வாழ்த்துப் பா

classic Classic list List threaded Threaded
8 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

வாழ்த்துப் பா

தமிழ் வள்ளுவர்
ஐயா, வணக்கம்.

திரு.ஜெயவேலன் அவர்களைச் சடையப்ப வள்ளளுக்கு ஒப்பிட்டிருந்தீர்கள். ஊக்கம், ஆலோசனை, திருத்தம், நிதி ஆகிய அனைத்தும் வழங்கிடும் அவர் சடையப்பரைக் காட்டிலும் மேலானவர். அவருக்கு கோடான கோடி நன்றிகள் உரித்தாகுக.

என்னைப் பற்றி நான் இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்து விட்டேன். நான் கணக்கியல் (charted accounting) துறையில் பட்டம் பயின்று கொண்டிருக்கும் மாணவன். வயது பத்தொன்பது.
தமிழில் பெரும் ஈடுபாடு உண்டு. ஆக தற்சமயம் என்னால் தங்களுக்கு வழங்கக் கூடியது வாழ்த்துப் பா மட்டுமே. குறையிருப்பின் பொறுத்தருள்க.

அற்றைய நாள் பாரதத்தை
  அருளினனே வியாச முனிவன்
பிற்றைய நாள் செந்தமிழில்
  பெயர்த்தனனே புலவன் வில்லி
இற்றைய நாள் உரைநடையில்
  இயற்றினரே புலவர் குழாம்
மற்றைய நூல் தாக்கமதால்
  மருகினவே இவையாவும்.

கமழ் அந்நூல் மணம் யாவும்
  கண்ணெதிரே மறைந்திடவே
தமிழ் மக்கள் நலம் நாடி
  தன்மைமிகு பாரதத்தை
அமிழ்தொத்த உரைநடையில்
  அருளுகின்ற மாமணியே
இமிழ் கடல்சூழ் உலகமதில்
  இணையிலவே நின்பணிக்கு.

எண்ணத்தினை முழுமையுற
  ஏட்டதனில் வடித்திடு நாள்
வண்ணப்புவி காலத்தினை
  வென்றபெரு அறிஞருமாய்
அன்னைத்தமிழ் பதம்நாடும்
  அரும்புலவோர் வரிசைதனில்
விண்ணைத்தொடும் புகழோடு
  விண்ணவராய் வாழ்வீரே!

நன்றி.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வாழ்த்துப் பா

Arul Selva Perarasan
Administrator
நண்பரே!

முதலில் உங்கள் பெயரைப் பார்த்தவுடன், இது புனை பெயராக இருக்கும், வயதில் முதிர்ந்தவராக இருப்பீர்கள் என்று நினைத்தேன். பத்தொன்பது வயது இளைஞன் என்று சொல்லி என் ஊகத்தைத் தவிடுபொடியாக்கிவிட்டீர்கள்.

பத்தொன்பது வயதில் இப்படிப்பட்ட மரபு சார் பாடல் இயற்றும் திறன் பெற்ற நீங்கள், நிச்சயம் இறையருள் பெற்றவரே.

வாழ்த்துப்பா மிக மிக அருமை. ஆனால், இதற்கெல்லாம் நான் தகுதியுடையவனா என்பது விளங்கவில்லை.

ஆதிபர்வம் முடிந்தது. நண்பர்கள் திக்குமுக்காட வைக்கிறீர்கள்

என்ன தவம் செய்தேனோ?

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வாழ்த்துப் பா

தமிழ் வள்ளுவர்
ஐயா, இருக்கும் நூல்களையே தற்காலத் தமிழர்கள் கண்டு கொள்வதில்லை.

அப்படியிருக்க, இல்லாத ஒரு நூலை மொழி பெயர்த்து, அதன் கருத்துகளையும் நீதிகளையும்  நந்தமிழர் உணர வேண்டுமென எண்ணி, அதனை வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஊக்கத்தொடு மொழிபெயர்க்கின்றீர்களே? உங்களின் இப்பணிக்கு ஈடு சொல்ல முடியாது.

தங்களின் முயற்சி இறுதிவரை எவ்வித தடங்களும் இல்லாது தொடர இறைவனை இறைஞ்சுகிறேன்.

நன்றி.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வாழ்த்துப் பா

Arul Selva Perarasan
Administrator
வாழ்த்துக்கும், எனது முயற்சிக்காக பரமனிடம் வேண்டிக் கொண்டமைக்கும் நன்றி.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வாழ்த்துப் பா

M.Shankar
´Õ þ¨Ç»ý ¾í¸ÙìÌ þÂüȢ šúòÐôÀ¡¨Å þýÚ ¾¡ý ÀÊò§¾ý. ¯ñ¨Á¢ø «ó¾ Å¡úòÐôÀ¡ ´Õ º¡¢Â¡É ¿ÀÕìÌ, º¡¢Â¡É §¿Ãò¾¢ø ÅÊì¸ôÀðÊÕ츢ÈÐ. «ó¾ ÅûÙŧà ÁÚ À¢ÈÅ¢ ±ÎòÐ ¾í¸¨Ç Å¡úò¾¢Â¾¡¸ ¯½÷¸¢§Èý. ¯í¸û ÓÂüº¢ ¦ÅüȢ¨¼Â ±ÉÐ Å¡úòÐì¸û. ¾Á¢ú ÅûÙÅÕìÌõ ±ÉÐ Å¡úòÐì¸û. þ¨ÈÅý ±ýÚõ ¯í¸§Ç¡Î þÕôÀ¡Ã¡¸!  

(Font - SaiIndira)
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வாழ்த்துப் பா

Arul Selva Perarasan
Administrator
வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே.

On Mon, Oct 28, 2013 at 9:44 PM, M.Shankar [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]> wrote:
´Õ þ¨Ç»ý ¾í¸ÙìÌ þÂüȢ šúòÐôÀ¡¨Å þýÚ ¾¡ý ÀÊò§¾ý. ¯ñ¨Á¢ø «ó¾ Å¡úòÐôÀ¡ ´Õ º¡¢Â¡É ¿ÀÕìÌ, º¡¢Â¡É §¿Ãò¾¢ø ÅÊì¸ôÀðÊÕ츢ÈÐ. «ó¾ ÅûÙŧà ÁÚ À¢ÈÅ¢ ±ÎòÐ ¾í¸¨Ç Å¡úò¾¢Â¾¡¸ ¯½÷¸¢§Èý. ¯í¸û ÓÂüº¢ ¦ÅüȢ¨¼Â ±ÉÐ Å¡úòÐì¸û. ¾Á¢ú ÅûÙÅÕìÌõ ±ÉÐ Å¡úòÐì¸û. þ¨ÈÅý ±ýÚõ ¯í¸§Ç¡Î þÕôÀ¡Ã¡¸!  

(Font - SaiIndira)

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp75p127.html
To start a new topic under கடிதங்கள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வாழ்த்துப் பா

Arul Selva Perarasan
Administrator
In reply to this post by M.Shankar
திரு.M.சங்கர் அவர்களின் பின்னூட்டம் TSCU வகை எழுத்துருவில் இருப்பதால் பல பேருக்குத் தெரியாது என்பதால், அதை Unicode- மாற்றி கீழே அளிக்கிறேன்.

***************************************
ஒரு இளைஞர் தங்களுக்கு இயற்றிய வாழ்த்துப்பாவை இன்றுதான் படித்தேன். உண்மையில் அந்த வாழ்த்துப்பா ஒரு சரியான நபருக்கு, சரியான நேரத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. அந்த வள்ளுவரே மறுபிறவி எடுத்து தங்களை வாழ்த்தியதாக உணர்கிறேன். உங்கள் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். தமிழ் வள்ளுவருக்கும் எனது வாழ்த்துக்கள். இறைவன் என்றும் உங்களோடு இருப்பாராக

****************************************

மேற்கண்டவை திரு.M.சங்கர் அவர்கள் எழுதியது.

On Mon, Oct 28, 2013 at 9:44 PM, M.Shankar [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]> wrote:
´Õ þ¨Ç»ý ¾í¸ÙìÌ þÂüȢ šúòÐôÀ¡¨Å þýÚ ¾¡ý ÀÊò§¾ý. ¯ñ¨Á¢ø «ó¾ Å¡úòÐôÀ¡ ´Õ º¡¢Â¡É ¿ÀÕìÌ, º¡¢Â¡É §¿Ãò¾¢ø ÅÊì¸ôÀðÊÕ츢ÈÐ. «ó¾ ÅûÙŧà ÁÚ À¢ÈÅ¢ ±ÎòÐ ¾í¸¨Ç Å¡úò¾¢Â¾¡¸ ¯½÷¸¢§Èý. ¯í¸û ÓÂüº¢ ¦ÅüȢ¨¼Â ±ÉÐ Å¡úòÐì¸û. ¾Á¢ú ÅûÙÅÕìÌõ ±ÉÐ Å¡úòÐì¸û. þ¨ÈÅý ±ýÚõ ¯í¸§Ç¡Î þÕôÀ¡Ã¡¸!  

(Font - SaiIndira)

If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp75p127.html
To start a new topic under கடிதங்கள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: வாழ்த்துப் பா

R.MANIKKAVEL
In reply to this post by தமிழ் வள்ளுவர்
ஓம் ஸ்ரீ முருகன் துணை

வாழ்த்த வேண்டியவரை வாழ்த்தி வாழ்த்துப்பாப் பாடி வாழ்த்துக்கு உரியவர் ஆகிவிட்டீர் வாழ்த்துக்கள் தமிழ் வள்ளுவர்.
வாழ்க வளமுடன்.

யாவருக்குமாம் இறைவருக்கு ஒரு பச்சிலை
யாவருக்குமாம் பசுவிற்கு  ஒரு வாயுறை
யாவருக்குமாம் உண்ணும்போது  ஒரு கைபிடி
யாவருக்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. (திருமந்திரம்- திருமூலர்).

நன்றி
வாழ்க வளமுடன்