ஆதி பருவம் 140 –ல் கர்ணன் துருபதனிடம் தோல்வியுற்றான ???

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

ஆதி பருவம் 140 –ல் கர்ணன் துருபதனிடம் தோல்வியுற்றான ???

மெய்யப்பஅருண்
ஆதி பருவம் 140 –ல் அங்க மன்னன் கர்ணன் துருபதனிடம் தோல்வியுற்றதாக கருதுகின்றீர்கள் அனால் என்னுடைய புரிதல் என்னவெனில்

மகாபாரதத்தில் அங்க மன்னன் கர்ணன் வருமிடங்களில் வியாசர் கர்ணனை வசுசேனன், ராதேயன் , சூதாவின் மகன், விகர்த்தன குமாரன், வ்ருஷா, போன்ற பெயர்களையும் சேர்த்து குறிப்பிடுவார். இது ஏனைய முக்கிய காதப்பாத்திரங்க்களும் பொருந்தும். துருபதானான போரில் கர்ணனை அவ்வாறான எந்த பெயரிலும் குறிப்பிடவில்லை . மேலும் திருதிராஷ்டிரரின் 48-வது மகனின் பெயரும் கர்ணனே. அந்த 140 வது பகுதியில் வியாசர் துரியோதணின் சில தம்பிகளின் வரிசையிலே கர்ணனை குறிப்பிடுகின்றார். நிச்சயம் அது அங்கதேசத்து மன்னன் கர்ணனாக இருந்திருந்தால் கர்ணனின் சிறப்புபெயர்களில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டிருப்பார்.

எனவே அந்த கர்ணன் திருதராஸ்டிறரின் 48 வது மகன் கர்ணனே.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஆதி பருவம் 140 –ல் கர்ணன் துருபதனிடம் தோல்வியுற்றான ???

Arul Selva Perarasan
Administrator
நண்பரே

உங்கள் விளக்கத்தை அந்தப் பதிவின் அடியில் கொடுக்கிறேன்.

நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

2014-08-24 10:19 GMT+05:30 மெய்யப்பஅருண் [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஆதி பருவம் 140 –ல் அங்க மன்னன் கர்ணன் துருபதனிடம் தோல்வியுற்றதாக கருதுகின்றீர்கள் அனால் என்னுடைய புரிதல் என்னவெனில்

மகாபாரதத்தில் அங்க மன்னன் கர்ணன் வருமிடங்களில் வியாசர் கர்ணனை வசுசேனன், ராதேயன் , சூதாவின் மகன், விகர்த்தன குமாரன், வ்ருஷா, போன்ற பெயர்களையும் சேர்த்து குறிப்பிடுவார். இது ஏனைய முக்கிய காதப்பாத்திரங்க்களும் பொருந்தும். துருபதானான போரில் கர்ணனை அவ்வாறான எந்த பெயரிலும் குறிப்பிடவில்லை . மேலும் திருதிராஷ்டிரரின் 48-வது மகனின் பெயரும் கர்ணனே. அந்த 140 வது பகுதியில் வியாசர் துரியோதணின் சில தம்பிகளின் வரிசையிலே கர்ணனை குறிப்பிடுகின்றார். நிச்சயம் அது அங்கதேசத்து மன்னன் கர்ணனாக இருந்திருந்தால் கர்ணனின் சிறப்புபெயர்களில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டிருப்பார்.

எனவே அந்த கர்ணன் திருதராஸ்டிறரின் 48 வது மகன் கர்ணனே.If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/140-tp321.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஆதி பருவம் 140 –ல் கர்ணன் துருபதனிடம் தோல்வியுற்றான ???

தாமரை
Administrator

யுயுத்சுவே கர்ணன் என அறியப்பட்டவன். துரியோதானதிகள் நூறு பேர் பெயரும் பின்னுள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளது. யுயுத்சுவும் கர்ணனும் போரிட்டனர் என்பதால் கர்ணன் போரிட்டான் எனக் கொள்வதே சரி.

ஓ மன்னா, அந்த வருடத்தில், அவளிடம் (பணிப்பெண்ணிடம்) சிறப்பு மிகுந்த திருதராஷ்டிரன், பெரும் புத்திகூர்மையுடைய மகன் ஒருவனைப் பெற்றான். அவன் பின்னாட்களில் யுயுத்சு என்று பெயரிடப்பட்டான். ஒரு க்ஷத்திரியனால், ஒரு வைசியப் பெண்மணிக்குப் பிறந்ததனால் அவன் கர்ணன் (குந்தியின் மகன் அல்ல) என்றும் அழைக்கப்பட்டான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/115.html#sthash.IbhflCSC.dpufகௌரவர்கள் பெயர்கள்

1.மூத்தவர் துரியோதனன்
2.இரண்டாமவர் துச்சாதனன்
3 துசாகன்
4 ஜலகந்தன்
5 சமன்
6 சகன்
7 விந்தன்
8 அனுவிந்தன்
9 துர்தர்சனன்
10 சுபாகு

****************10
11 துஷ்பிரதர்ஷனன்
12 துர்மர்ஷனன்
13 துர்முகன்
14 துஷ்கரன்
15 விவிகர்ணன் / துஷ்கர்ணன்
16 விகர்ணன்
17 சலன்
18 சத்வன்
19 சுலோசனன்
20 சித்ரன்

****************20
21 உபசித்ரன்
22 சித்ராட்சதன்
23 சாருசித்ரன்
24 சரசனன்
25 துர்மதன்
26 துர்விகன்
27 விவித்சு
28 விக்தனன்
29 உர்ணநாபன்
30 சுநாபன்

*****************30
31 நந்தன்
32 உபநந்தன்
33 சித்திரபாணன்
34 சித்ரபாணன்
35 சித்திரவர்மன்
36 சுவர்மன்
37 துர்விமோசன்
38 மகாபாரு
39 சித்திராங்கன்
40 சித்திரகுண்டாலன்

*******************40
41 பிம்வேகன்
42 பிமுபன்
43 பாலகி
44 பாலவரதன்
45 உக்ரயுதன்
46 சுசேனன்
47 குந்தாதரன்
48 மகோதரன்
49 சித்ரயுதன்
50 நிஷாங்கி

******************50
51 பஷி
52 விருதகரன்
53 திரிதவர்மன்
54 திரிதட்சத்ரன்
55 சோமகீர்த்தி
56 அனுதரன்
57 திரிதசந்தன்
58 ஜராசங்கன்
59 சத்தியசந்தன்
60 சதஸ்

******************60
61 சுவாகன்
62 உக்ரச்ரவன்
63 உக்ரசேனன்
64 சேனானி
65 துஷ்பரஜை
66 அபராஜிதன்
67 குண்டசை
68 விசாலாட்சன்
69 துராதரன்
70 திரிதஹஸ்தன்

******************70
71 சுகஸ்தன்
72 வத்வேகன்
73 சுவர்ச்சன்
74 ஆடியகேது
75 பாவசி
76 நகாதத்தன்
77 அக்ரயாய
78 கவசி
79 கிராதன்
80 குண்டினன்

*****************80
81 குண்டதரன்
82 தனுர்தரன்
83 பீமரதன்
84 வீரபாகு
85 அலோலுபன்
86 அபயன்
87 ருத்ரகர்மன்
88 திரிடரதச்ரயன்
89 அனாக்ருஷ்யன்
90 குந்தபேதி

*****************90
91 விரவி
92 சித்திரகுண்டலகன்
93 தீர்கலோசன்
94 பிரமாதி
95 வீர்யவான்
96 தீர்கரோமன்
97 தீர்கபூ
98 மகாபாகு
99 குந்தாசி
100 விரஜசன்

அந்த மனிதர்களில் எருதைப் போன்றவர்கள், போகும் வழியெங்கும் பாஞ்சாலர்களை அடித்துக்கொண்டே சென்று, பெரும் பலம்வாய்ந்த துருபதனின் நகரத்தை முற்றுகையிட்டனர். துரியோதனன், கர்ணன், பலம்வாய்ந்த யுயுத்சு, துட்சாதனன், விகர்ணன், ஜலசந்தன், சுலோசனன் ஆகியோரும், பெரும் வீரம் கொண்ட க்ஷத்திரிய இளவரசர்கள் பலரும் சேர்ந்து தாக்குதலில் முன்னணி பெற ஒருவருக்கொருவர் போட்டியிட்டுச் சென்றனர். முதல் தரமான ரதங்களில் சென்ற அந்த இளவரசர்கள், தங்கள் குதிரைப்படையைத் தொடர்ந்து எதிரியின் தலைநகருக்குள் {காம்பில்யத்திற்குள் [காம்பில்யம் | Kampilya]} நுழைந்து, அந்த நகரின் தெருக்களில் முன்னேறினர். - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section140.html#sthash.9mmNKtqK.dpuf