அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்

classic Classic list List threaded Threaded
8 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்

விஜய சாரதி
பீஷ்ம பர்வம் 91-லே அரவான் பிறப்பு பற்றிய குறிப்பு வருகிறது. வரிகளை அப்படியே தருகிறேன்

//அர்ஜுனனின் வீர மகன் {அரவான்}, புத்திசாலியான பார்த்தனால் {அர்ஜுனனால்}, நாகர்களின் மன்னனுடைய மகளிடம் {உலூபியிடம்} பெறப்பட்டவனாவான். கருடனால் அவளது கணவன் கொல்லப்பட்டதும், ஆதரவற்றவளாகவும், மகிழ்ச்சியற்ற ஆன்மா கொண்டவளாகவும் அவள் {உலூபி} ஆனாள். குழந்தையற்ற அவளை {உலூபியை}, உயர் ஆன்ம {நாக மன்னன்} ஐராவதன் அவனுக்கு (அர்ஜுனனுக்கு) அளித்தான். ஆசையின் {காமத்தின்} ஆதிக்கத்தில் தன்னிடம் வந்த அவளைப் பார்த்தன் {அர்ஜுனன்} தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். இப்படியே அந்த அர்ஜுனன் மகன் {இராவான்}, வேறொருவன் மனைவியிடத்தில் பெறப்பட்டான் [3].//

ஆதி 216-லே அர்ஜுனனை உலூபி நாகலோகத்திற்கு இழுத்துச் செல்கிறாள். அங்கே அர்ஜுனன் அவள் யார் என்று வினவுகிறான்.
//அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட உலூபி, "ஐராவதனின் {Airavata} குலத்தில் பிறந்த கௌரவ்யன் என்றொரு நாகன் இருக்கிறான். ஓ இளவரசரே, நான் அந்தக் கௌரவ்யனின் மகள். எனது பெயர் உலூபி. ஓ மனிதர்களில் புலியே, சுத்திகரிப்பு காரியங்களுக்காக நீரோடையில் இறங்கிய உம்மை நான் கண்டு, காம தேவனால் மதியிழந்தேன். ஓ பாவமற்றவரே, நான் திருமணமாகாதவள். நான் உமது நிமித்தமாக காம தேவனால் துன்புறுகிறேன். ஓ குரு குலத்தில் வந்தவரே, உம்மைக் கொடுத்து இன்று என்னைத் திருப்திப்படுத்தும்", என்றாள் {நாகக் கன்னி உலூபி}.//

அதாவது பீஷ்ம பர்வத்திலே விதவையாக சொல்லப்படுபவள், ஆதி பர்வத்திலே தன் வாயாலேயே தான் திருமணமாகாதவள் என்று கூறுகிறாள். கங்குலி, கும்பகோணம் இரண்டு பதிப்புகளுமே இதில் ஒத்துப்போகின்றன. இரண்டு பாடங்களிளுமே அரவான் பரக்ஷேத்திரத்தில் பிறந்தவன் என்று இருக்கிறது.

இரண்டு கேள்விகள் இதிலிருந்து எழுகின்றன -

ஒன்று - உலூபி உண்மையில் திருமணமாகாதவளா அல்லது விதவை மறுமணம் அந்த காலத்திலேயே நடந்துள்ளதா?

இரண்டு - அப்படி மறுமணம் நடந்திருந்தால் அரவான் எப்படி பரக்ஷேத்திரத்தில் பிறந்தவன் ஆவான்?

இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்தால் தெளிவேன். நன்றி!
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்

தாமரை
Administrator
அரவானின் அன்னையான உலூபி மணமானவளே!!!


ஆதி பர்வத்தில் உலூபி அர்ச்சுனனிடம் தன் இச்சையைக் கூறும்பொழுது அவள் அவனை கவர்வதற்காக தான் மணமாகாதவள் என்று சொல்கிறாள். ஆனால், அவளுக்கு மணமாகி உடன் அவள் கணவன் கருடனால் கொல்லப்பட்டதால் அவள் திருமணமாகியும் கன்னியே ஆவாள்.

உலூபிக்கும் அர்ச்சுனனுக்கும் திருமணம் நடக்கவில்லை. எனவே அதை மறுமணம் என்று சொல்ல முடியாது. உலூபியின் காம இச்சைகளைத் தீர்த்து அவளுக்கு அரவானை அளிக்கிறான். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்றே சொல்லப்படுகிறது

பரஷேத்திரம் என்பதற்கான பொருள் அடுத்தவன் மனைவியிடத்தில் என்பதாகும். பாண்டவர்கள் தேவர்களால் பரஷேத்ரத்தில் பெறப்பட்டவர்கள் ஆவர். கள்ளத் தொடர்பின் மூலமோ அல்லது பிற காரணங்களினாலோ அடுத்தவன் மனைவியிடம் பிள்ளை பெறுவதையே இது குறிக்கும்.

இப்படி பெறப்பட்டவன் அந்தப்பெண்ணின் கணவனின் வாரிசாகவே கருதப்படுவான். பாண்டவர்கள் போல.


Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்

விஜய சாரதி
அர்ஜுனனுக்கும் உலூபிக்கும் திருமணம் ஆகவில்லை என்ற விவரம் வேறு புத்தகம் எதிலாவது குறிப்பிடப்பட்டுள்ளதா? ஏனென்றால் நான் அந்த குறிப்பிட்ட ஸ்லோகங்களைத் தேடி பிடித்தேன்.

ஆதி பர்வத்தில் அந்த குறிப்பிட்ட ஸ்லோகமானது -
तां माम अनङ्ग मथितां तवत्कृते कुरुनन्दन अनन्यां नन्दयस्वाद्य परदानेनात्मनॊ रहः

இதில் அனன்ய என்றால் தனியாக, வேற யாருமற்று என்று பொருள் வருகிறது. இதைத்தான் திருமணமாகாத என்று மொழிபெயர்ப்பாளர்கள் பொருள் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். உலூபியுடைய கணவன் கொல்லப்பட்டிருந்து அவள் தனியாக இருப்பதாக கூறியது உண்மையே ஆகிறது.

அதே போல் பீஷ்ம பர்வத்தில் வரும் ஸ்லோகம் இது -
भार्यार्थं तां च जग्राह पार्थः कामवशानुगाम एवम एष समुत्पन्नः परक्षेत्रे ऽरजुनात्मजः

இதில் வரும் பார்யா என்னும் பதம் wife, lawful wife, to be borne or supported என்ற அர்த்தம் கொண்டுள்ளது.

ஆக பார்யா என்னும் பதத்தைக் கவனித்தால் அர்ஜனனுக்கும் உலூபிக்கும் திருமணம் நடந்ததாக கொள்ளலாமா? பரக்ஷேத்திரம் என்னும் வார்த்தையும் உள்ளது.

எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. அகராதியில் ஒவ்வொரு வார்த்தையாக எடுத்துப் போட்டே இந்த அர்த்தம் கொண்டேன். தவறாக இருக்க வாய்ப்புள்ளது.

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்

திருவாழ்மார்பன்
பார்யா என்பது lawful wife என்று மட்டும் பொருள் அல்ல. சில சமஸ்கிருத கவிதைகளில் ”துணை” என்கிற பொருளில் கூட உபயோகப்படுத்தியிருப்பதை படித்திருக்கிறேன். வடமொழி அறிவு சிறிது இருப்பதனால்இதை அறிந்துகொள்ள முடிந்தது. எனவே இங்கு பார்யா என்ற சொல்லுக்கு துணை அல்லது இணை என்கிற பொருளில் தான் வியாசர் உபயோகப்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறேன்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்

திருவாழ்மார்பன்
அரவானுக்கும் திருநங்கைகளுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் ஏன் அரவான் களப்பலி என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்? அரவான் மரணத்திற்கு பிறகு தங்கள் தாலியை அறுத்துக்கொள்வதாய் சடங்குகள் செய்கிறார்கள். அரவானை மணம் செய்ததால் அவர்கள் அரவாணிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் என கேள்விப்படுகிறோம். இவற்றிற்கு மகாபாரதத்தில் எதேனும் விடை இருக்கிறதா? அரவான் திருமணம் புரிந்து கொண்டதாக மகாபாரதத்தில் குறிப்பு எதுவும் காணப்படவில்லை என நினைக்கிறேன்.

இவற்றிற்கு விடை தெரிந்தால் அவர்களை நாம் பார்க்கும் கண்ணோட்டம் மாறுபடலாம் என நினைக்கிறேன்.

நன்றி,
திருவாழ்மார்பன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்

Arul Selva Perarasan
Administrator
இல்லை நண்பரே... அரவான் திருமணமத்திற்கு மஹாபாரதத்தில் ஆதாரங்கள் ஏதும் இல்லை. மஹாபாரதத்தில் அரவான் போர் செய்கிறான் எனும்போது அரவான் களப்பலியும் பொய்த்துவிடுகிறது...


2016-03-26 22:10 GMT+05:30 திருவாழ்மார்பன் [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
அரவானுக்கும் திருநங்கைகளுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் ஏன் அரவான் களப்பலி என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்? அரவான் மரணத்திற்கு பிறகு தங்கள் தாலியை அறுத்துக்கொள்வதாய் சடங்குகள் செய்கிறார்கள். அரவானை மணம் செய்ததால் அவர்கள் அரவாணிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் என கேள்விப்படுகிறோம். இவற்றிற்கு மகாபாரதத்தில் எதேனும் விடை இருக்கிறதா? அரவான் திருமணம் புரிந்து கொண்டதாக மகாபாரதத்தில் குறிப்பு எதுவும் காணப்படவில்லை என நினைக்கிறேன்.

இவற்றிற்கு விடை தெரிந்தால் அவர்களை நாம் பார்க்கும் கண்ணோட்டம் மாறுபடலாம் என நினைக்கிறேன்.

நன்றி,
திருவாழ்மார்பன்



If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp747p762.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்

திருவாழ்மார்பன்
 நன்றி நண்பரே. பாண்டவர்களின் வெற்றிக்கு அரவானை பலி கொடுத்தாக சொல்லப்படுவது நமது கிராமங்களில் செவி வழிக்கதையாக சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் திருநங்கைகளுக்கும் அரவானுக்கும் உள்ளதாக சொல்லப்படும் தொடர்பும் அவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பெரும்பாலும் நமது கிராமியக்கலைகளும் அதில் சொல்லப்படும் கதைகளும் வாழ்வியலோடு மிகுந்த தொடர்பு கொண்ட்வையாக இருக்கும். எனவே இந்த கதைகளுக்கும் நிச்சயமாக ஏதாவது காரணங்கள் இருக்கும் என நம்புகிறேன். இவை கண்டிப்பாக ஆராயப்பட வேண்டியவை. அறிவார்ந்த மக்கள் கூடியிருக்கும் இந்த விவாத மேடையில் நிச்சயம் ஒரு நாள் விடை கிடைக்கும் என்பது என் எண்ணம்.

நன்றி,
திருவாழ்மார்பன்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்

தாமரை
Administrator
In reply to this post by விஜய சாரதி
விதவை மறுமணம் அந்த காலத்திலேயே நடந்துள்ளதா?

மறுமணம் என்பது அக்காலத்தில் சாதாரணமானதாகவே கருதப்பட்டது எனலாம்.

1. நளோபாக்யான பர்வத்தில் தமயந்திக்கு மறுமணம் என்று சொல்லுகிறாள்

துன்பத்தால் ஒடுக்கபட்ட தமயந்தி, ஓ யுதிஷ்டிரா, தனது தாயின் முன்னிலையில் சுதேவனை அழைத்து, "ஓ சுதேவா, பறவையென நேராக அயோத்தியா நகரத்திற்குச் சென்று, மன்னன் ரிதுபர்ணனிடம், "பீமனின் மகளான தமயந்திக்கு மற்றொரு சுயம்வரம் நடக்கப் போகிறது. அனைத்து மன்னர்களும், இளவரசர்களும் அங்கே செல்கின்றனர். நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்ததில், அந்த விழா நாளை நடைபெறப் போகிறது என்று காண்கிறேன். ஓ எதிரிகளை அடக்குபவரே {ரிதுபர்ணா}, உம்மால் முடியும் என்றால், காலந்தாழ்த்தாமல் செல்லும். வீரனான நளன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பது தெரியாததால், நாளை சூரியன் உதித்ததும் அவள் {தமயந்தி}, தனது இரண்டாவது கணவனைத் தேர்ந்தெடுப்பாள்" என்று சொல்" என்றாள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவளால் இப்படிச் சொல்லப்பட்ட சுதேவன் கிளம்பினான். அவன் என்ன சொல்ல {தமயந்தியால்} வழிநடத்தப்பட்டானோ, அதை ரிதுபர்ணனிடம் சொன்னான். - See more at: http://mahabharatham.arasan.info/2014/01/Mahabharatha-Vanaparva-Section71.html#sthash.nSUmfSzX.dpuf

2. உத்யோகப் பர்வத்தில் யயாதி காலவ முனிவருக்கு தன் மகளை தானமாக அளிக்கிறார். அந்த மாதவியை ஹர்யவர்ஷன், திவோதாசன், உசீநரன், விஷ்வாமித்ரன் ஆகிய நான்கு பேருக்கு அடுத்தடுத்து மணமுடித்தார்.

3, மனுதர்மத்தின் அடிப்படையில் அமைந்த அர்த்த சாத்திரத்திலும் விதவை மறுமணம், கணவனால் கைவிடப் பட்டோருக்கான மறுமணம் பற்றிய விதிகள் உண்டு. கணவன் மனைவி பிரிவுக்கான சட்டங்கள் கூட உண்டு.