ஐவருக்கு ஒருத்தியா?

classic Classic list List threaded Threaded
21 messages Options
12
Reply | Threaded
Open this post in threaded view
|

ஐவருக்கு ஒருத்தியா?

தமிழ் வள்ளுவர்
ஐயா, வணக்கம்.

மகாபாரதம் உலகத்தின் ஒப்பிலா காவியம். மாற்று கருத்து இல்லை.
நீதியின் களஞ்சியம் ; ஐந்தாவது வேதம். உண்மையே.

இருப்பினும்

'ஈன்றாள் பசிகாண்பாள் எனினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை'

என்ற வள்ளுவன் வாக்கினை சிரமேற்கொண்டு செயல்படும் நாம்,
ஒருத்திக்கு ஐந்து கணவன் என்ற கருத்தினை ஏற்க முடியமா? அதற்கு சாபங்களும் காரணங்களும் இருப்பினும் சான்றோர் பழித்த செயலை ஏற்க முடியுமா?

கண்ணனே; இறைவனே உரைத்தாலுந்தான் என்ன? தவறிழைத்தால் இறைவனையும் சபித்து ஒதுக்கிய நாயன்மார்களைக் கொண்ட பேரினம்; நமது தமிழினம்.  

என்னைப் பொறுத்தவரை அக்காலத்து ஒழுக்காமிலா வடவர்களால் உட்புகுத்தப் பட்ட அற்பக் கருத்தாகவே நான் இதனைக் கொள்கிறேன்.

ஒருவனுக்கொருத்தி எனும் பண்பினை தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலேயே கொண்டு விளங்கும் நாம் இக்கருத்தை எப்படி ஏற்பது?

இதைப் பற்றிய உங்களது கருத்து என்ன?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

Arul Selva Perarasan
Administrator
நண்பரே

ஒருவனுக்கு ஒருத்தி, ஒருவனுக்கு பலர், பலருக்கு ஒருத்தி எல்லாமே வரலாற்றில் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. ஐவருக்கு ஒருத்தியை ஊரறிய திருமணம் செய்ததால் நமக்குத் தெரிகிறது. தெரியாத வகையில் எல்லா சமூகங்களிலும் நடந்து கொண்டுதானே இருக்கிறது.

அனைவரும் அறிய தங்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் பாண்டவர்கள். அதனால் குற்றமாகப் படுகிறது.


வடவர்களானாலும், தென்னகத்தார் ஆனாலும் ஒழுக்க விதிகளை மீறியும் அனுசரித்துமே நடந்து வந்துள்ளனர். யாரும் அதற்கு விதிவிலக்கல்ல.

மேலும், கற்பு எனும் பொருள் படும்படி எந்த இலக்கியத்தையும் வாசிப்பது ஏமாற்றத்தையே தரும்.


அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

தமிழ் வள்ளுவர்
ஐயா, வணக்கம்.

ஐவருக்கு ஒருத்தி என்ற சூழல் நடைப் பெற்று விட்டது ,சரி. ஆனால் அதன் பொருட்டு வியாசர் அளிக்கும் சமாதானங்களைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பாதகமில்லை. 'நெல்லுக்கும் உமியுண்டு; நீருக்கும் நுரையுண்டு; புல்லிதழ் பூவிற்கும் உண்டு'
என சகித்து நீர் கலந்த பாலில், பாலைத் தனியே பிரித்து அருந்தும் அன்னப் பறவையாய்ப் போற்றத் தக்கவையை எடுத்து நீக்கத் தக்கவையை விடுத்து விட வேண்டியதுதான்.

நன்றி.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

ganesh
 வணக்கம் அய்யா,
               இந்த ஐவருக்கு ஒருத்தியா? என்ற விவதத்தில் நான் தமிழ் வள்ளுவர் கருத்தை முழுவதுமாக ஏற்கிறேன்.
                                  நன்றி
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

R.MANIKKAVEL
In reply to this post by தமிழ் வள்ளுவர்
ஓம் ஸ்ரீ முருகன் துணை

தமிழ் வள்ளுவர் ஐயா! வணக்கம்!

உலகம் உய்ய நல்ல வழி காட்டி, அந்த வழியில் நடந்து, வாழ்ந்து உலகுக்கு ஒரு சான்றாக இருப்பவன் சான்றோன். தமிழரில் உயர்ந்த நாயன்மார்கள். நாயன்மார்களில் ஒருவர் இயற்பகை நாயனார். அவர் சான்றோரா?

 சிவனடியாருக்கு இல்லை என்று சொல்லாத குறிக்கோளோடு வாழ்ந்ததால் தனது மனைவியையே கொடுத்தவர். தடுக்க வந்த உறவுகளை வெட்டிப் போட்டவர். உலக நடைமுறைக்கு அதுவும் தமிழர் பண்பாட்டுக்கு சரியா?

இன்னும் இன்னும் கேள்விகள் கேட்டுக் கொண்டே செல்லலாம். எத்தனை கேள்வி கேட்டாலும் ஒரே பதில்தான் இயற்பகை நாயனார் சன்றோர்தான். காரணம் இருமையை(நீ- நான், மானம் -அவமானம், ஆண் -பெண் ) தாண்டி, அகமும் புறமும்   ஓன்று ஆனவனுக்குத்தான் இறைக் காட்சி கிடைக்கும். இயற்பகை இறைவனை அடையும் நிலை அன்று, இறைவன் வந்து 'உனது மனைவியை" கொடு என்று கேட்டார். இயற்பகை நாயனார் கொடுத்து விட்டார்.

நமக்குதான் இயற்பகை நாயனார் மனிதன். இறைவனுக்கு அவர் இறை நிலையில் இருப்பவர். இறைவனும் தானும் வேறல்ல என்ற நிலையில் இருப்பவர். பக்திக்கு அந்த  சக்தி உண்டு.

இப்ப ஐவருக்கு ஒருத்தியா? கேள்விக்கு வருவோம்.

1) திரௌபதி தீயில் பிறந்தவள், பிறக்கும் போதே கன்னியாக, திருமண வயதில் பிறந்தவள்.
2) அவள் அழைத்தால் வைகுண்டத்தில் இருந்தாலும் கண்ணன் வருவான். ராதை அழைத்துக்கூட கண்ணன் சரியான நேரத்திற்கு வந்ததாக வரலாறு உண்டா?
3) அவள் கையிலும் அட்சய பாத்திரம்   இருந்தது.
4) தன்னை முதலில் சூதில் வைத்து இழந்து பின் என்னை தோற்றாரா? இல்லை, என்னை முதலில் சூதில் வைத்து இழந்து பின் தன்னை தோற்றாரா? என்ற மாபெரும் பகுத்தறிவு கேள்வியை கேட்டு அறிவு உலகத்தை ஆட்டிப்பர்த்த பெரும் ஞானி அவள்.
இந்த இடம் எல்லாம் வரும்போது அவள் தெய்வ பெண் என்று ஒதுங்கி விடுவோம்.

ஐந்து கணவர்களின் மனைவி என்றதும், அவளை கடை சரக்காக்கி விடுவோம்.
கற்பு  என்பதை  பெண்ணின் பிறப்பு உறுப்பை ஒட்டி நாம் நினைக்கிறோமே தவிர மனதை மையப் படுத்தி நினைக்கிறோமா? இல்லை ..ஏன்?  
நாம் பெண்களை உருவமாக பார்க்காமல் உறுப்புகளாக பார்க்கிறோம்.

வசைப் பாட கூட  நாம் அதிகமாக     பயன் படுத்துவது பெண்களின் பிறப்பு உருப்பை. அதனாலே பெண்ணின் பிறப்பு உறுப்பு அங்கமாக நம் மனதில் பதியாமல் அசிங்கத்தின் அடையாளமாக பதிந்து விட்டது. எனவே கற்பு  என்பதை  பெண்ணின் பிறப்பு உறுப்பை ஒட்டி நாம் நினைக்கி க்கும் போது.உயர்த்த மனத்தின் உன்னத வெளிப்பாடு கற்பு என்பது நமக்கு எப்படி புரியும்.
தங்க தமிழச்சி கண்ணகியை கற்புக்கு அரசி  என்கிறோம் எதனால், அவள் உள்ளத்தில் விளைந்த எண்ணத்தின் எழுச்சியே, நாவின் வழியாக வந்த சொல்லாகி, சொல்லே தீயாகி சுட்டதால்.  இங்கு உடலை மையப் படுத்தி கண்ணகியை கற்புக்கரசி என்று சொல்லவில்லை.


சாவித்திரியை கற்புக்கு அரசி என்கிறோம். உள்ளம் கவர்ந்த கணவனின் இறுதி காலம் தெரிந்தும், அவனை மணந்து அவனுக்காக எமனோடு வாதாடி வென்று கணவன் உயிரை மீட்டு வாழ்ந்தது.உள்ளம் நிறைந்த அன்பால், உள்ளத்தில் விளைந்த எண்ணத்தால். இங்கும் உடம்பு சார்ந்து கற்பு வரையறுக்கப் படவில்லை.

ஆண்ட சராசரங்களையும் ஆட்டிப் படைத்த ராவணனை துரும்பாக சீதையை நினைக்க வைத்தது எது? சீதையிடம் அது அவிளின் வலிமை மிகுந்த எண்ணம் இன்றி வேறு எது. அதுவே சீதையின் கற்பு. இன்னும் இன்னும் கற்பு கரசிகள் உயர்ந்த எண்ணங்களால் கற்பை நிலை நிறுத்தினார்கள்.

திரௌபதி சுயம்வர மண்டபத்தில் ஐந்து மாலைகளை ஏந்தி நின்று ஐந்து கணவனை வரிக்கவில்லை. ஒரு மாலையோடு இருந்து ஒருவனையே வரித்தாள். காலம் (விதி) அவளுக்கு ஐந்து கணவனை கொடுத்தது. இரண்டு புள்ளிகளுக்கு (ஆண், பெண்) இடையில்  நேரக்  கோடாக இருக்கும் வாழ்க்கை, திரௌபதியைப் பொருத்தமட்டில்  அறுங்கோணம் ஆகிவிட்டது (ஒரு பெண், ஐந்து ஆண்). திரௌபதி அந்த அறுங்கோணத்தை சிதைக்கவே இல்லை.  

நேர்க்கோடாக இருக்க வேண்டிய தம்பதிகள் எத்தனைப் பேர் நேரக் கோடாகவே இருக்கிறார்கள். சில கோடுகள் புள்ளியாகி போகின்றன. (நேர்க் கொடு வரைய  இரண்டு புள்ளிகள் முக்கியம்). காரணம் இருவருக்கும் இரண்டு மனம். சின்னக் காரணத்திற்கு கூட பிறந்து விடுகிறார்கள். எவ்வளவு பெரிய கொடுமைக்கு பின்னும் திரௌபதி கணவர்களை நேசிக்கிறாள். அவள் நினைத்து இருந்தால் பாஞ்சாலம் போயி இருக்கலாம்.

திரௌபதியை பொருத்தமட்டில் பிரம ஞானியாகவே தான் தெரிகிறாள். யாரிடமும் அவள் வேற்றுமை காணவில்லை குற்றமும் காணவில்லை. தருமரை எப்படி நினைத்தாலோ அப்படியேதான் சகாதேவனையும் நினைக்கிறாள். உள்ளம் உயர்வடையாமல் யாராலும் இப்படி நினைக்க முடியாது. அவள் ஏற்று கொண்ட அறுகோணம் (வேதியலின் பென்சின் வடிவம் C6H6) வடிவம் சிதையவே இல்லை. கற்பு உடலில் இருந்தால் உடல் தளருரும் போது கற்பும் தளர் உறும். இதனால் ஒரு பெண் பலரை மணப்பது தவறில்லையா என்ற கேள்வி எழும். சமுக ஒழுக்கத்தை யாவரும் கடைப்பிடித்தே தீரவேண்டும். விதி விளக்காக ஓன்று நடந்து விட்டால் அதற்காக அது குற்றம் ஆகிவிடாது. விதி விளக்கையே எல்லோரும் கைக்கொள்ளவும் கூடாது.  

கற்பு உடலில் இல்லை.மனதில் உள்ளது.திரௌபதியின் மனமோ கண்ணன் என்னும் இறைவனின் பாதமலரில் பக்தியாய் உள்ளது. பக்தியால் எதுதான் உயர்ந்ததாகாது.

பக்தியால் எச்சில் கனிக்  கூட இறைவன் ஏற்கும் பிரசாதமாகி விடும்.

நல்லதொரு சிந்தனையை தூண்டிய தமிழ் வள்ளுவர் அய்யா நன்றி கலந்த  வணக்கம்.
 
நன்றி
வாழ்க வளமுடன்
 
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

தமிழ் வள்ளுவர்
ஐயா, வணக்கம்.

தங்களின் தேர்ந்த; விரிந்த பதிவைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி; நன்றி.

உங்களின் கூற்றின் தொடக்கத்தை ஏற்றுக் கொண்டு, திரௌபதி ஒரு தெய்வப் பெண் என்றே ஒப்புக் கொண்டாலும் கூட, அவள் பதிவிரதை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கண்ணனின் இறப்பிற்குப் பிறகு, பாண்டவர்களும் திரௌபதியும் இமயமலை யாத்திரையை மேற்கொண்ட பொழுது தருமனைத் தவிர மற்ற ஐவரும் இறந்து வீழ்வதை நாம் படித்திருப்போம்.

ஒவ்வொருவரும் இறந்து விழும் சமயம், அதற்கான காரணத்தை எடுத்தியம்புகிறான் தருமன்.

பலமிக்கவன் என்ற கர்வத்தால் வீமன் வீழ்ந்ததாகவும்; வில் வித்தையில் நிகரற்றவன் என்ற ஆணவத்தால் பார்த்திபன் வீழ்ந்ததாகவும்; அழகன் என்ற செருக்கால் நகுலன் வீழ்ந்ததாகவும்; சாத்திரத்தில் கரை கண்டவன் என்ற அகம்பாவத்தால் சகாதேவன் வீழ்ந்ததாகவும் கூறும் தருமன், "திரௌபதி இறந்ததற்குக் காரணம் அவள் ஐவரின் மனைவியாக இருந்தும் அருச்சுனன் மீதே அதிக அன்பு பாராட்டினாள். அதனால்தான் அவளுக்கிந்த நிலை" என விளம்புகிறான்.

இப்படியிருக்க திரௌபதி எவ்வாறு பதிவிரதை ஆவாள்?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீ முருகன் துணை

வணக்கம் ஐயா!

திரௌபதி தெய்வப் பெண் என்பது எனது கூற்று அல்ல.

ஞான சூரியனாகி இமயம் முதல் குமரி வரை சனாதன மதத்தை ஷட் மதமாக(ஆறுவகை மதம்) வரையரை செய்து அத்வைத நெறியை குறிக்கோளாக கொண்டாலும் பாமரனும் இறையனுபூதி பெறவேண்டும் என்ற கருணையால் பக்தியை தழைக்க வைத்த ஆதி சங்கர பகவத்பாதாள் உடன் காசியில் இரவு பகல் பாராமல் கருத்துரை வாதம் செய்த பகவான் ஸ்ரீ வியாசர் சொன்னது திரௌபதி தெய்வப் பெண் என்று.

வேதம் உண்மை, வேதத்தின் வழிவந்த மந்திரம் உண்மை, மந்திரத்தால் நடத்தப்படும் யாகங்கள் உண்மை. யாகங்களால் கிடைக்கும் விளைவு உண்மை. ஒழுங்கற்றவர்களால் நடத்தப்படும் யாகங்களால் கிடைக்கும் எதிர் விளைவும் உண்மை.

மழை வேண்டி யாகம் நடத்தும் ஒரு வேத விற்பனர் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும் என்பது நியமம்.  தெரிந்தோ தெரியாமலோ யாகாசரியன் உப்பிட்டு சாப்பிட்டால் மழைப் பெய்யாது. மந்திரத்தின் தப்பல்ல.

சரியாக புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது யாகத்தில் கலந்து கொள்ள  சிறிது தாமதமகா வருகை செய்த துருபதன் மனைவியால் திரௌபதி நெருப்பில் இருந்து பிறந்தாள் இது உண்மை.

இந்த உண்மையை சொன்ன வியாசர் யார்? நான்கு வேதத்தை தொகுத்தவர். 18 புராணங்களை இயற்றியவர். ஐந்தாவது வேதமாகிய மகா பாரதத்தை சொன்னவர். பக்திக் காவியமாகிய ஸ்ரீமத் பாகவதம் பாடியவர்.

மகா பாரதத்திற்கு ஒரு பெருமை உண்டு. பிள்ளையார் பிள்ளையார் சுழிப் போட்டு(நன்றி கவிஞர் வாலி) எழுதிய காவியம்.  அந்த காவியத்தில் பொய் சொன்னால் பிள்ளையார் பிள்ளையாக இருப்பாரா?

அன்புக்கு விளக்கம் தரவந்த வள்ளுவர் -  உயிரையும் பிறருக்கு தரக் கூடியவர் என்கிறார் (அன்பிலார் )

அறிவுக்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்-நல்லதை நாடுவது அறிவு என்கிறார்(சென்றவிடத்து)

அறத்திற்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்- மனதில் மாசு இல்லது இருப்பது அறம் என்கிறார்- (மனத்துக்கண் )

ஒழுக்கத்திற்கு  விளக்கம் தரவந்த வள்ளுவர்-தீமையானதை தவறியும் பேசாதிருப்பது என்கிறார் (ஒழுக்கம் உடையார்க்கு)

வாய்மைக்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்-எந்த ஒரு தீமையையும் விளைவிக்காமல் பேசுவது என்கிறார் (வாய்மை எனப்படுவது)

ஆண்மைக்கு விளக்கம் தர வந்த வள்ளுவர்- பிற பெண்களை நோக்கதவன் என்கிறார்.

பெண்ணிற்கு விளக்கம் தரவந்த வள்ளுவர்
தற்காத்துத்  தற்கொண்டான்  பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் -என்கிறார்.

அந்த பெண்ணுக்கு எது காப்பு என்று கூறவரும் போது அவளிடம் உள்ள நிறையே காப்பு என்கிறார். (சிறைகாக்கும் காப்பு)

அந்த நிறையைத்தான் கற்பு என்கிறோம்.
திரௌபதி பதிவிரதை இல்லை என்று சொல்லும் நீங்கள் பதி விரதைக்கு உரிய இலக்கணம் என்ன என்று சொன்னால் நல்லா இருக்கும்.

எந்த இறைவன் மாயையை தோற்று வைக்கிறாரோ அந்த இறைவனே மனிதனாக பிறக்கும்போது மாயையின் பிடியில் சிக்கி தவிக்கிறார் என்றல். மாயையின் வலிமையை என்ன வென்று சொல்வது.
 
சீதையை பிரிந்த ஸ்ரீ ராமன், செடி கொடிகள் அனைத்திடமும் என் சீதையை கண்டீர்களா? என்று கேட்டு அழுதது.

யார் அழிவில்லாத பிரமமோ, யார் பிரமத்தைப் பற்றி விளக்க தகுதி உடையவரோ, யார் கருவில் உள்ள கருவையும் காக்க வல்லவரோ அவர் சால்வனுடன் நடந்த போரில் தனது தந்தை இறந்து விட்டதாக நினைத்து மூர்ச்சை அடைந்தார் என்றால் மாயையின் வல்லமையை என்ன சொல்வது.
ஒருவர்மீது ஒருவர் வைக்கும் அன்பு என்பதே மாயைதான். அன்பு வைத்ததாலே ஒருவர் இறந்து போகலாம். ஒருவர் மீது அதிக அன்பு வைத்ததாலே ஒருவர் பதிவிரதா தருமத்தில் இருந்து வழுக்கி விட்டவர் என்று எப்படி சொல்வது.

“அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை” என்று சத்திய ஞான சன்மார்க்க வழியை போதித்த வள்ளலார் சிதம்பரம் ராமலிங்க சுவாமிகளின் வாழ்வில் நடந்த கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். நல்லதை மீண்டும் ஒருமுறை சொல்வது நல்லதுதானே!

அண்ணனுக்கு பிடிக்காத தம்பி வள்ளலார். தந்தையின் திதி அன்று கூட தம்பிக்கு சோறுப் போடக்கூடாது என்று மனைவியை தடுத்தவர்.

தம்பியின் சொத்தை அபகரிக்கணும் என்று அப்படி சொல்லவில்லை. தம்பி படித்து தன்னைப் போல நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆதங்கத்தில் அப்படி சொன்னார். அதற்காக அண்ணி கொழுந்தனை அப்படியே விட்டு விட்டாரா? இல்லை. கணவனுக்கு தெரியாமல் வீட்டின் பின் பக்கம் வைத்து வள்ளலாருக்கு கண்ணீரோடு சோறுப் போட்டார். அந்த தாய் உள்ளத்தின் அன்பு சின்னதா? கணவன் பேச்சை மீறியதால் அவர் பதி பக்தி இல்லாதவரா?

சென்னையில்  இருந்து திருவொற்றியூருக்கு நடந்தே சென்று அருள்மிகு திருவடிவுடைய அம்மனை வணங்கிவர காலம் கடந்து விட்டதால், இரவு நேரத்தில் அண்ணியை  தொந்தரவு செய்யக் கூடாது என்று அமைதியாக திண்ணையில் படுத்து விட்ட வள்ளலாருக்கு அண்ணி எழுப்பி சோறு போட்டார். காலையில் எழுந்த போதுதான் அண்ணியாக வந்து சோறுப் போட்டது வடிவுடைய அம்மன் என்று வள்ளலாருக்கு தெரிந்தது. வள்ளலார் வரும் வரை தூங்காமல் காத்திருந்து காத்திருந்து தூங்கிய அண்ணியின் உள்ளம் தெரிந்துதான் அன்னை திருவடிவுடைய அம்மன் அண்ணியாக வந்தார்.  
ஒருவர் மீது அன்பு கொள்ளும் போதும், அன்பை வெளிப்படுத்தும் போதும் ஒரு வித தெய்வீக அனுபவமே நிலவுகிறது. காமம் நிலவுவதில்லை.

அன்பே சிவம்-திருமூலர் வாக்கு இங்கு நினைக்க.

அர்ஜுனன் மீது திரௌபதிக்கு ஏற்பட்ட அன்பு, தனது சுயம்வர மாலையை யாரை நினைத்து திரௌபதி எடுத்தாலோ அவன் கழுத்திலே விழுந்து விட்டது என்ற பூரிப்பில் எழுந்ததாக இருக்கலாம். யார் நாராயணனுக்கு நண்பனாக இருக்கானோ? யார் உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை என்று இறைவனால் சுட்டிக் காட்டப் படுகிறானோ? அவன் நீ  என்ற ஆனந்தத்தில் ஏற்பட்ட அன்பாக இருக்கலாம். கணவன் என்ற முறையில் ஏற்ப்பட்டதாக இருக்க முடியாது. கணவன் என்ற முறையில் ஏற்பட்டதாக இருந்தால் திரௌபதி அர்ஜுனனுக்கு நிறைய பிள்ளைகளையும் மற்றவர்களுக்கு குறைவான பிள்ளைகளையும் பெற்று தந்திருக்க வேண்டும்.

பஞ்ச பாண்டவர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட நியதிப்படி, தருமரும் பாஞ்சாலியும் தனித்து இருக்கும் பள்ளி அறையில் காண்டிபத்தை எடுக்க இரவில் நுழைந்த அர்ஜுனன் நியதிக்கு கட்டுப் பட்டு தீர்த்தடனம் செய்ய புறப்பட்டு விட்டான். நீ எனக்கு பிரியமான கணவன் என்று பாஞ்சாலி தடுக்கவில்லை.  நியதிப் படியே நடக்கட்டும் என்றுதான் இருக்கிறாள். இன்று போல் அல்ல அன்று தீர்த்தாடனம் செய்பவன் திரும்பி வந்தால்தான் உண்டு. அவன் திரும்பி வரும்வரை இறந்தவன் வரிசையில்தான் வைக்கப்படுவான். எனவே தனக்கு  பிரியமான கணவன் என்ற முறையில் அர்ஜுனன் மீது அவள் அன்பு வைக்கவில்லை.

அன்புக்கு எது இலக்கணமோ அதுவே திரௌபதியின் அன்பின் இலக்கணம்.
அன்பு வைத்ததாலேயே  திரௌபதி பதிவிரதா தருமத்தில் இருந்து வழுவிவிட்டால் என்றால் அன்பு மாசு பட்டுவிடும்.

மழை விழுந்து முளைக்காத விதைக் கூட அன்பு விழுந்தால் முளைத்துவிடும். மழையால் மண்ணில் மட்டும்தான் விழமுடியும் அன்பால் விண்ணிலும் விழமுடியும். மழை அமுதம் போல. அன்பு அமுதமேதான்.

நன்றி
வாழ்க வளமுடன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

நரேன்
மிக அருமையான விளக்கம்... உங்கள் கருத்து அனைத்து வகையிலும் ஏற்புடையதே..!!!
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

ஆர்.மாணிக்கவேல்
திரு.நரேன் அய்யா! நன்றி
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

ஜெயவேலன்
In reply to this post by R.MANIKKAVEL
ஐயா மாணிக்கவேல் அவர்களின் நீண்ட விளக்கத்திற்கு நன்றிகள் கோடி. ஆராய்ச்சி பூர்வமான மிக அருமையான விளக்கமாகவும் இருந்தது.

இந்த விவாதத்தினை துவக்கிய திரு. தமிழ் வள்ளுவர் அவர்களுக்கும் நன்றி.

இந்த விவாத மேடையின் சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உள்ள ஐயா மாணிக்கவேல் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா மாணிக்கவேல் அவர்கள் நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீ முருகன் துணை

திரு.ஜெயவேலன் அய்யா, வணங்குகிறேன், நன்றியை உரித்தாக்கி,
மதிப்பிற்கு உரிய தமிழ் வள்ளுவருக்கும்  நன்றி உரிய தாகுக.


"சுத்தமான புகழ் கொண்ட திரௌபதி, தனது கணவர்களுக்கும், பிராமணர்களுக்கும், ஏதோ அவள்தான் அவர்களது தாய் என்பது போல, உணவு கொடுத்து, அனைவரிலும் கடைசியாகவே தனது உணவை எடுத்துக் கொண்டாள்" மான் கறியுண்ட பிராமணர்கள் - வனபர்வம் பகுதி 50 வரும், இந்த வரிகள் படிக்கும்போது நமது  உள்ளத்தில் எழும் உணர்சிகள் கடலை விட குறைந்ததா? மனசீகமாக  அன்னை திரௌபதியின் பாதமலரை நோக்கி நமது கைகள் குவிகின்றனவே . இந்த தாய்மையின் அற்புதத்தை விளங்கிக்கொள்ள நாம் குறைந்தது மூன்று தலைமுறையைக் கடந்து நமது பாட்டியின் மடிக்கு செல்ல வேண்டும்.

பாலிதீன் பைகளில் தோசை மாவு வாங்கி வந்து தோசை சுட்டு , குளிர் சாதன பெட்டியில் வைத்திருக்கும் நேற்றைய சட்டினியோடு சாப்பிடும் பெண்ணோடு திரௌபதியை ஒப்பிடும் காலத்தில் இருக்கிறோம். இது காலத்தின் மாற்றம், தாய்மையின் மாற்றமல்ல.

நாம் இன்றைய அளவு கோலால் கடந்த காலத்தை அளந்தால்  ஒரு அங்குலம் கூட உயராது. அதே கடந்த காலத்தின் உயரத்தை நிகழ்காலத்தில் நிறுத்தினால் நாம் எவ்வளவு உயரம் வளரவேண்டும் என்பது நன்றாக புரியும்.

இடையில் இனிய நற்செய்தி ஓன்று ஞாபகம் வருகிறது, இறைவன் கருணை, திருவண்ணா மலையில்  வீற்றிருந்த பக்தர்களால்    விசிறி சாமியார் என்று கொண்டாப்  பட்ட  யோகி ராம்சுராத்குமார் சாமிகளிடம், தனக்கு நல்ல வழி சொல்லவேண்டும் என்ற பக்தையிடம் உன்னை நாடிவரும் எளியவருக்கு இல்லை என்று கூறாமல் அன்னமிடு என்று சொன்னாராம்.   ஒருநாள் ஒரு வயதான பெரியவர் பசி என்று அந்த அம்மையிடம் சோறுக் கேட்டார்.  அந்த அம்மா சோறு போடவில்லை, சாமி சொன்னதும் ஞாபகத்தில் இருந்தது எனவே இல்லை என்று சொல்லாமல் இருபத்தைந்து பைசாவைக் கொடுத்து வேறு வீடு பார்க்கச்சொன்னது. வயதானவர்  சென்று   விட்டார்.

நாட்கள் நகர்ந்தது. மீண்டும் அந்த அம்மை யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கச் சென்றது. அந்த அம்மையை பார்த்ததும் சாமிக் கேட்டதுதான் அற்புதம் . "இருபத்தி ஐந்து பைசாவுக்கு சென்னையில் எந்த ஹோட்டலில் சோறு போடுறான்".

உய்யும் வழி தெரிந்தும் உய்ய மானிட  வர்க்கம்  நினைப்பது இல்லை.
 வாழ வழியே இல்லாத கானகத்தில் தாய்மையோடு வாழ்ந்த திரௌபதியை நினைத்துப் பார்க்கவேண்டும்.

எனது விவாதம்,தலைப்பிற்கு சம்மந்தம் இல்லாதது போல தோன்றும். ஆனால் தாயிக்கு  பின் தாரம் என்னும் பழ மொழிக்கு வித்தாக விளங்கும் திரௌபதி என்பதே   இந்த  விவாதம்.  
நன்றி, வாழ்க  வளமுடன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

Shankar M
திரு.மாணிக்கவேல் அய்யா அவர்களுக்கு வ்ணக்கம்.

தாங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் அளிக்கும் பதில் மிக அருமை. அவை சிறு பதிலாக இல்லாமல் முழு விளக்கமாக இருப்பது பாராட்டுக்குரியது. ஆகவே தாங்கள் இதே முறையில் வாசகர் கேள்விக்கான பதிலை வழங்கி பல அற்புத தகவலை தொடர்ந்து வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

ஆர்.மாணிக்கவேல்
வணக்கம் அய்யா திரு.ஷங்கர்.எம். நன்றி,  
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்வீர ராகவன் !கு ஒருத்தியா?

வீர ராகவன் !
மாணிக்க வேல் ஐயா,

அருமையான விளக்கங்கள் !.................. நல்ல பதிவுகள், நல்ல விவாதங்கள் !
விவாதத்தை தொடங்கிய வள்ளுவனாருக்கும் தங்களுக்கும் நன்றிகள் !.............. இந்த பதிவின் இணைய முகவரியை பதிவிட்ட வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்களுக்கும் நன்றி !
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்வீர ராகவன் !கு ஒருத்தியா?

R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீமுருகன் துணை

திரு.வீரராகவன், திரு.வேல்முருகன் சுப்பிரமணியன் இருவருக்கும் நன்றி ஐயா!

தொடர்ந்து இந்த முழு மகாபாரதத்தளத்தை வாசிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நல்ல விவாதங்களை தொடங்கி வைக்கவும் வேண்டுகின்றேன். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யவும்.

நண்பர் திரு.அருள்செல்வபேரரசன் அயராத உயர்ந்த பணிக்கு, அந்த கடின உழைப்புக்கு நாம் தரும் சிறு பரிசு இந்த வலைதளத்தை வாசிப்பது மட்டும்தான். நம்போன்ற வாசிக்கும் ஆர்வமும், நல்லதை நாடும் மனம் கொண்டவர்களால் இது வளரவேண்டும்.

காலத்தின் கொடுமையில் யாரும் முயற்சிச் செய்யாமலே கூவங்கள் உருவாகி விடுகின்றன. ஒரு சொம்பு புனித கங்கைக்கு நாம் வாழ்நாள் பிரயத்தனம் செய்யவேண்டி உள்ளது. கங்கைப்போன்று புனிதமான பாரத திருநாட்டின் ஒப்பற்ற பொக்கிஷங்கள் ராமயணம், மகாபாரதம். வருங்கால சந்ததிகளுக்கு, அதுவும் உலக அளவில் உள்ள தமிழர்களுக்கு அவர்கள் மடியில் வந்து பாயும் கங்கைபோல இன்று இந்த முழுமகாபாரதம் அமைந்து உள்ளது. அதைநாம் கொண்டாட வேண்டும்.

நண்பர் இதை எழுதுகின்றார் என்பதற்காக இல்லை, இதற்குள் இருக்கும் வாழ்வில் ரத்தினங்கள் நமது வாழ்வின் அனைத்து திசைகளையும் ஒளிபெறச்செய்து நமக்கு நல்ல திசையைக்காட்டி நல்ல வாழ்க்கையை அமைத்து தரும். அதை நாம் உணரும்போதே நம்  இளைய தலைமுறையும் உணரும். நல்லவற்றை நாமும் கற்று, நம்மை சேர்ந்தவர்களையும் கற்க வைப்போம்.

மீண்டும் அனைவருக்கும் நன்றிக்கூறி, நண்பர் அருள்செல்வ பேரரசுக்கும், திரு.தமிழ்வள்ளுவருக்கும் நன்றி கூறி, இறைவன் அனைவருக்கும் நலம் செய்ய இறைவன் திருவடி வணங்குகின்றேன்.
வாழ்க வளமுடன்.  
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவரின் பத்தினி திரௌபதி

Bhagavad Darisanam
In reply to this post by தமிழ் வள்ளுவர்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவரின் பத்தினி திரௌபதி

R.MANIKKAVEL
ஓம் ஸ்ரீமுருகன் துணை

அன்னை பாஞ்சாலியின் மனித நிலை, தெய்வீக நிலை, பதிபக்தி, இறைபக்தி ஆகிய வற்றை அழகாக விளக்கியது. உங்களின் “ஐவர் பத்தினி பாஞ்சாலி” கட்டுரை. வெளியிட்ட அனைவருக்கும். கட்டுரை ஆசிரியர்  திருமதி.கீதா கோவிந்த தாஸி அம்மாள். அவர்களுக்கும் நன்றி பலப்பல

வாழ்க வளமுடன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவரின் பத்தினி திரௌபதி

Arul Selva Perarasan
Administrator
அருமையான கட்டுரை நண்பரே


2014-02-18 23:48 GMT+05:30 R.MANIKKAVEL [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஓம் ஸ்ரீமுருகன் துணை

அன்னை பாஞ்சாலியின் மனித நிலை, தெய்வீக நிலை, பதிபக்தி, இறைபக்தி ஆகிய வற்றை அழகாக விளக்கியது. உங்களின் “ஐவர் பத்தினி பாஞ்சாலி” கட்டுரை. வெளியிட்ட அனைவருக்கும். கட்டுரை ஆசிரியர்  திருமதி.கீதா கோவிந்த தாஸி அம்மாள். அவர்களுக்கும் நன்றி பலப்பல

வாழ்க வளமுடன்If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp88p217.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

renuka devi
In reply to this post by Arul Selva Perarasan
neengal kuruvathai naan erkiren irupinunum enaku oru kelvi ullathu,athe thiravupathiyai gowravarkal mananthu irunthaal?avarkal 100 perum avalaiye manaiviyaka erru irunthaal nengal avarkalai nallavar enru kuruvirkala? avalai paththini erum kuruvirkala?illai vayasarum avalai paththiniyaka kuri irupara?tharumar tarumavaan avar tharumaththaiye seipar enral avar yean avalavu punithamana than manaiviyai suthil vaaika vendum ?thuriyothanan,thuchchathanan,karnan seithathai vida avar seithathe periya thavarakum.avar tharumam anre poi aaki ponathu.athanaal avar seithathu anaiththum tharmam akathu,oru kadhai enral athan kathanayakal evalavu anithi seithalum avan iruthiyil nallavanakave karutha paduvan ithuve ikkadhaiyulum nadanthu ullathu.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: ஐவருக்கு ஒருத்தியா?

தாமரை
Administrator
In reply to this post by தமிழ் வள்ளுவர்
பாஞ்சாலியின் கதையில் வருபவற்றை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறி அந்தக் காலத்தில் இருந்ததா என்று ஆராய்வோம்.

குருவம்சத்தின் புகழ்பெற்ற இராஜமாதா சத்தியவதி. அவளுக்கு பராசரர் மூலம் பிறந்தார் வியாசர். பின்னரே அவர் சந்தனுவை மணந்தார்,.

அவருக்கு பிறந்த இரு பிள்ளைகளுக்கோ மகவுகள் இல்லை. வியாசர் அம்பிகா, அம்பாலிகா ஆகியோருடன் சேர்ந்து பிள்ளை பெறுகிறார்கள்.

பாண்டுவுக்குப் பிறந்தவர்கள் அல்ல பாண்டவர்கள். எமதர்மன், வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்கள் எனும் ஐந்து தேவர்களுக்குப் பிறந்தவர்கள். சூரியன் மூலம் கர்ணனும் உண்டு.

அப்படி இருக்க பாஞ்சாலி ஐவருக்குப் பத்தினி, அது தவறு எனச் சொல்லுதல் எப்படிச் சரியாகும். அவள் அனைவருக்கும் உண்மையாக வெளிப்படையாக வாழ்ந்தாள். அப்படியானால் அவள் செய்தது எப்படித் தவறாகும்?

அர்ச்சுனனை மணக்கவே பிறந்தவள் எனச் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள் திரௌபதி, அப்படி இருக்க அவள் அர்ச்சுனன் மேல் அதிக அன்பு காட்டியதில் வியப்பில்லை. அர்ச்சுனனே அவளை சுயம்வரத்தில் வென்றான். உரிமை அவனுக்கு அதிகம்.

ஐவரை அவளா விரும்பி மணந்தாள். ஒருவனுக்குத் தெரியாமல் இன்னொருவரை மணந்தாளா? குந்தி சொன்ன பின் மணம் முடியும் வரை எத்தனைப் போராட்டம். செய்வது தருமமே என வியாசர் முதல் கிருஷ்ணன் வரை எடுத்துச் சொல்லி அல்லவா மணம் நடந்தது.

ஒரு பெண் ஒருவனைத்தான் மணக்க வேண்டும் என்பதைச் சொன்னது யார்? கடவுளா? தேவர்களா? வேதமா? தர்மமா? எது?

வேதம் படைத்த வியாசர் தானே இதுசரி என எடுத்துரைக்கிறார். அப்படி இருக்க பாஞ்சாலி மேல் எதைச் சொல்லிக் குற்றம் சாட்டுவது? அவள் தன் கணவர்களுக்கு துரோகம் செய்யவில்லை. அவள் தன் கணவர்களை விட்டுத்தரவில்லை. அவள் தன் கணவர்களை விட்டு விட்டு பிறந்தவீடு ஓடிவிடவில்லை. இப்படித் தவறான எதையும் செய்யாத அவளை எதைக் கொண்டு குற்றம் சொல்வீர்கள்?

அப்படி அவள் வாழ்ந்ததினால்தான் அவள் கற்புக்கரசி. கீசகனோடோ, துரியோதனனோடோ அல்லது ஜெயத்ரதனோடோ அவள் ஓடவில்லை. கொண்டகடமையைச் சரியாகச் செய்தாள். அதனால் அவள் கற்புக்கரசி.

கணவனிருக்க இன்னொருவனை மோகிப்பவளே தவறானவள். திரௌபதி அப்படி அல்லள்.

திரௌபதியின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் எந்த ஒரு நொடியிலும் அவளுக்கு ஒரு கணவன்தான். அதுமாதிரியான ஒரு அமைப்பைத்தான் வியாசர் அவளுக்கு உருவாக்கித் தருகிறார்.

சான்றோர் எதைப் பழித்தார்கள் என்பதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். சான்றோர் என்பவர் யார் என்பதையும் காணவேண்டும்.

ஒழுக்கம் என்பது நெறியில் ஒழுகுவதாகும். வியாசர் வகுத்த நெறியில்தான் திரௌபதி ஒழுகினாள்.

ஒருவனுக்கொருத்தி என்பது பெண்களுக்கு மட்டும்தானா? தொல்காப்பியம் இன்னுமொன்றையும் சொல்கிறது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல
கால வகையினானே என்கிறது.

அன்னையின் ஆணை என்ற ஒற்றை நூலின் மேல் பின்னப்பட்டது திரௌபதியின் திருமணம்.

இதில் திரௌபதியின் தவறு எதுவுமே இல்லை.

அதுவும் வியாசர் தொகுத்த வேதத்தின்படி ஒழுகுவோர் குற்றம் சொல்ல முகாந்திரமே இல்லை.

வியாசரை விட உயர்ந்த சான்றோன் அக்காலத்தில் இல்லை, எனவே சான்றோர் பழிக்கும் செயலை அவள் செய்யவில்லை.

தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததா என்ற கேள்வி உங்களுடையது. தமிழர்களும் பல மனைவிகள் கொண்டவர்களாகத் திகழ்ந்தவர்கள் தானே? தமிழ்கடவுளான முருகனுக்கே இருமனைவிகள் அல்லவா?

திருமணம் என்பது விருத்திக்கானது. குலம், தர்மம், ஆயுள் என அனைத்தையும் விருத்தி செய்வதாகும்.

 நமது குழந்தைகளுக்கு நாம் இதை எப்படி நியாயப்படுத்துவது என்ற கண்ணோட்டத்தில்தான் இதை பார்க்கவேண்டும்.

அப்படியானால் முதலில்  நாம் தர்மம் அறியவேண்டும்.

தர்மத்தையே முழுதாக அறியாத நாம் இது தவறு என்று எதை வைத்துக் கூறுகிறோம்?

பாஞ்சாலியை பாஞ்சாலியாகவே காட்டுவதுதான் சரி. அவளைத் தெய்வமாக்கிப் புகழ வேண்டியதில்லை. பரத்தையாக்கி இகழ வேண்டியதில்லை.

இது இப்படியாக நடந்தது என்பதே இதிகாசத்தின் விரிவாகும்.

எந்த ஒன்றும் நல்லதும் அல்ல. கெட்டதும் அல்ல.

நல்லதும் கெட்டதும் பொருளில் இல்லை. அது நம் அறிவில் இருக்கிறது.

ஒரு விசயம் பற்றி நமக்கு நல்லது அதிகம் தெரிந்தால் அதை நல்லது என்கிறோம். கெட்டது அதிகம் தெரிந்தால் அதைக் கெட்டது என்கிறோம்.

நமக்குத் தெரிந்ததை மட்டுமே வைத்து முடிவு எடுக்கிறோம். ஆனால் கற்றது கைமண்ணளவு.

இறைவன் படைப்பில் நல்லது இல்லாத விஷயம் இல்லை. கெட்டது இல்லாத விஷயம் இல்லை.


ஒரு விஷயத்தில் இருக்கும் நல்லதை எடுத்துக் கொள்ளத் தெரிந்தவன் நல்லவனாகிறான்
கெட்டதை எடுக்கத் தெரிந்தவன் கெட்டவனாகிறான்

உலகில் இருளும் வெளிச்சமும் சம அளவே உள்ளன. எந்த ஒரு புள்ளியை எடுத்துக் கொண்டாலும் ஒரு வருடத்தில் பகல் 182.5125 நாட்கள்தான். இரவு 182.5125 நாட்கள்தான். அதே போல்தான் நல்லதும் கெட்டதும் சம அளவிலேயே உள்ளன.

ஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒன்றைப்போல் இல்லை என்பது ஒரு பார்வை.
ஒன்று போல் இல்லாத ஐந்து விரல்களுக்கும் ஒரே கைதான் என்பது இன்னொரு பார்வை.

இதற்கே இப்படி என்னும் பொழுது மகாபாரதத்தை நாம் எத்தனைக் கோணங்களில் பார்ப்பது?


அதாவது நமக்கு இருக்கும் கொஞ்சூண்டு அறிவை மட்டுமே கொண்டு ஒரு விஷயத்தை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்?

திரௌபதியின் மணம் பற்றியே பேசுகிறோம். அவளின் முழுவாழ்க்கையைப் பார்த்தோமா?

அவள் வாழ்க்கையை எப்படிக் கடைபிடித்தாள்? எதை உயர்வாகக் கொண்டாள் எனப்பார்த்தோமா?

இல்லையே.. ஐந்து மணம் செய்துகொண்டாள் தவறு என்று ஒரு புள்ளியில் உலகத்தை அடக்கலாமா?
12