மஹா விஷ்ணு அவதாரம்..

classic Classic list List threaded Threaded
15 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

மஹா விஷ்ணு அவதாரம்..

NANDHA
மஹா விஷ்ணுவின் 10 அவதாரங்களை வரிசையாக கூரவும்.. எதற்காக அப்படி அவதாரம் எடுத்தார் என்ற கதையும் என்னக்கு தெளிவாக கூர முடியும் அஹ பெரியவர்களே... நன்றி...
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

தாமரை
Administrator
This post was updated on .
இந்த பதில் உங்களில் பலருக்கு வெகு அதிர்ச்சி தருவதாக இருக்கும். ஏனெனில் சாதாரண மக்களுக்கு தெரிந்த வரிசை

1. மச்ச அவதாரம்
2. கூர்ம அவதாரம்
3. வராக அவதாரம்
4. நரசிம்ம அவதாரம்
5. வாமன அவதாரம்
6. பரசுராம அவதாரம்
7. இராம அவதாரம்
8. பலராம அவதாரம்
9. கிருஷ்ண அவதாரம்
10. கல்கி அவதாரம்.

ஆனால் முதல் அதிர்ச்சி - முதல் அவதாரம் மச்ச அவதாரம் அல்ல. வராஹ அவதாரமே முதல் அவதாரம் ஆகும்.

பிரம்மனின் படைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஸ்வாம்பிய மனு, சப்தரிஷிகள், பிரஜாதிபதிகள், தேவர்கள் என்று மேல்நிலைப் படைப்புகள் படைக்கப்பட்டு புவியில் உயிர்கள் படைக்கப்பட தேடியபோது பூமி இல்லை. வெறும் நீர்தான் இருந்தது.

காரணம் இரண்யாட்சன் பூமியை கடலில் மூழ்கடித்து வைத்திருந்தான்.

அந்த பூமியை மீட்டெடுக்க, இரண்யாட்சனை ஒழிக்க உருவெடுத்த அவதாரமே வராஹ அவதாரம் ஆகும். இவர் பெயரிலேயே இந்தக் கல்பம் ஸ்வேத வராஹ கல்பம் என அழைக்கப்படுகிறது. இவர் இரண்யாட்சனை ஒழித்து பூமியை மீட்டு மணந்தார். அதாவது பூமாதேவியே விஷ்ணுவின் முதல் மனைவி ஆவார். திருமகளான இலக்குமி பின்னர் மணந்து கொள்ளப்பட்டவர்.

அடுத்து எடுத்த அவதாரம்? அது நரசிம்ம அவதாரம் ஆகும்.

இரண்யாட்சனின் சகோதரன் இரணிய கசிபு அண்ணனைக் கொன்ற விஷ்ணுவின் மேல் கடுங்கோபம் கொண்டு அவரை வெறுத்தான். பிரம்மனை நோக்கி தவம் புரிந்து பல சக்திகளையும் பெற்றான். சாகாவரம் கேட்டான். பிரம்மன் கொடுக்க இயலாத வரம் சாகாவரம். காரணம் பிரம்மனின் படைப்புகள் அனைத்துமே நிரந்தரமற்ற மாயை ஆகும். பிரம்மையை செய்வதாலேயே பிரம்மன் என்று அழைக்கப்படுகிறார் அவர். அவரே சாகாவரமற்றவர் என்னும் பொழுது அவரால் சாகாவரத்தை கொடுக்க இயலாது. அதனால் பல சாத்தியக்கூறுகளைக் கோர்த்து ஒரு வரமாய் பெற்றான் இரணிய கசிபு. ஆனால் இன்றைய வக்கீல்களைப் போல அத்தனை கோர்ப்புகளிலும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து அவனை மாய்த்து பிரகலாதனுக்கு அருளினார் விஷ்ணு.

மூன்றாவது அவதாரம், கூர்ம அவதாரமாகும். இது பிரகலாதனின் பேரன் மஹாபலியின் ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்டது. தேவர்களின் ஆணவத்தினால் அவர்கள் துர்வாசரால் சபிக்கப்பட்டு சக்தியிழந்தனர். அனைத்து செல்வங்களும் பாற்கடலில் மறைந்தன. தேவர்கள் விஷ்ணுவிடம் சரணடைய அவர் அளித்த உபாயத்தின் படி மந்தார மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு அசுரர்களுடன் ஒப்பந்தமிட்டு பாற்கடலைக் கடைந்தனர். அப்பொழுது கூர்ம வடிவெடுத்து மலையை நிலை நிறுத்தினார் இறைவன். முதலில் வெளிவந்தது ஜேஷ்டா தேவி எனப்படும் மூதேவி.. அடுத்து வாசுகி ஆலகால விஷத்தைக் கக்க அதை சிவன் உண்டார். பின்னர் உச்சைஸ்ஸ்வ்ரம் என்னும் குதிரை, ஐராவதம், சந்திரன், மஹாலஷ்மி, கௌஸ்துப மணி இப்படி பலசெல்வங்கள் வெளிவந்தன. தேவர்களும் அசுரர்களும் செல்வங்களைப் பிரித்துக் கொள்ள விஷ்ணு மகாலஷ்மியை மணந்தார். பின்னர் தேவாசுரர்கள் சோர்ந்துவிட விஷ்ணு அபராஜித அவதாரம் எடுத்து ஆயிரம் கைகளால் தாமொருவருவராகவே கடைய தன்வந்திரி அமுதகலசத்துடன் வெளிப்பட்டார். பின்னர் மோகினி வடிவம் எடுத்து அசுரர்களுக்கு அமுதம் சேராமல் காக்க தேவாசுர யுத்தம் நடந்தது. இதில்  பிரஹலாதனின் மகனும், பேரன் மஹாபலிச் சக்ரவர்த்தியும் அசுரர்கள் சார்பில் போரிட்டு தோற்றனர்.

நான்காவது  அவதாரம் வாமன அவதாரம்

தேவாசுர யுத்தத்தில் தோற்ற மஹாபலி பல தவங்கள் செய்து வலிமை பெற்று மூவுலகையும் வென்று நூறு அஸ்வமேத யாகங்கள் செய்யத் திட்டமிட்டு 99 யாகங்களை முடித்து விட்டான். 100 வது யாகத்தின் போது கஸ்யபரின் மகனாக உபேந்திரன் என்ற பேரில் பிறந்து வளர்ந்த குள்ளரான வாமனர், மூன்றடி மண் கேட்டு மஹாபலியை ஆட்கொண்டார். அடுத்த இந்திரனாக இந்த மஹாபலியே பட்டமேற்பார். அதுவரை இவர் பாதாளத்தில் இருப்பார் என்பது புராணம்

ஐந்தாவது அவதாரம் மச்ச அவதாரம்.

மச்ச அவதாரம் 7 வது மனுவான வைவஸ்வத மனு காலத்தில் எடுத்த அவதாரமாகும். வைவஸ்வத மனுவின் உண்மையான பெயர் சத்தியவிரதன். இவன் சூரியனின் மகன் ஆவான். அதனால் இவன் குலமே சூரிய குலம் ஆயிற்று. இவன் கோதாவரி நதிபாயும் திராவிட நாட்டின் பகுதியை ஆண்டவன். இதற்கு முந்தைய சாக்ஷூச மனுவந்தரம் முடிந்ததால் பிரளயம் உண்டாகி பூமி நீரில் மூழ்கியது. அப்பொழுது பிரம்மன் நித்திரைக்கு போக அவர் கையில் இருந்த வேதங்களை அசுரன் திருடிக் கொண்டு கடலில் பதுங்கினான். சிறு மீனாக சத்தியவிரதனுக்கு கிடைத்த மீன் நாளுக்கு நால் பெரிதாக அதை கடலில் விட்ட சத்தியவிரதனை பெரிய கப்பல் கட்டி சப்த ரிஷிகள் மற்றும் தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களோடு கடலில் செல்லச் சொல்லி விட்டு அசுரனைக் கொன்று வேதங்களை மீட்டார். அலைகளில் தத்தளித்த கப்பலை  நிலை நிறுத்தி பிரளயம் ஓய்ந்த பின் கரைசேர்த்தார். அந்த சத்தியவிரதனே வைவஸ்வத மனு ஆக ஆக்கப்பட்டார். இவரை சிரார்த்த தேவர் என்றும் சொல்வார்கள்.

ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம்.

இந்த வைவஸ்வத மனுவின் வழியே வந்த சூரிய குலத் தோன்றலே பரசுராமர் ஆவார். பரசுராமரின் கதை அனைவருக்கும் தெரிந்ததே.

இதன்பிறகு இராம அவதாரம், பலராம அவதாரம் கிருஷ்ண அவதாரம் என்பவை இந்த சதுர்யுகத்தைச் சார்ந்தது என்பதால் நம் அனைவருக்கும் வரிசை தெரியும். கல்கி அவதாரம் கலி-கி அவதாரம் அதாவது கலியுகத்தின் அவதாரம் என்று பொருள்படும். அதே சமயம் கல் - கி அவதாரம் அதாவது நாளைய அவதாரம் என்றும் பொருள்படும்.

விஷ்ணு பலப்பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.

சனத்குமாரர், கபிலர், நாரதர், வியாசர், கார்த்தவீர்யாச்சுனன், ரிஷப நாதர் (சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர்) புத்தர், நர-நாராயணர், தத்தாத்ரேயர் இப்படி 22 அவதாரங்கள் பாகவத புராணத்திலும் விஷ்ணு புராணத்திலும் சொல்லப்படுகின்றன.

இப்பொழுது இரண்டு முக்கிய தத்துவங்களைச் சொல்லப் போகிறேன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

தாமரை
Administrator
கார்த்த வீர்யார்ச்சுனன் விஷ்ணுவின் அவதாரம். அவர் இன்னொரு விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரால் கொல்லப்படுகிறார். அதே பரசுராமர் இராமனால் கர்வ பங்கம் செய்யப்படுகிறார்.

விஷ்ணுவின் அவதாரங்களை மூன்று வகைகளாக பிரிக்கிறார் வியாசர்

1. பூர்ணாவதாரம்
2. அமிசாவதாரம்
3. ஆவேசஅவதாரம்இராம, கிருஷ்ண, வாமன, பரசுராம அவதாரங்கள் பூர்ணவதாரம். இவற்றில் பிறப்பு - வாழ்க்கை - மறைவு(பலராமர் சிரஞ்சீவி) என முழுதாய் வாழ்ந்திருப்பார்.

மச்சாவதாரம், வராக அவதாரம் போன்றன அமிசாவதாரம். ஒரு காரியத்திற்காக் பகவானின் ஒரு அம்சம் அவதாரமாவது. இவற்றிற்கு பிறப்பு இருக்காது வாழ்க்கை இருக்காது

நரசிம்மம் - ஆவேச அவதாரம். - சட்டெனத் தோன்றி சட்டென மறைவது

அடுத்து பார்க்க வேண்டியது

1. தூக்கத்தில் தொலைத்த வேதத்தை மீட்க - தூங்கா மீனாக அவதரித்தார். மீன் உறங்க்குவதில்லை
2. அவசரத்தில் அடைந்த சாபத்தை நீக்க நிதானமான ஆமையாக அவத்ரித்தார்
3. கீழ்தரமாக பூமியை ஒளித்த இரண்யாட்சனை ஒழிக்க கீழான பன்றியாகத் தோன்றினார்
4. மனித மிருகமான இரணிய கசிபுவை ஒழிக்க மிருக மனிதனாக தோன்றினார்
5. பெருமை வளர்ந்த மஹாபலி ஆணவம் அடக்க குள்ளனாய் வந்தார்
6. வெறி கொண்டா கார்த்தவீர்யார்ச்சுனனை ஒழிக்க கோபமுள்ள பரசுராமனாய் வந்தார்
7. பிறன்மனை விழைந்த இராவணனை ஒழிக்க ஏகபத்தினி விரதனாய் வந்தார்
8. பலத்தை பலத்தால் ஒழிக்க பலராமனாக வந்தார்.
9. சூழ்ச்சி, அராஜகம் ஒழிக்க மதி நுட்பம் கூடிய கிருஷ்ணனாக வந்தார்.

ஆக இறைவன் கூட ஒரு தண்டனை வழங்கும் முன் அதற்குத் தன்னை தகுதியானவாக ஆக்கிக் கொள்கிறான். பரசுராமன் ஏன் இராவணனைக் கொல்லவில்லை என்பதற்கு இதுவே விளக்கமாகும்.

அடுத்ததாக

மக்கள் இந்த பத்து அவதாரங்களில்

வராக அவதாரம்
நரசிம்ம அவதாரம்
இராம அவதாரம்
கிருஷ்ண அவதாரம் ஆகிய நான்கு அவதாரங்களுக்கே பெரும்பாலும் கோவில் கட்டுவர். பலராமர் எப்பொழுதும் கிருஷ்ணனுடன் இருப்பார்.

காரணம் இவை ஐந்துமே மக்களுக்காகவும் பக்தர்களுக்காகவும் எடுக்கப்பட்ட அவதாரங்கள்.

மச்சம், கூர்மம், வாமனம், பரசுராமர் ஆகியவை தேவர்களுக்காக எடுக்கப்பட்ட அவதாரங்கள். எனவே இவற்றிற்கு முக்கிய வழிபாடு கிடையாது.

கல்கி அவதாரம், யுக முடிவுக்கு என்பதால் பத்திலொன்றாக மரியாதையே தவிர தனி கோவில் கிடையவே கிடையாது.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

தாமரை
Administrator
புனமூன்றில் மேய்ந்து வழிஐந்தில் சென்று
இனமான ஏழ்குள நீருண்டு கனமான
காவொன்பதில் சென்று காடவர்கோன் பட்டணத்தில்
போவது வாசல்பத்தில் புக்கு

மூன்று காலங்களில் மேய்ந்து
ஐம்புலன்களின் வழியே
ஏழுலகையும் அறிந்து
நவத்துவாரங்களின் வழியே பிராணன் சென்று
காடவர் கோன் - தேவர்களுக்கும் தேவனான பரந்தாமன்
பட்டிணத்தில் - வைகுண்டத்தில் பரமபதத்தில்
போவது - இடம் பெறுவது
வாசல் பத்தில் - அவனின் திரு அவதாரங்கள் பத்தில் (மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம,வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி)
புக்கு - சரண்புகுந்து
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

NANDHA
நன்றி திரு.தாமரை ஐயா உங்கள் வெளக்கம் என்னை கொஞ்சம் தெளிவு பெற செய்தது.. முன்ற வது அவதாரம் ஆனா அஹ கூர்ம அவதாரம் மற்றும் அதன் முழு கதையும் என்னக்கு கொஞ்சம் detail அஹ சொல்ல முடியும் அஹ ஐயா...
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

NANDHA
In reply to this post by தாமரை
நன்றி திரு.தாமரை ஐயா உங்கள் வெளக்கம் என்னை கொஞ்சம் தெளிவு பெற செய்தது.. முன்ற வது அவதாரம் ஆனா அஹ கூர்ம அவதாரம் மற்றும் அதன் முழு கதையும் என்னக்கு கொஞ்சம் detail அஹ சொல்ல முடியும் அஹ ஐயா...
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

Ramesh
In reply to this post by தாமரை
தங்கள் விளக்கத்திற்கு நன்றி திரு.தாமரை அவர்களே,

        விஷ்ணு புராணத்திலும், பாகவத புராணத்திலும் பகவான் எண்ணற்ற அவதாரங்கள் செய்ததாக கூறுகின்றன, அவற்றில் பிரதானமாக பத்து அவதாரங்களையே தசாவதாரம் என்று கூறுகின்றோம். இருப்பினும் இவற்றில் பரசுராமர், மற்றும் பலராமர் அவதாரங்கள் பகவானின் நேரடி அவதாரங்கள் கிடையாது, அவை ஆவேச அவதாரங்கள் என்றே நான் சில உபன்யாசங்களில் கேட்டிருக்கிறேன்.
       
      திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசம் ஒன்றில் நான் கேட்ட விஷயத்தை இங்க முன் வைக்க விரும்பிகிறேன். பகவானுடைய அவதாரங்கள் மூன்று வகைப்படும், அவை பூர்ணாவதரம், அம்ச அவதாரம், ஆவேச அவதாரம். பூர்ண அவதாரம் என்பது பகவான் நேரடியாக தானே அவதாரம் செய்வது (ராமர், கிருஷ்ணர் போன்று), ஆவேச அவதாரம் என்பது இன்னொரு ஜீவாத்மாவின் மேல் தான் ஆவேசிப்பது (பரசுராமர், பலராமர் போன்று), அம்ச அவதாரம் என்பது தன் அம்சமான சக்தியினை இன்னொரு ஜீவாத்மாவின் மேல் செலுத்துவது (கபிலர், கார்தவீரியர்ஜுனன் போன்று).
        திருமங்கையாழ்வார் தன் பாசுரத்தில் பகவானுடைய தசாவதாரம் பற்றி குறிப்பிடும்போது “முன்னுவி ராமனாய், தானுமாய், பின்னுவி ராமனாய், தாமோதரனாய்” என்கிறார். முன்னுவி ராமன் பரசு ராமன், பின்னுவி ராமன் பல ராமன், அப்படியென்றால் நடுவில் ராமனாய் என்று கூறாமல் ஏன் தானுமாய் என்று கூறுகிறார். ஏனெனில் தசரத ராமன் தான் எம்பெருமானின் பூர்ணாவதரம், மற்ற இரண்டும் அவனது ஆவேச அவதாரங்கள்.
மேலும் வால்மீகி இராமாயணத்தில் பரசுராம கர்வபங்கத்தின் போது அவரிடம் இருந்த வைஷ்ணவ சக்தி அவரை விட்டு விலகியதாக குறிபிடப்பட்டுள்ளது. அதாவது பரசுராமரில் ஆவேசித்து இருந்த எம்பெருமான் அவரை விட்டு நீங்கியதாக கொள்ளலாம். அதன் பிறகு அவர் அவதாரமாக இல்லாமல் ஒரு ரிஷியாகவே இருக்கிறார் என்பது என் கருத்து. அதனால் தான் பீஷ்மரால் பரசுராமரை ஜெயிக்க முடிந்தது. திரு.வேளுக்குடி கிருஷ்ணன், திரு.அனந்த பத்மநாபாசாரியார் ஆகியோர் தங்கள் உபன்யாசத்தில் பரசுராமரும் ஒரு ஜீவாத்மாவே என்கிறார்கள்.

        நாராயணன் தான் நேரடியாக பிறக்காமல் இன்னொரு ஜீவாத்மாவின் மேல் ஆவேசித்து (அதாவது பிரவேசித்து) செய்வது ஆவேச அவதாரம் என்றே நான் கேள்விபட்டிருக்கிறேன். தாங்கள் சட்டென தோன்றி சட்டென மறையும் அவதாரமே ஆவேச அவதாரம் என்று கூறினீர்கள். இது நான் கேள்விபட்டதிற்க்கு சற்று முரண்பாடாக இருக்கிறது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.
       
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

தாமரை
Administrator
பூரணாவதாரம் என்பது இராம அவதாரமும் கிருஷ்ண அவதாரமும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை.

காரணம், பகவானின் அனைத்து கல்யாண குணங்களும் நிறைந்து முழு வாழ்க்கையான அவதாரங்கள் அவை.

அம்ச அவதாரம், ஆவேச அவதாரம் என்பதில்தான் சற்று வேறுபாடுகள் உண்டு.

ஆவேச அவதாரம் என்பது நீங்கள் சொல்வது போல தற்காலிகமாய் ஒரு ஆன்மாவில் இருக்கும் அவதாரம் என்பது விசிஷ்டாத்வைதக் கோட்பாடு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் அந்தத் தத்துவத்தை பின்பற்றுவதால் அவரின் கூற்று அதை ஒத்தே இருக்கும்.

அவருடைய உரை எம்பி3 வடிவில் என் சேமிப்பில் உள்ளது. கிடைக்கும்போது பதிகிறேன்.

நரசிம்மர் வேளுக்குடி அவர்களைப் பொறுத்த வரை என்ன அவதாரம்? இதைக் கேட்டால் புரிந்து விடும்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

திருவாழ்மார்பன்
ஆவேச அவதாரத்தை இரண்டாகப் பிரிப்பார்கள்.
1.ஸ்வரூப ஆவேச அவதாரம்
2.சக்தி ஆவேச அவதாரம்.

ஸ்வரூப ஆவேச அவதாரம்- பகவான் ஒரு ஜீவாத்மாவின் பேரில் முழுமையாக ஆவேசித்தல்
சக்தி ஆவேச அவதாரம் - தன்னுடைய ஒரு சக்தியை மட்டும் ஒரு பிரயோஜனத்துக்காக ஒரு ஜீவாத்மாவிடம் வைத்தல்.

இதில் கார்த்தவீர்யார்ஜுனன் சக்தி ஆவேச அவதாரம். பரசுராமர் ஸ்வரூப ஆவேச அவதாரம். இராமன் பூர்ணாவதாரம்.
அதனால் தான் சக்தி ஆவேச அவதாரமான கார்த்தவீர்யார்ஜுனன் ஸ்வரூப ஆவேச அவதாரமான பரசுராமரிடம் தோற்கிறான். பரசுராமர் பூர்ணாவதாரமான இராமனிடம் தோற்கிறார்.

பலராமனும் பரசுராமனும் ஸ்வரூப ஆவேச அவதாரங்கள். நரசிம்மர் பூர்ணாவதாரமாகும். எனவே தான் ஆவேச அவதாரங்களை உபாசிக்க மாட்டார்கள்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

தாமரை
Administrator
காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்க கார்த்த வீர்யார்ச்சுனனை உபாசிக்கிறார்கள் திருவாழ்மார்பன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

திருவாழ்மார்பன்
 நன்றி திரு.தாமரை அவர்களே. இந்த தகவல் அடியேனுக்கு புதிது.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

தாமரை
Administrator
In reply to this post by தாமரை
நரசிம்ம அவதாரம் ஆவேச அவதாரம் என்பது இந்தப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது

http://www.tamilvu.org/library/l4211/html/l4211ind.htm
 
108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு
ஆசிரியர்:
டாக்டர்.வைணவச் சுடராழி
ஆ.எதிராஜன் B.A.,
காரைக்குடி

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=17
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

Ramesh
In reply to this post by தாமரை
காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்க கார்த்த வீர்யார்ச்சுனனை உபாசிக்கிறார்கள் திருவாழ்மார்பன்.

                  தங்கள் கூற்று உண்மையே நண்பரே, திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு சுந்தரராஜ பெருமாள் கோவிலில் பிரகாரத்தில் உள்ள கார்தவீர்யார்ஜுனனிடம் இன்றும் மக்கள் தங்களுடைய தொலைந்த பொருள் திரும்ப கிடைக்க பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. மேலும் சில கோவில்களிலும் அவருக்கு சந்நிதி இருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன், இருப்பினும் அவருக்கென்று தனியாக ஆலயம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
   
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

shyam
திரு தாமரை அவர்களே ,

                      பலராமர் ஆதிசேஷ நாகத்தின்  அவதாரம் என்று படித்ததாக நியாபகம். ஆனால் தாங்கள் அவர் திருமாலின் அவதாரம் என்கிறிர்கள்.எவ்வாறு என சற்று விளக்கமாக கூறுமாறு வேண்டுகிறேன்.பலராமரும் லக்ஷ்மணனும் ஆதி சேஷனின் அவதாரம் என்று தானே அறியப்படுகிறார்கள் ?

சற்று விளக்கம் அளிக்குமாறு வேண்டுகிறேன்

நன்றி
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: மஹா விஷ்ணு அவதாரம்..

சதீஷ் சண்முகம்
ஷ்யாம்,

ஆதிஷேசன் தான் பலராமன், ராம அவதாரத்தில்  தம்பியாக பிறந்த லக்ஷ்மணன் கிருஷ்ணாவதாரத்தில் அண்ணனாக அவதரிதுள்ளார்.

ராமவதாரத்தில் லக்ஷ்மணன் ஆற்றிய கடமையின் நன்றி கடனாக துவாபர யுகத்தில் தனது அவதாரத்தில் ஒரு பங்கை பலராமருக்கு கொடுத்தார் என கேள்விபட்டிருக்கிறேன்.

நன்றி.