விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்

classic Classic list List threaded Threaded
4 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்

செல்வராஜ்
பகுதி 61

அதன்பிறகு, பெரும் சக்தியையும் வீரத்தையும் கொடையாகக் கொண்ட யுதிஷ்டிரன் சில காரணங்களுக்காக, தனக்கு உயிருக்கு உயிரான, இடது கையாலும் வில்லின் நாணை இழுக்கும் சக்தி கொண்ட அர்ஜூனனை கானகத்திற்கு அனுப்பினான். அந்த மனிதர்களில் புலிபோன்ற அர்ஜூனன், அந்த உறுதியான ஆன்மா, அனைத்து அறங்களையும் கொடையாகக் கொண்டு, கானகத்தில் பதினொன்று வருடங்களும் பதினொன்று மாதங்களும் கானகத்தில் வாழ்ந்தான். இந்த காலத்தில் குறிப்பிட்ட சம்பவத்தில், அர்ஜூனன் துவாரகையில் இருக்கும் கிருஷ்ணனிடம் சென்றான். அங்கே அந்த விபவட்சு (அர்ஜூனன்) தாமரைக் கண் கொண்ட, இனிமையான

பேச்சுடைய வசுதேவனின் இளைய தங்கை சுபத்திரையைத் தனது மனைவியாகக் கொண்டான்.


பகுதி 221

அந்த மகத்தான ஆடம்பரமான மகிழ்ச்சிகரமான திருவிழா தொடங்கியபோது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பார்த்தனும் {அர்ஜுனனும்}, இவை எல்லாவற்றையும் கண்ணுற்று, ஒன்றாகச் சென்றனர். அப்படி அவர்கள் உலவிக் கொண்டிருக்கையில்,

வசுதேவரின் {கிருஷ்ணனின் தந்தை} மகளாகிய அழகிய பத்திரை {கிருஷ்ணனின் தங்கை சுபத்திரை}, அனைத்து ஆபரணங்களும்

பூண்டு மங்கையர் மத்தியில் இருப்பதைக் கண்டனர். அர்ஜுனன் அவளைக் கண்டது முதல் காம தேவன் வசம் ஆனான். பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த மனிதர்களில் புலியான கிருஷ்ணன், ஆழ்ந்த கவனத்துடன் அவளைக் {சுபத்திரையைக்} குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டு புன்னகைத்து, "இது எப்படி இருக்கிறது? கானத்தில் உலவித் திரியும் ஒருவனது இதயம் காமதேவனால் கலங்கலாமா? இது எனது தங்கை, ஓ பார்த்தா {அர்ஜுனா}, இது சாரணன் {பலராமன்} உடன் பிறந்த

1) வசுதேவர் = வாசுதேவர் = கிருஷ்ணர் -- என்பது சரிதானா?

2) சரிதான் என்றால் பகுதி 61ல் வசுதேவனின் தங்கை சுபத்திரை என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் பகுதி 221 ல் வசுதேவரின் மகளாகிய சுபத்திரை என குறிப்பிடப்பட்டள்ளது இதற்கு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்....

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்

தமிழ் வள்ளுவர்
ஐயா வணக்கம்.

நான் கூறும் பதில் எனது யூகம் மட்டுமே.

கண்ணனின் தந்தையின் பெயர் வசுதேவர்.

கண்ணனின் மற்றொரு பெயர் வாசுதேவர்.

ஆங்கிலத்தில் வாசுதேவர், வசுதேவர் ஆகிய இரண்டையுமே VASUTHEVAR என்றுதான் எழுதியாக வேண்டும்.

ஆக ஆங்கிலத்தினின்று மொழி பெயர்க்கும் போது, இதனால் ஏற்பட்ட குழப்பமாகத்தான் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்

Jayavelan
Administrator
In reply to this post by செல்வராஜ்
1) வசுதேவர் = வாசுதேவர் = கிருஷ்ணர் -- என்பது சரிதானா?

2) சரிதான் என்றால் பகுதி 61ல் வசுதேவனின் தங்கை சுபத்திரை என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் பகுதி 221 ல் வசுதேவரின் மகளாகிய சுபத்திரை என குறிப்பிடப்பட்டள்ளது இதற்கு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்....
 
திரு.செல்வராஜ் அவர்களுக்கு,

வணக்கம் மற்றும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெரும் பிழையினை சுட்டிக் காட்டியமைக்குத் தான் அந்த நன்றி.

பகுதி 61லும் திருத்திவிட்டேன்.

வாசுதேவரே கிருஷ்ணன் ஆவார்.
வசுதேவரோ கிருஷ்ணனின் தந்தை ஆவார்.

{வசுதேவர் கிருட்டிணனின் தந்தை. இவரது உடன் பிறந்தாளான குந்தி, பாண்டு மன்னனின் மனைவி. வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார்.
வசுதேவரின் கம்சனின் உடன்பிறந்தாளான தேவகியை மணமுடித்தார். இவரது இரண்டாவது மனைவி இரோகிணி. இவர்களுக்குப் பிறந்த மகன் பலராமர்.}
நன்றி:http://ta.wikipedia.org/வசுதேவர்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்

Jayavelan
Administrator
In reply to this post by தமிழ் வள்ளுவர்
திரு.தமிழ் வள்ளுவர் அவர்களுக்கு,

நன்றிகள். தாங்கள் சுட்டிக்காட்டியது போல்தான் தவறு நேர்ந்திருக்கிறது.
 
பகுதி 61லும் திருத்திவிட்டேன்.

நன்றிகளுடன்,
அருட்செல்வபேரரசன்.