுதான் ஓர் அக்ஷௌஹிணி. ஓ! அந்தணர்களே, கணிதவியலாளர்கள் கூற்றுப்படி, ஓர் அக்ஷௌஹிணி என்பது இருபத்து ஓராயிரத்து எண்ணூற்று எழுபது {21870} தேர்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும் {21870}, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்றி ஐம்பது {109350} காலாட்படைவீரர்களும், அறுபத்தைந்து ஆயிரத்து அறுநூற்று பத்தும் {65610} குதிரைகளும் அடங்கியது ஆகும். ஓ! அந்தணர்களே! இதுதான் ஓர் அக்ஷௌஹிணியின் கணக்காகும் {சங்கியையாகும்}, என்று எண்களின் இலக்கணப்படிச் சொல்கிறார்கள். இந்தக் கணக்குப்படி கௌரவர்களும் பாண்டவர்களுமாகப் பதினெட்டு {18} அக்ஷௌஹிணி படைகள் இருந்தன.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section2a.html#sthash.kR2fxqNb.dpuf

இப்போது சிறு கணக்கிடுவோம்.

மொத்த தேர்கள்  = 18 x 21870 = 3,93,660
மொத்த யானைகள் = 18 x 21870 = 3,93,660
மொத்தக் குதிரைகள் = 18 x 65619 = 11,80,980

ஒவ்வொன்றிற்கும் ஒரு வீரன் என்றாலும் மொத்தம் = 19,68,300 பேர்
காலாட் படையினர் = 18 x 109350 = 19,68,300 பேர்

ஆக ஏறக்குறைய 40 இலட்சம் பேர் கலந்து கொண்ட போர் அது.

ஆனால் ஸ்திரீ பர்வம் 26 ஆம் பகுதி சொல்வது...

Vaishampayana said, "Hearing these words of Vasudeva that were disagreeable to her, Gandhari, with heart exceedingly agitated by grief, remained silent. The royal sage Dhritarashtra, however, restraining the grief that arises from folly, enquired of Yudhishthira the just, saying, ‘If, O son of Pandu, thou knowest it, tell me the number of those that have fallen in this battle, as also of those that have escaped with life!’

"Yudhishthira answered, ‘One billion 660 million and 20,000 men have fallen in this battle. Of the heroes that have escaped, the number is 240,165.’

http://www.sacred-texts.com/hin/m11/m11025.htm

1,660,020,000 பேர் இறந்தார்கள் என்கிறது, பிழைத்தவர்கள் 2,40,165 பேர் என்கிறது.கணக்கு உதைக்குதே... 166 கோடி பேர் என்பது முற்றிலும் தவறு என மேம்போக்காகவே புரியும். காரணம் இத்தனை மக்கள் தொகை குருஷேத்திரத்தில் கூடி இருக்கவே முடியாது. மேலும் வீரர்கள் மட்டுமே இவ்வளவு என்றால் குடிமக்கள், பெண்கள், குழந்தைகள் எனக் கணக்கெடுத்தால் 500 கோடியைத் தாண்டிவிடும்.

16 இலட்சத்து 62ஆயிரம் பேர் இறந்தார்கள், 2,40,165 பேர் பிழைத்தார்கள் என்றால் 19 இலட்சத்து இரண்டாயிரத்து சொச்சம் பேர் என்று வருகிறது.

இதன்படி பார்க்க...

யானைப் பாகர்கள்
தேர்ப் பாகர்கள்
குதிரை வீரர்கள்

என்றெல்லாம் இல்லை போல இருக்கே...

யானைகள், தேர்கள், குதிரைகள் மற்றும் வீரர்கள் என்றுதானே கணக்கு வருது.

எனவே மகாபாரதப் போரில் கலந்து கொண்டவர்கள் 20  இலட்சமா? இல்லை 40 இலட்சமா?


 
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: 20 இலட்சமா? இல்லை 40 இலட்சமா?

தாமரை
Administrator
என்னுடைய இந்தக் கேள்வி இப்பொழுது மீண்டும் உயிர் பெறுகிறது அரசரே..

ஒரு அக்ஷௌணி சேனைக்கு ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்றைம்பது காலாட்படை வீரர்கள்தான் என முன்பு விளக்கப்பட்டது (1,09,350)

ஆனால் இறுதி நாளில் எஞ்சி இருக்கும் படைகள்
18 ஆம் நாள் எஞ்சி நின்ற படைகளின் எண்ணிக்கை


போரில் பங்கேற்றதே மொத்தம் 20 இலட்சம் காலாட்படையினரே என்னும்பொழுது 50 இலட்சம் காலாட்படையினர் எப்படி மிச்சமிருந்தார்கள்?