தர்மன் தன் மனைவியை சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்? இது தர்மமா?????

classic Classic list List threaded Threaded
5 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

தர்மன் தன் மனைவியை சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்? இது தர்மமா?????

Yugathis
1. தர்மன் தன் மனைவியை  சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்? இது  தர்மமா?????

2. தர்மன் சூதாட்ட போட்டி தேவை இல்லை என ஏன் அறிவிக்கவில்லை? இது  தர்மமா?????

3. விதிபடி நடக்கும் என  தர்மன்  எப்படி சொல்ல முடியும்????? (விதி தெரிந்தவர் தான் விதிபடி நடக்கும் என சொல்ல முடியும் அப்படி எனில் விதி யாது என்று தர்மன தெரியும் ..... அப்படி எனில் தர்மர் ஏன் மதியால் வெல்லவில்லை) -----இது  தர்மமா?????Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மன் தன் மனைவியை சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்? இது தர்மமா?????

தாமரை
Administrator


http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section58.html


தர்மன் சூதாடியதற்குக் காரணம் அவன் மேற்கொண்ட நோன்பே காரணமாகும். அவன் சூதாட்டத்தை விரும்பாவிட்டாலும் அத்தனை வஞ்சனைகளுக்கும் தன்னைப் பலியாக்கிக் கொள்ளக் காரணம் இருந்தது. இந்தப்பகுதியை தெளிவாகப் படியுங்கள்.

வைசம்பாயனர் சொன்னார், "வேள்விகளில் முதன்மையான, சாதிப்பதற்குக் கடினமான ராஜசூய வேள்வி முடிவடைந்ததும், வியாசர் தனது சீடர்களுடன் யுதிஷ்டிரனிடம் வந்தார். அவரைக் கண்ட யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் எழுந்து தனது பாட்டனான அந்த முனிவரை {வியாசரை} வழிபட்டு, அவரது கால்களைக் கழுவிக் கொள்ள நீர் கொடுத்து, அமர ஆசனமும் கொடுத்தான். அந்த சிறப்புமிகுந்தவர் {வியாசர்}, விலையுயர்ந்த தங்க ஆசனத்தில் அமர்ந்து நீதிமானான யுதிஷ்டிரனிடம், "உனது இருக்கையில் அமர்" ,என்றார்.


தனது தம்பிகள் சூழ இருக்கையில் யுதிஷ்டிரன் அமர்ந்ததும், உண்மை பேசும் வியாசர், "ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே} நற்பேறில் வளர்ந்துவா. அடைவதற்கு கடினமான ஏகாதிபத்தியே மேலாதிக்கத்தை அடைந்துவிட்டாய். ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே, உன்னால் குரு குலம் வளமை அடையும். ஓ சக்கரவரத்தி {Emperor யுதிஷ்டிரா}, நான் முறையாக வணங்கப்பட்டேன். நான் உன்னிடம் விடைபெற விரும்புகிறேன்", என்றார். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கறுத்த நிறம் கொண்ட அந்த முனிவரால் {வியாசரால்} இப்படி சொல்லப்பட்டதும், அந்தத் தனது பாட்டனின் கால்களைத் தொட்டு வணங்கி, "ஓ மனிதர்களின் தலைவரே {வியாசரே}, களைவதற்கு கடினமான சந்தேகம் எனக்குள் உதித்திருக்கிறது. ஓ மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} காளையே {வியாசரே}, இதிலிருந்து என்னைக் காக்க உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. சிறப்பு மிகுந்த முனிவரான நாரதர், தெய்வீக, நடைமுறைச் சூழல், இம்மை என்ற மூன்று விதமான முற்குறிச் சகுனங்களை தெரிவித்திருக்கிறார். ஓ பாட்டா {வியாசரே}, சேதி மன்னனின் {சிசுபாலனின்} வீழ்ச்சியாக அந்த முற்குறிகள் முடிந்துவிட்டனவா?", என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா {ஜனமேஜயா},மன்னனின் {யுதிஷ்டிரனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட மேன்மையான *பராசரரின் மைந்தரும், கறுத்த நிறத்தவருமான தீவில் பிறந்த வியாசர்,  பதிமூன்று வருடங்களில் {13}, ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா} அந்த முற்குறி சகுனங்கள் அனைத்து க்ஷத்திரியர்களுக்கும் அழிவைக் கொண்டு வரும். காலத்தின் ஓட்டத்தில், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உன்னை முதன்மைக் காரணமாகக் கொண்டு, ஓ பாரதா , துரியோதனனின் பாவங்களுக்காக,  பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அழிக்கப்படுவார்கள். ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, திரிபுராவைக் கொன்றவனும், நீலத்தொண்டையுடையவனுமான பவாவை {சிவனை} நீ உனது கனவில் காண்பாய். காளையைத் தனது குறியாகக் கொண்டவனை, மனித மண்டை ஓட்டை உறிஞ்சிக் குடிப்பவனை {சிவனை}, அந்தப் பயங்கரமானவனை, கடுமையானவனை, அந்த அனைத்து உயிர்களின் தலைவனை, தேவர்களுக்குத் தேவனை, உமையின் கணவனை, ஹரன் என்றும் சர்வன் என்றும் ரிஷன் என்று அழைக்கப்பட்டு, கைகளில் திரிசூலத்துடனும், பினகா என்ற வில்லுடனும், புலித் தோல் போர்த்தியிருப்பவனை நீ உனது கனவில் காண்பாய். காளையில் அமர்ந்த படி கைலாச மலை போன்ற வெள்ளை நிறத்தில், விடாமல் பித்ருகளின் உலகத்தின் பக்கமாகத் {தென் திசையாகத்} தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அந்தச் சிவனை நீ காண்பாய். ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, அதுதான் இன்றைய உனது கனவாக இருக்கும். அந்தக் கனவைக் காண்பதால் நீ துயருறாதே. காலத்தைவிட மேன்மையானது எதுவும் இல்லை. நீ அருளப்பட்டிரு. நான் இப்போது கைலாச மலையை நோக்கிப் போகிறேன். பூமியைக் கண்ணும் கருத்துமாக உறுதியுடன், பொறுமையாக அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஆண்டு வா!" என்றார் {வியாசர்}.


வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச் சொன்ன. அந்தத் தீவில் பிறந்த சிறப்புமிகுந்த கறுப்பு நிற வியாசர், தனது சீடர்களுடன், வேதங்களின் அனைத்து விதிகளையும் கடைப்பிடித்தபடி கைலாசத்தை நோக்கிச் சென்றார். தனது பாட்டன் இப்படிச் சென்றது, துயரத்தால் உந்தப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தொடர்ந்து அந்த முனிவர் {வியாசர்} சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு அவன் {யுதிஷ்டிரன்} தனக்குள்ளேயே, "நிச்சயமாக முனிவர் {வியாசர்} சொன்னது நடந்தே தீரும். முயற்சியால் மட்டுமே விதியை வெல்ல முடியுமா?", என்று நினைத்துக் கொண்டான்,

பிறகு, பெரும் சக்தி கொண்ட அந்த யுதிஷ்டிரன் தனது தம்பிகளை அழைத்து, "மனிதர்களில் புலிகளே, தீவில் பிறந்த முனிவர் {வியாசர்} என்னிடம் பேசியதைக் கேட்டீர்கள். முனிவரின் {வியாசரின்} வார்த்தைகளைக் கேட்ட பிறகு நான் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறேன். க்ஷத்திரியர்களின் சாவுக்குக் காரணமாக இருக்கும் நான் சாவதுதான் அத்தீர்மானம். எனது அன்புக்கு உரியவர்களே, காலம் இப்படித்தான் வகுத்திருக்கிறது என்றால், நான் வாழ்வதில் பயன் என்ன?" என்று கேட்டான். மன்னனின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், "ஓ மன்னா, நினைவை அழிக்கும் இந்த பயங்கர மன அழுத்தத்துக்கு ஆளாகாதீர். தாங்கும் திறனை ஒன்றுகூட்டி, ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, எது நன்மையோ அதைச் செய்யும்" என்றான்.

உண்மையில் உறுதியான யுதிஷ்டிரன், துவைபாயனரின் {வியாசரின்} வார்த்தைகளைச் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, தனது தம்பிகளிடம், "அருளப்பட்டு இருங்கள். இந்த நாளில் இருந்து நான் மேற்கொள்ளப்போகும் நோன்பைக் குறித்துக் கேளுங்கள். நான் எந்தக் காரணத்திற்காக வாழ்ந்தாலும், இனி வரும் பதிமூன்று {13} வருடங்களுக்கு, எனது தம்பிகளிடமோ, அல்லது பூமியின் மற்ற மன்னர்களிடமோ கடுஞ்சொல்லைப் பேசமாட்டேன். எனது உறவினர்களின் கட்டளைக்குக் கீழ் வாழ்ந்து, அறம் பயின்று, எனது நோன்புக்கு முன்மாதிரியாக வாழப் போகிறேன். எனது பிள்ளைகளுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல், நான் இந்த முறையில் வாழ்ந்தால், (எனக்கும் மற்றவர்களுக்கும் இடையில்) எந்த ஒரு ஏற்பின்மையும் {முரண்பாடும்} ஏற்படாது. ஏற்பின்மையே {முரண்பாடே} உலகத்தில் போர் ஏற்படுவதற்கான காரணமாகும். போரை தூரமாக வைத்துவிட்டு, மனிதர்களில் காளைகளே, நான் அனைவருக்கும் ஏற்புடையதைச் செய்தால், உலகத்தில் என்னைக் குறித்து எந்தத் தீய கருத்தும் ஏற்படாது. தங்கள் அண்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள், அண்ணனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஏற்புடையதையே எப்போதும் செய்யும் அவர்கள் {பீமன்,அர்ஜுனன், நகுலன், சகாதேவன்} அவற்றை அங்கீகரித்து ஏற்றனர். நீதிமானான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன், சபைக்கு மத்தியில் இப்படிப்பட்ட சபதத்தை ஏற்று, புரோகிதர்களைத் திருப்திப்படித்தி, உரிய சடங்குகளால் தேவர்களையும் திருப்திப்படுத்தினான். ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, அனைத்த ஏகாதிபதிகளும் சென்ற பிறகு யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன், அமைச்சர்களுடன், தனது அன்றாட நற்சடங்குகளைச் செய்து, தனது அரண்மனைக்குள் நுழைந்தான். ஓ மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், சுபலனின் மகன் சகுனி ஆகியோர் அந்த மகிழ்ச்சிகரமான சபாமண்டபத்துடன் கூடிய வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தனர்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section45.html#sthash.kmPbn80u.dpuf


---------------------------------------------------------------------------------------------------------
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மன் தன் மனைவியை சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்? இது தர்மமா?????

தாமரை
Administrator
In reply to this post by Yugathis
சூதாட்டம்  நடக்காவிட்டால் மகாபாரதப் போர்  நடந்திருக்காது என்று சொல்ல முடியாது.

துரியோதனனுக்கு மண்ணாசை இருந்ததாக நான் நம்பவில்லை. காரணம் என்னவெனில்

1. தர்மன் முடிசூடி முப்பத்தாறு ஆண்டுகள் இந்திரபிரஸ்தம் ஆண்டான். தர்மன் சூதில் தோற்றும் 13 ஆண்டுகள் ஆயின. 49 ஆண்டுகள் அஸ்தினாபுரத்தின் சிம்மாசனம் ஏறவில்லை துரியோதனன்.

2. கர்ணனாக சபதம் செய்து திக்விஜயம் செய்து பல நாடுகளை வென்று சம்பாதித்தது கூட கந்தர்வர்களுடன் உண்டான தோல்வியின் போது பீஷ்மரின் பழிச் சொல்லைத் தாளாமல் அவனாக சபதமெடுத்ததே தவிர துரியோதனன் சொல்லி அல்ல.
http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section251.html

தர்மன் இந்திரப்பிரஸ்தம் ஆண்டது 36 ஆண்டுகள் அதன் பிறகு 36+13, 49 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிக் கட்டிலில் உட்காரவில்லை துரியோதனன். கடைசி 13 ஆண்டுகள் அவன் ஏற விரும்பாததற்கு காரணம் இருக்கலாம். பாண்டவர்கள் அழிந்த பின்தான் தனக்கு நிம்மதி என வாழ்ந்தவன் அவன். ஆனால் அரசுக் கட்டிலில் துரியோதனனை உட்கார வைப்பது பற்றி த்ருதராஷ்டிரன் 36 ஆண்டுகள் யோசிக்கவே யோசிக்காததுதான் காரணம். ஆட்சியில் அமர்ந்தால் உடனே பாண்டவர் மீது படையெடுத்து அழிந்து போய்விடுவானோ என அஞ்சி இருக்கலாம் என்பது மட்டுமே ஒரே காரணமாக இருக்க முடியும். ஆனால் அது உண்மையெனில் அவன் ஐந்து கிராமங்களைக் கொடுத்து சமாதானப்படுத்தி இருக்க வேண்டும். பாண்டவர்கள் முதல் தாக்குதல் செய்யமாட்டார்கள் என்பது அவருக்கு உறுதியாகவேத் தெரியும்.

அப்படி இருந்தால்

மண்ணாசை துரியோதனனின் பலவீனம் என்றிருந்தால் அவன் பீஷ்மர், துரோணர், கர்ணன் மூவரைக் கொண்டு உலகத்தையே அடைந்திருப்பான். ஆனால் கர்ணனின் திக் விஜயம் தவிர வேறு நாடு பிடிக்கும் போர்கள் அவன் செய்யவில்லையே. பாண்டவர்களுக்குத் தோன்றிய ராஜசூய யாகம் அவனுக்கு தோன்றவில்லை. மற்ற நாடுகளைப் பிடிக்கும் எண்ணமே இல்லை என்றுகூடச் சொல்லலாம்.

துரியோதனனின் மனோநிலை பாண்டவர் அழியவேண்டும் என்பதே. பதினாறு ஆண்டுகள் அவன் அடுத்த மன்னன் என்ற மனநிலையில் வளர்ந்திருந்தான். திடீரென பாண்டவர் வந்ததும் அவர்கள் பலமிக்கவர்களாய் இருந்ததும் அவனுக்கு தாழ்வு மனப்பான்மையையும் பொறாமையையும் உருவாக்கி விட்டது. அவன் இராச்சியத்தை விரும்பவில்லை. பாண்டவர்களின் அழிவையே விரும்பினான். அதனால் சூதாட்டம் நடக்காவிட்டாலும் போர் கண்டிப்பாக நடந்திருக்கும். போரை பதின்மூன்று ஆண்டுகள் தள்ளிப்போட்டால் பேரழிவு தவிர்க்கப்படும் என தர்மன் நினைத்ததால் தன் நோன்பிற்காக சூதாடினான்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மன் தன் மனைவியை சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்? இது தர்மமா?????

தாமரை
Administrator
அன்றைய காலத்தில் இன்று போல தனியுரிமை என்பது கிடையாது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலைவன் உண்டு. நாட்டிற்கு அரசன் போலவே.


மூத்தமகனே அடுத்த குடும்பத் தலைவன் ஆவான். அடுத்தக் குடும்பத் தலைவன் மூத்தமகனே ஆவான். சொத்துக்கள் யாவும் அவனையே சேரும். தனது சுற்றங்களைக் காக்கும் கடமையையை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் அரசனுக்கு நாடு உடமையாவது போல் குடும்பத்தவர் தலைவனின் உடமையாகிவிடுகின்றனர்.

அரிச்சந்திரன் மனைவியை விற்றபோது (அதுவும் மகனை இலவச இணைப்பாக கொடுத்து)கேட்காத கேள்வியை தர்மன் சூதாடும்போது கேட்கிறீர்களே ஞாயமா?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தர்மன் தன் மனைவியை சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்? இது தர்மமா?????

YUGATHIS
நன்றிகள் ஐயா.....

தர்மன் தன் மனைவியை  சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்?????  
 
இதற்கான பதில்/காரணம் தெரிய வந்தது.............

விதியின் வலிமை புரிந்தது....................