துச்சாதனனின் தம்பிகள்

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

துச்சாதனனின் தம்பிகள்

தாமரை
Administrator
பிறகு, வீரர்களும், போர்வீரர்களில் முதன்மையானவர்களும், துச்சாசனனின் தம்பிகளுமான உமது மகன்களில் பத்து பேரால் அவன் {அர்ஜுனன்} சூழப்பட்டான்.(25) எரிப்பந்தங்களைக் கொண்டு யானையைப் பீடிக்கும் வேடர்களைப் போலத் தங்கள் கணைகளால் அர்ஜுனனைப் பீடித்த அவ்வீரர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் விற்களை விரித்து விளைத்து (தங்கள் தேர்களில்) நர்த்தனம் செய்பவர்களைப் போலத் தெரிந்தனர்.(26) - See more at: http://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-80.html#sthash.OPBmQn8a.dpuf

கர்ணபர்வம் எண்பதில் முதன் முறையாக துச்சாதனின் தம்பிகள் மற்றும் உமது மகன்களுமான என வருகிறது.

வழக்கமாக உங்கள் மகன்கள் அல்லது துரியோதனன் தம்பிகள் என்றே வரும். இது துச்சாதனின் மகன்களை குறிப்பிடுவதாக இருக்கக் கூடும். ஏதோ பிழை காரணமாக துச்சாதனின் தம்பிகள் என ஆகிவிட்டது என எண்ணுகிறேன். சோதனை செய்து பார்ப்போம்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: துச்சாதனனின் தம்பிகள்

Arul Selva Perarasan
Administrator
ஆம் அவ்வாறும் இருக்கலாம். http://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-84.html என்ற லிங்கில் உள்ள 84ம் பகுதியில் இதே சம்பவம் மீண்டும் உரைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். அங்கும் அவர்களைக் கொல்வது பார்த்தன் என்று பீமன், அர்ஜுனன் ஆகிய இருவருக்கும் பொதுவான பெயர் சுட்டப்படுகிறது.


2017-05-11 22:03 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
பிறகு, வீரர்களும், போர்வீரர்களில் முதன்மையானவர்களும், துச்சாசனனின் தம்பிகளுமான உமது மகன்களில் பத்து பேரால் அவன் {அர்ஜுனன்} சூழப்பட்டான்.(25) எரிப்பந்தங்களைக் கொண்டு யானையைப் பீடிக்கும் வேடர்களைப் போலத் தங்கள் கணைகளால் அர்ஜுனனைப் பீடித்த அவ்வீரர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் விற்களை விரித்து விளைத்து (தங்கள் தேர்களில்) நர்த்தனம் செய்பவர்களைப் போலத் தெரிந்தனர்.(26) - See more at: http://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-80.html#sthash.OPBmQn8a.dpuf

கர்ணபர்வம் எண்பதில் முதன் முறையாக துச்சாதனின் தம்பிகள் மற்றும் உமது மகன்களுமான என வருகிறது.

வழக்கமாக உங்கள் மகன்கள் அல்லது துரியோதனன் தம்பிகள் என்றே வரும். இது துச்சாதனின் மகன்களை குறிப்பிடுவதாக இருக்கக் கூடும். ஏதோ பிழை காரணமாக துச்சாதனின் தம்பிகள் என ஆகிவிட்டது என எண்ணுகிறேன். சோதனை செய்து பார்ப்போம்If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp858.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: துச்சாதனனின் தம்பிகள்

தாமரை
Administrator
This post was updated on .
tataḥ parivṛto bhīmair daśabhiḥ śatrupuṅgavaiḥ
     duḥśāsanād avarajais tava putrair dhanaṃjayaḥ
parivṛto - தன் பரிவாரங்களுடன்
bhīmair - பீமன்
daśabhiḥ - சென்ற
tataḥ - உடன்
śatrupuṅgavaiḥ - பகைவர்களிடையே
duḥśāsanād – துச்சாதனுடைய
avarajais - இளைய, சூத வழியில் பிறந்த,
tava (तव) – உமது  ------  > tata ( तत) - பிரிய 
putrair - புத்திரர்கள்
dhanaṃjayaḥ - அர்ச்சுனனை

நன்கு கவனித்தால் அவரஜெய் என்றால் தாழ்குலத்தில் பிறந்த என்ற பொருளும் உண்டு. துச்சாதனனுக்கு கீழாக பிறந்தவர்கள் என்பது, துச்சாதனின் தம்பி எனவும் குறிக்கும். அதேசமயம் திருதிராஷ்டிரனுக்கு யுயுத்சு போல தாசிப் பெண்ணிடம் பிறந்த குழந்தைகளையும் குறிக்கும்.  வழக்கமாக வியாசர், கௌரவர்கள் 100 பேரையும் துரியோதனன் தம்பிகள் அல்லது த்ருதராஷ்டிரன் புத்திரர்கள் என்றே சொல்லுவார், பின்னர் ஷத்திரிய குலத்தவர் என்றால் பெயரைச் சொல்ல மறக்க மாட்டார். இவர்கள் துச்சாதனின் சூத புத்திரர்கள் என்பதால் அவர் இவர்களின் பெயரைச் சொல்லவில்லை.

தவ என்றால் உம்முடைய என்று பொருள். தேசிய கீதத்தில் கூட தவ சுப நாமே காயே என்னும் பொழுது உம்முடைய நற்பெயரையே பாடுகின்றன எனப் பொருள் வரும்.

தத என்றால் பிரியமான, விருப்பமான என்று பொருள் வரும்.

இந்த ஸ்லோகத்தில் தத என்பது தவ என்று மாறியதால் இக்குழப்பம் நேரிட்டிருக்கலாம்.  கூர்ந்து நோக்கினால் தேவநாகரியில் tava (तव) – tata ( तत)  இரண்டுக்கும் வடிவில் அதிக வேற்றுமையும் இல்லை. எங்கோ படியெடுத்ததில் உண்டான பிழையாக இது இருக்கக் கூடும்.

துச்சாதனனை, துரியோதனனை, கர்ணனை கொல்ல வாய்ப்புகள் உண்டான போதெல்லாம் பாண்டவர் தரப்பினர்கள் பீமார்ச்சுனர் சபதங்களை நினைவு கூர்ந்து உயிருடன் விடுவது வழக்கம், அதிலும் கிருஷ்ணன் இருந்தும் அர்ச்சுனன் எப்படிக் கொல்வான்?

ஆக இவர்கள் துச்சாதனின் சூத வழியில் பிறந்த புத்திரர்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.