யுகம்

classic Classic list List threaded Threaded
4 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

யுகம்

NANDHA
நான்கு யுகம்களே பற்றி கொஞ்சம் சொல்ல அஹ முடியும் அஹ.. ராமாயணம், மகாபாரதம் இதுகால முத்தலைய ஒரு இதிகாசம் இர்ருகுனு கேள்வி படன் அதன் பேரு குட அஹ சிவபுராணம் இது உண்மைய.. இது முதல் யுகம் ல நடந்த கதை நு சொன்னாக அஹ.. முதன்மை கடவுள் யார்..
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: யுகம்

Ramesh
வணக்கம் திரு.நந்தா அவர்களே,

        நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுடன் விவாத மேடையில் உரையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

        தாங்கள் நான்கு யுகங்கள் பற்றி கேட்டு இருந்தீர்கள், அதற்கு எனக்கு தெரிந்த வரையில் உங்களுக்கு சொல்கிறேன். நான்கு யுகங்களாவது கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், மற்றும் கலியுகம் ஆகும். இந்த நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு சதுர் யுகம் என்று கூறுவர். நம்முடைய சாஸ்திரங்களில் ஒரு சதுர்யுகம் என்பது தேவர்களுக்கு ஒரு ஆண்டாக கூறுப்படுகிறது.
கீதையில் எட்டாம் பகுதியில் உள்ள 17ஆம் ஸ்லோகம் பின்வருமாறு கூறுகின்றன.

பிரம்மாவிற்கு ஆயிரம் சதுர்யுகம் ஒரு பகலாகும், ஆயிரம் சதுர்யுகம் ஒரு இரவாகும்(8.17). ஆக இரண்டாயிரம் சதுர்யுகம் சேர்ந்து பிரம்மாவிற்கு ஒரு நாளாக சொல்லபடுகிறது.

        அதாவது பிரம்மனின் பகல் முடிந்தவுடன் தேவர்களின் ஆயுளும் முடிந்து விடுகிறது. மேலும் கண்ணன் சொல்கிறான் பிரம்மன் முதற்கொண்டு அனைவருக்கும் மறுபிறவி உண்டு என. பிரம்மனின் ஆயுள் முடிந்தவுடன் அனைத்து உயிருள்ள, மற்றும் உயிரறற்ற ஜட பொருள்கள் எல்லாம் சூட்சம (அதாவது உருவமற்ற) தன்மையை அடைந்து என்னுள் லயமாகிவிடும், பிறகு நான் பகல் பொழுது வரும்பொழுது மீண்டும் ஸ்ரிஸ்டியை தொடங்குவேன்.

        மேலும் மகாபாரதத்தின் படி பிரம்மனின் ஆயுள் கிட்டத்தட்ட நானுற்றி முப்பத்துஎட்டு கோடி வருடங்கள், அதன் பிறகு பூமி உட்பட அனைத்தும் நாராயணனின் வயிற்றுக்குள் சென்று விடும். ஆகவே அதுவரை பூமி இருக்கும், பல்லாயிரம் சதுர்யுகங்கள் மாறி மாறி வந்து கொண்டேஇருக்கும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: யுகம்

NANDHA
நன்றி திரு.ரமேஷ்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: யுகம்

NANDHA
In reply to this post by Ramesh
பார் கடல் ல அமிர்தம் எடுத்த கதை என்ன கொஞ்சம் தெளிவாக கூர முடியும் அஹ திரு.ரமேஷ் அவர்களே