காசியபர்,”பாகப்பிரிவினை கூடாது”.

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

காசியபர்,”பாகப்பிரிவினை கூடாது”.

ஜெயவேலன்
வாரிசு பிரச்சனைக்காக சொத்தை பிரிக்கக் கூடாது.இதை காசியபர் கருடனிடம் கூறுகிறார்.
பார்க்க:
http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section29.html
விபவசுவம் சுப்ரிதிகாவும் | ஆதிபர்வம் - பகுதி 29
Vibhavasu and Supritika | Adi Parva - Section 29 In Tamil | Mahabharata

இந்த கதை பீஷ்மருக்கும், துரோணருக்கும் தெரியாமல் போகுமா?

கதையின் சாரம்சம் கீழே:

காசியபர் கருடனிடம், "முன்பொரு காலத்தில் விபவசு {Vibhavasu} என்று ஒரு பெரு முனிவன் இருந்தான். அவன் மிகுந்த கோபக்காரன். அவனுக்கு சுப்ரிதிகா {Supritika} என்று ஒரு தம்பி இருந்தான்.

சுப்ரிதிகா எப்போதும் பாகப்பிரிவினை குறித்தே பேசிக் கொண்டிருந்தான். சில காலம் கழித்து விபவசு சுப்ரிதிகாவைப் பார்த்து, "செல்வத்தின் மீதுள்ள கண்மூடித்தனமான ஆசையால், மனிதர்கள் தங்கள் பரம்பரைச் செல்வங்களைப் பிரித்துக் கொள்ள ஆசைப்படுவது பெரிய முட்டாள்த்தனமாகும். பரம்பரைச் சொத்தைப் பிரித்துக் கொண்டால், ஒருவர் செல்வத்தில் மற்றவர் பொறாமை கொண்டு,ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டே இருப்பர். சொத்துக்களை பிரித்துக் கொண்ட பிறகும், நண்பர்கள் என்ற போர்வையில் இருக்கும் எதிரிகளால், அப்பாவிகளுக்கும் சுயநலம் கொண்டவர்களுக்கும் இடையே குறைகளைச் சுட்டிக்காட்டப்பட்டு பேதங்கள் உருவாக்கப்பட்டு, சண்டையை உறுதியாகி, சகோதரர்களாகிய இருவரும் ஒருவர் பின் ஒருவராக விழுவர். பிரிந்தவர்களை, கேடு வெகு விரைவாக வந்தடையும். இதன் காரணமாகவே ஞானமுள்ளவர்கள் சகோதரர்களுக்குள் பிரிவினையை ஆமோதிக்கமாட்டார்கள். அப்படிப் பிரியும் சகோதரர்கள் சத்தியமான சாத்திரங்களைப் புறந்தள்ளி வாழ்ந்து, ஒருவர் மீது ஒருவர் பயத்தில் வாழ்வர்..........
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: காசியபர்,”பாகப்பிரிவினை கூடாது”.

Arul Selva Perarasan
Administrator
மேற்கண்ட கேள்வியை
http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section205.html ல் பீஷ்மரும்
http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section206.html ல் துரோணரும் நிகழ்த்திய உரையை வைத்து கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இங்கே பீஷ்மர்தான் நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்கிறார்.

ஆனால் துரோணரின் பேச்சைக் கவனியுங்கள்.

கவனத்துடன் எங்கேயும் பிரிவினை என்ற வார்த்தை இல்லாமல் பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்து வந்து, அரியணையில் அமர்த்த வேண்டும் என்கிறார்.

அப்படி என்றால் நாட்டைப் பிரிப்பதில் துரோணருக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகிறது.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: காசியபர்,”பாகப்பிரிவினை கூடாது”.

ஜெயவேலன்
துரோணர்,”இந்நாட்டின் ஒரு பங்கு பாண்டவர்களுக்கு கொடுக்கப்படட்டும்”, என்கிறார்.
அப்படியென்றால் பங்கு போடுவதாகத்தானே பொருள்படுகிறது.

ஆதிபர்வம் பகுதி-206அ

பீஷ்மர் முடித்ததும் துரோணர் பேசினார், "ஓ மன்னா, திருதராஷ்டிரா, ஆலோசனைக்கு அழைக்கப்பட்ட நண்பர்கள் எப்போதும் சரியானதை, உண்மையானதை, புகழைக் கொடுப்பதைச் சொல்ல வேண்டும் என்று நாம் கேள்விப்படுகிறோம். ஓ தந்தையே, இவ்விஷயத்தில் சிறப்பு மிகுந்த பீஷ்மர் சொன்னதைப் போலவே நானும் கருதுகிறேன். இந்த நாட்டின் ஒரு பங்கு பாண்டவர்களுக்குக் கொடுக்கப்படட்டும். அதுதான் நித்திய அறம். ஓ பாரதா {திருதராஷ்டிரா}, காலந்தாழ்த்தாமல், அனைவரும் ஏற்கும் பேச்சு கொண்ட ஒரு தூதுவனை துருபதனிடம் அனுப்பு...... - See more at: http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section206.html
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: காசியபர்,”பாகப்பிரிவினை கூடாது”.

Arul Selva Perarasan
Administrator
நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது சரிதான்.

மொழியாக்கம் செய்தாலும், அந்த வரியை மறந்திருக்கிறேன்.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பரே
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: காசியபர்,”பாகப்பிரிவினை கூடாது”.

Arul Selva Perarasan
Administrator
In reply to this post by ஜெயவேலன்
விபவசு சுப்பிரிதிகா கதையில் உடன்பிறந்த சகோதரர்களுக்குள் பிரிவினை என்று
வருகிறது. அதனால் ஒருவருக்கு ஒருவர் சபித்துக் கொண்டு ஆனையும் ஆமையும்
ஆனார்கள்
http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section29.html.

ஆனால் இங்கே துரியோதனனும் பாண்டவர்களும் உடன் பிறந்தோர் இல்லை. இவர்களைச்
சகோதரர்கள் என்று சொல்வதைவிட பங்காளிகள் என்று சொல்வதே சிறந்தது. பங்காளிகள்
என்றாலே சொத்தைப் பங்கிட்டுக் கொள்பவர்கள்தானே.

அப்படியென்றால் போரிட்டு ஒருவர் பங்கை ஒருவர் பிடுங்கிக் கொள்வதைவிட,
ஒப்பந்தமிட்டு, ஒருவருக்கொருவர் பிரித்துக் கொள்வதுதானே சிறந்தது. அதைத் தான்
துரோணரும் பீஷ்மரும் (நன்மையை) செய்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம்.

ஆனால், கர்ணன் துரியோதனனை மகிழ்விக்கவே தனது பிற்பகுதி பேச்சை அமைத்துக்
கொள்கிறான். முதல்பாதியில் தெளிவாக நல்லதைக் கூறும் கர்ணன், பின்பகுதியில்
அவ்வாறு கூறாமல் அல்லதைக் கூறுகிறான் என்றே படுகிறது.