துஷ்கர்ணன் மரணம்

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

துஷ்கர்ணன் மரணம்

தாமரை
Administrator
துஷ்கர்ணனைக் கொன்ற சதானீகன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 080


களங்கமற்ற அந்தப் போர்வீரன் {சதானீகன்}, மனோ வேகம் கொண்டவையும், பல்வேறு நிறங்களில் இருந்தவையுமான துஷ்கர்ணனின் குதிரைகள் அனைத்தையும் பனிரெண்டு {12} கூரிய கணைகளால் கொன்றான். பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட சதானீகன், நன்கு குறிபார்க்கப்பட்டதும், விரைந்து செல்லவல்லதுமான மற்றொரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} துஷ்கர்ணனின் மார்பை ஆழமாகத் துளைத்தான். அதன் பேரில், இடியால் தாக்கப்பட்ட மரம் போலப் பின்னவன் {துஷ்கர்ணன்} பூமியில் விழுந்தான்.

துஷ்கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட வலிமைமிக்கப் போர்வீரர்கள் ஐவரும் {கௌரவர்கள்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சதானீகனைக் கொல்ல விரும்பி, அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். மேலும் அவர்கள் புகழ்மிக்கச் சதானீகனைக் கணைமழையால் தாக்கினர். பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட கேகயச் சகோதரர்கள் ஐவர் (சதானீகனை மீட்க) அணுகினர். பின்னவர்கள் {கேகயச் சகோதரர்கள்} தங்களை நோக்கி வருவதைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது மகன்கள், வலிமைமிக்க யானைகளை எதிர்த்து விரையும் யானைகளைப் போல அவர்களை எதிர்த்து விரைந்தனர். (உமது மகன்களில்) துர்முகன், துர்ஜயன், இளைஞனான துர்மர்ஷணன், சத்துருஞ்சயன், சத்துருஸஹன் ஆகிய {ஐந்து} புகழ்பெற்ற வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டுக் கேகயச் சகோதரர்களை (கேகயச் சகோதரர்கள் ஐவரை) எதிர்த்துச் சென்றனர்.
- See more at: http://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-080.html#sthash.11RsqZ8l.dpuf



பீமசேனனின் ருத்ரதாண்டவம்! - துரோண பர்வம் பகுதி – 154



அப்போது உமது மகன்களான துர்மதனும், துஷ்கர்ணனும், ஒரே தேரில் இருந்து கொண்டு கணைகளால் பீமனைத் துளைத்தனர்.(37) பிறகு, கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனன், கிருபர், சோமதத்தன், பாஹ்லீகன் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பாதத்தால் மிதித்தே வீரத் துர்மதன் மற்றும் துஷ்கர்ணனின் அந்தத் தேரை பூமிக்குள் மூழ்கச் செய்தான்.(38, 39) சினத்தால் நிறைந்த அவன் {பீமன்}, வலிமையும், துணிவும் மிக்க உமது மகன்களான துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகியோரைத் தன் கை முட்டிகளால் தாக்கி நசுக்கி உரக்க முழங்கினான் [4].(40) அப்போது துருப்புகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன. பீமனைக் கண்ட மன்னர்கள், “தார்தராஷ்டிரர்களுக்கு மத்தியில் பீமனின் வடிவில் போரிட்டுக் கொண்டிருப்பது ருத்ரனே” என்றனர்.(41) இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து, தங்கள் விலங்குகளைப் பெரும் வேகத்தில் தூண்டி அங்கிருந்த தப்பி ஓடினர். உண்மையில், அவர்களில் இருவராகச் சேர்ந்து ஓடுவதாக எவரும் தென்படவில்லை {அனைவரும் தனித்தனியாகச் சிதறி ஓடினர்}.(42) - See more at: http://mahabharatham.arasan.info/2016/10/Mahabharatha-Drona-Parva-Section-154.html#sthash.qOarcqm2.dpuf



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

துஷ்கர்ணனை ஏற்கனவே சதானீகன் கொன்றதாக இருப்பது தவறாக இருக்கலாமோ? எனில் பின்வரும்படியாக வரும் என எண்ணுகிறேன்,

களங்கமற்ற அந்தப் போர்வீரன் {சதானீகன்}, மனோ வேகம் கொண்டவையும், பல்வேறு நிறங்களில் இருந்தவையுமான துஷ்கர்ணனின் குதிரைகள் அனைத்தையும் பனிரெண்டு {12} கூரிய கணைகளால் கொன்றான். பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட சதானீகன், நன்கு குறிபார்க்கப்பட்டதும், விரைந்து செல்லவல்லதுமான மற்றொரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} துஷ்கர்ணனின் மார்பை ஆழமாகத் துளைத்தான். அதன் பேரில், இடியால் தாக்கப்பட்ட மரம் போலப் பின்னவன் {துஷ்கர்ணன்} பூமியில் விழுந்தான்.

துஷ்கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட கொல்லப்பட்டதாக எண்ணிய வலிமைமிக்கப் போர்வீரர்கள் ஐவரும் {கௌரவர்கள்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சதானீகனைக் கொல்ல விரும்பி, அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். - See more at: http://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-080.html#sthash.YYx0isG0.dpuf

இதுவும் மூலத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய பகுதியாகும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: துஷ்கர்ணன் மரணம்

தாமரை
Administrator
The Mahabharata in Sanskrit
Book 6
Chapter 75



49 duṣkarṇaṃ nihataṃ dṛṣṭvā pañca rājan mahārathāḥ
     jighāṃsantaḥ śatānīkaṃ sarvataḥ paryavārayan


nihata

 hurled, thrown, hit, touched struck down, smitten, slain, killed, destroyed, lost, gone   e


நிஹாதம் என்றால் வீழ்த்தப்பட்ட, கொல்லப்பட்ட, அழிக்கப்பட்ட, அடிக்கப்பட்ட என பல பொருள்கள் உண்டு. எனவே சதானீகன் துஷ்கர்ணனை வீழ்த்தினான் என்றே கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். பொதுவான பொருளான கொல்லப்பட்டான் என்பது பின்னர் வரும் துரோண பர்வத்துடன் ஒத்துப் போகாது.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: துஷ்கர்ணன் மரணம்

Marimuthu T
Eentha ThusKarnannai thaan pala eddangalil Raathey Karnanaga thavaraga suti kattapatu veetatha? slogangal preathai edukum pothu nigazntha pizaiyagakooda erukalam la.... ethu enadhu iyyam.