விதி

classic Classic list List threaded Threaded
4 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

விதி

கார்த்திக்
ஐயா,

விதியை மதியால் வெல்ல முடியும் என்பார்கள். மஹாபாரதத்தில் ஏதேனும் சான்று உள்ளதா? யாரேனும் விதியை வென்றார்களா?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: விதி

தாமரை
Administrator
http://x.2334454.n4.nabble.com/KARMA-VS-VITHI-NEED-EXPLAIN-AND-EXAMPLES-tp640.html;cid=1495019467071-610


இந்தத் திரியில் விதியை மாற்ற இயலும் என்பது சொல்லப்பட்டுள்ளது.

விதி என்பது நாமே உருவாக்கிக் கொள்வது என்பதால் நம்மால் மாற்றிக் கொள்ள இயலும்.

மஹாபாரதத்தில் கண்ணனின் மதி நிறைந்த செயல்கள் விதியை வளைக்கும்.

உதாரணம்..

யுதிஷ்டிரன் அர்ச்சுனனின் காண்டீபத்தை 17 ஆம் நாள்  போரின் போது இகழ, அவனைக் கொல்ல வேண்டிய நிலைக்கு அர்ச்சுனன் தள்ளப்படுகிறான்.

அவனை அர்ச்சுனன் கொன்ற பிறகு தானும் தற்கொலை செய்து கொள்கிறான்.

படித்துப் பாருங்கள்.

கண்ணனின் மதி விதியை எப்படி மாற்றுகிறது என்று
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: விதி

கார்த்திக்
ஐயா தங்களுடைய விளக்கத்திற்கு நன்றி. இருப்பினும் சில இடங்களில் புரியவில்லை. கண்ணன் சில இடங்களில் விதியை அதன் போக்கில் விட்டு விடுவதும் , சில இடங்களில் விதியை மாற்ற்றுவதும் குழப்பமாக இருக்கிறது. உதாரணத்திற்கு , போரில் பாண்டவர் வெல்வதற்காக பல விதிகளை மாற்றுகிறார். அனால் உப பாண்டவர்கள் கொலை செய்ய படும்போது விதியின் போக்கில் விட்டு விடுகிறார். ஏன்? எதற்காக உபபாண்டவர்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை? அவர்களின் விதிப்படி விட்டுவிடுகிறார்?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: விதி

தாமரை
Administrator
நீங்கள் எழுதப்பட்ட விதிகளை - காலத்தின் விதிகளோடு குழப்பிக் கொள்கிறீர்கள். கண்ணன் மனிதர்களால் எழுதப்பட்ட விதிகளை மீறினார் என்று சொல்லலாம். ஆனால் காலத்தால் எழுதப்பட்ட விதிகளை கண்ணன் ஒருபோதும் மீறவும் இல்லை. மாற்றவும் இல்லை.

கண்ணனின் ஒவ்வொரு சட்ட மீறலும் ஒரு தர்ம மீறலை அடையாளம் காட்டும். ஒரு சட்டம் தர்மத்தை நிலைநாட்டாவிடில் அச்சட்டத்தை மாற்ற வேண்டியது அவசியமாகும். அதை மட்டுமே கண்ணனின் சட்ட மீறல்கள் மிகத் துல்லியமாக அடையாளம் காட்டும். எங்கெல்லாம் கண்ணன் விதிமீறல் செயததாகத் தோன்றுகிறதோ அதெல்லாம் ஆராய வேண்டிய தர்மங்கள்.

தன் இறப்பை, தன் சந்ததியின் அழிவைக் கூட அப்படியே ஏற்றுக் கொண்டவர் கண்ணன். காலத்தின் விதியை கண்ணன் மாற்ற முயன்றதே இல்லை. எப்படி விதியோடு ஒத்து வாழ்வது என வாழ்ந்து காட்டியவர் கண்ணன்.