பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள்

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள்

இரவின் புன்னகை - வெற்றிவேல்
வணக்கம், தங்கள் பணி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. வாழ்த்துகள். எனக்கு ஒரு தகவல் வேண்டும், அதாவது அக்காலத்தில் பிராமணர்களுக்கு எத்தனை வகையான தானங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக எடைக்கு எடை பொன், நில தானம். எனக்கு இது பற்றி கூற இயலுமா? நான் களப்பிரர்கள் பற்றி ஒரு தொடர் பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த தகவல்கள் வேண்டும்... தங்கள் தளத்திலிருந்து மகாபாரதத்தை பதிவிறக்கி படித்துக்கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி அய்யா...

வெற்றிவேல்
சாளையக்குறிச்சி...
http://iravinpunnagai.blogspot.com/ 
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள்

Arul Selva Perarasan
Administrator
நண்பரே!

பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் குறித்து இன்றைய கடைசி பதிவில் கூட சில கருத்துகள் இருக்கின்றன.

மேலும் மகாபாரதத்தில் ஆங்காங்கே சுட்டிக்காட்டவும் படுகின்றன.

மன்னர்கள் பிராமணர்களுக்கு முக்கியமாக பசுக்களை தானம் அளித்திருக்கிறார்கள்.

பிறகு, தங்கம் வெள்ளி, உணவு வகைகள், ஆடை ஆபரணங்கள் என எத்தனை செல்வங்கள் உண்டோ அத்தனையும் கொடுத்துள்ளார்கள்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது பிராமணர்களுக்கு இறைச்சி உணவும் கொடுக்கப்பட்டது என்பதுதான்.

முழுதும் சொல்ல வேண்டுமானல் நீண்ட பட்டியலே இருக்கும். அவ்வளவும் நான் பார்த்துப் பார்த்துத் தான் சொல்ல வேண்டும். ஆகையால் தற்போது இந்தப் பதில் போதுமானது என்று நினைக்கிறேன்.

மேலும் பதில் வேண்டுமானால் இந்தக் கடிதத்தை மஹாபாரத விவாத மேடையில் இடுகிறேன். அங்கு நமது வாசக நண்பர்களும் இதில் கருத்து சொல்ல வாய்ப்பிருக்கிறது.

நன்றி!

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள்

R.MANIKKAVEL
In reply to this post by இரவின் புன்னகை - வெற்றிவேல்


ஓம் ஸ்ரீ முருகன் துணை

மக்களைத் திருப்பி அனுப்பிய பாண்டவர்கள் - வனபர்வம் பகுதி 23


சிவனைப் போல இருக்கும் வீரர்களான யுதிஷ்டிரன், பீமர், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்களும், கிருஷ்ணையும் {திரௌபதியும்} மற்றும் அவர்களின் {பாண்டவர்களின்} புரோகிதரும் {தௌமியரும்}, அற்புதமான குதிரைகள் பூட்டப்பட்ட விலையுயர்ந்த தேர்களில் ஏறி ஒன்றாக கானகத்திற்குள் சென்றனர். அப்படி அவர்கள் கிளம்பும் நேரத்தில், சிக்ஷா, அக்ஷரா மற்றும் மந்திரங்களை அறிந்த பிராமணர்களுக்கு நிஷ்கங்கள் அளவு கொண்ட தங்கத்தையும், ஆடைகளையும், பசுக்களையும் விநியோகித்தனர்.

நன்றி
வாழ்க வளமுடன்