கர்ணனின் பிறப்பு இரகசியம்..

classic Classic list List threaded Threaded
8 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

கர்ணனின் பிறப்பு இரகசியம்..

நம்பி
இன்றைய அத்தியாயம் படித்த பின், ஒரு சிறு சந்தேகம்...

சஞ்சயன் பீஷ்ம-கர்ண சந்திப்பை விளக்குகிறார்...திருதாராஷ்டிரன் கர்ணன் பிறப்பு இரகசியம் அறிகிறார், ஏன் இந்த விசயம் துரியோதனனுக்கு தெரியப்படுத்தவில்லை? பீஷ்மரும், கண்ணனும் இரகசியம் காக்க காரணம் தெளிவு, ஆனால் ஏன் இந்த உண்மையை திருதாராஷ்டிரன் தெரியப்படுத்த முயலவில்லை? எதேனும் விளக்கம் உள்ளதா இதற்க்கு?

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணனின் பிறப்பு இரகசியம்..

தாமரை
Administrator
பீஷ்ம பர்வத்தின் ஆரம்பத்தைக் கவனித்தால் பீஷ்மர் இறந்து விட்டார் என்றே சொல்ல ஆரம்பிக்கிறான் சஞ்சயன். ஆக பத்தாம்நாள் வரை சஞ்சயனிடம் போரைப் பற்றி திருதராஷ்டிரன் கேட்கவே இல்லை எனலாம்.

அதற்குப் பின்னும் த்ருதராஷ்டிரன், மற்றும் சஞ்சயன் ஆகியோர் கர்ணனை சூதன், இராதேயன், வைகர்த்தணன் மகன் என அழைக்கிறான். ஆகவே கர்ணன் - பீஷ்மர் சந்திப்பு திருதராஷ்டிரனுக்கு சஞ்சயனால் சொல்லப்பட்டது என்பது இடைச் செருகலாக இருக்கலாம்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணனின் பிறப்பு இரகசியம்..

தாமரை
Administrator
துரோணபர்வம் இரண்டாம் பாகத்தில் கர்ணன் போர்களத்திற்கு புறப்பட்டு வருகிறான் என்று சொல்லப்படுகிறது. எனவே கர்ணன் பீஷ்மர் சந்திப்பு பிற்காலச் சேர்க்கையாகவே இருக்க முடியும்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, பீஷ்மர் கொல்லப்பட்டதை அறிந்த சூத சாதியைச் சேர்ந்த அதிரதன் மகன் {கர்ணன்}, துயரத்தில் விழுந்திருந்ததும், அடியற்ற கடலில் மூழ்கும் படகுக்கு ஒப்பானதுமான உமது மகனின் {துரியோதனனின்} படையை, ஒரு சகோதரனைப் போலக் காக்க விரும்பினான். [உண்மையில்], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைக் கலங்கடிப்பவனும், வில் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரரும், மனிதர்களில் முதன்மையானவரும், மங்காப் புகழ் கொண்ட வீரருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} (அவரது தேரிலிருந்து) வீழ்த்தப்பட்டதைக் கேள்விப்பட்டு (போர்க்களத்திற்கு) விரைந்து வந்தான். தேர்வீரர்களில் சிறந்தவரான பீஷ்மர் எதிரியால் கொல்லப்பட்ட பிறகு, தன் பிள்ளைகளைக் காக்க விரும்பும் தந்தையைப் போல, கடலில் மூழ்கும் படகுக்கு ஒப்பான அந்தப் படையைக் காக்க விரும்பி கர்ணன் அங்கே வந்தான். - See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Drona-Parva-Section-002.html#more
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணனின் பிறப்பு இரகசியம்..

தாமரை
Administrator
இன்னும் சில அத்தியாயங்கள் படித்தால், கர்ணன் - பீஷ்மர் உரையாடல், கர்ணன் ஆதரவாளர்களால் சொருகப்பட்ட இடைச் செருகல் என்பது அப்பட்டமாகப் புரிந்துவிடும்.

இன்றைய பகுதியைப் பாருங்கள்.. இப்பொழுதுதான் தேரில் போர்களம் வந்த கர்ணன் பீஷ்மரைச் சந்திக்கச் செல்கிறான்.

மனிதர்களில் காளையும், வீரரும், உமது தந்தையுமான அந்தப் பீஷ்மரை, போரில் வீழ்த்தப்பட்டு, அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்டு, வீரப் படுக்கையில் கிடக்கும் அந்தப் பாரதர்களின் பாட்டனைக் கண்டு, துயரால் நிறைந்து, கிட்டத்தட்ட உணர்வற்ற நிலையில் இருந்த அந்த அதிரதன் மகன் (கர்ணன்), பெரும் பாசத்துடன் தன் தேரில் இருந்து இறங்கினான். (சோகத்தால்) பீடிக்கப்பட்டு, கண்ணீரால் கலங்கிய கண்களுடன் இருந்த அவன் {கர்ணன்} கால்நடையாகச் சென்றான்.

கூப்பிய கரங்களுடன் அவரை {பீஷ்மரை} வணங்கிய அவன் {கர்ணன்}, அவரிடம் {பீஷ்மரிடம்}, “நான் கர்ணன்! நீர் அருளப்பட்டிருப்பீராக! ஓ பாரதரே {பீஷ்மரே}, புனிதமான, மங்கலகரமான வார்த்தைகளை என்னிடம் பேசுவீராக, கண்களைத் திறந்து என்னைக் காண்பீராக. முதிர்ந்தவரும், மரியாதைக்குரியவரும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான நீரே கொல்லப்பட்டுத் தரையில் கிடைப்பதால், எந்த மனிதனும் தன் நற்செயல்களின் கனிகளை {புண்ணியப் பலன்களை} இவ்வுலகில் அனுபவிக்கமாட்டான் என்பது நிச்சயமாகிறது.
- See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Drona-Parva-Section-003.html#sthash.NLWWIBV6.dpuf
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணனின் பிறப்பு இரகசியம்..

திருவாழ்மார்பன்
அடியேனுடைய கருத்தும் அது தான். அப்படியெனில் கர்ணன் பிறப்பு இரகசியம் கௌரவர்கள் யாருக்கும் இறுதி வரை தெரியவில்லையா. அவன் பிறப்பு இரகசியம் தெரிந்தவர்கள் கர்ணன், கண்ணன் மற்றும் குந்தி ஆகியவர்கள் தானா?
யுத்தம் முடிந்த பிறகு அனைவருக்கும் தர்ப்பணம் செய்கிறார் யுதிஷ்டிரர். அப்பொழுது தான் குந்தி அவரிடம் கர்ணனுக்கும் தர்ப்பணம் செய்யுமாறு கூறுகிறாள். யுதிஷ்டிரர்  ஏன் என்று கேட்க குந்தி உண்மயை சொல்வதாக ஸ்திரி பர்வத்தில் வருகிறது. (இதனால் நொந்த யுதிஷ்டிரன் தன் தாய் இரகசியத்தை காத்ததனால் தான் சொந்த சகோதரனையே கொல்ல நேர்ந்ததாக நினைத்து பெண்களிடத்தில் இனி இரகசியம் தங்காது என சபித்ததாக சொல்வர்கள்)

ஆக கர்ணன் உயிரோடிருக்கும் போது அவன் பிறப்பின் இரகசியம் தெரிந்தவர்கள் மூவர் தானா?

நன்றி,
திருவாழ்மார்பன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணனின் பிறப்பு இரகசியம்..

தாமரை
Administrator
வியாசருக்கும் கர்ணனின் பிறப்பு ரகசியம் தெரிந்திருந்தது.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணனின் பிறப்பு இரகசியம்..

திருவாழ்மார்பன்
ஆம் உண்மை தான் நண்பரே. விதுரர் போன்ற ஞானிகளுக்குமே தெரியாதது வியப்பளிக்கிறது. வியாசர் முன் வந்து அந்த இரகசியத்தை வெளிப்ப்டுத்தியிருக்கலாமே?

வியாசருக்கு தெரிந்திருந்தும் வார்த்தைக்கு வார்த்தை சூதபுத்திரன் என்றும் ராதேயன் என்றும் ஸ்லோகங்களில் விளிப்பது ஏன்? அப்படியெனில் அவருக்கும் கர்ணனை இழிவுபடுத்துவதில் நோக்கம் இருக்கிறதா என்று கர்ணன் ஆதரவாளர்கள் கேட்கும்படி ஆகிவிட்டதே?

நன்றி,
திருவாழ்மார்பன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: கர்ணனின் பிறப்பு இரகசியம்..

தாமரை
Administrator
வியாசர் கட்டுரை எழுதவில்லை. கதையை எழுதியிருக்கிறார். அதனால் என்ன நடந்தது என்று எழுத முடியுமே தவிர த்ம் கருத்தை எழுதவில்லை.

கர்ணன் யார் என்று அவரிடம் யாரும் கேட்காததற்கு அவர் காரணமில்லை.
கேட்டிருந்தால் சொல்லியிருக்கக் கூடும். கர்ணன் அனாதையாக இல்லாமல், தாய், தந்தை, சகோதரர்களுடன் இருந்ததால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை என நினைக்கிறேன்.