பரசுராமரிடம் கர்ணன் பெற்ற சாபம்

classic Classic list List threaded Threaded
6 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

பரசுராமரிடம் கர்ணன் பெற்ற சாபம்

நலமாஹராஜன்
கர்ணன், தான் ஒரு பிராமணன் என்று பொய் சொல்லி பரசுராமரிடம் சிஷ்யனாக  சேர்ந்தான். இதை அறிந்த பரசுராமர் அவனுக்கு சாபம் அளித்தார். காரணம் பரசுராமர் பிராமணர்களுக்கு மட்டும் குருவாக இருக்க விரும்பினார். அனால் பீஷ்மருக்கும் அவர் தானே குரு. பீஷ்மர் ஒரு கஷத்ரியனாக இருந்தும் ஏன் அவருக்கு பரசுராமர் குரு ஆனார்?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பரசுராமரிடம் கர்ணன் பெற்ற சாபம்

தாமரை
Administrator

பீஷ்மர் கங்கைக்குப் பிறந்து, கங்கையால் வளர்க்கப்பட்டவர். அவர் கங்கையின் மகன் என்றே அறியப்பட்ட அவர் பரசுராமர், கங்கையின் வேண்டுகோளுக்கிணங்க பீஷ்மருக்கு குருவாக ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். மற்றபடி கர்ணனை கண்ட போதிலேயே அவன் மீது அவர் பிரியம் கொண்டு கேள்விகள் கேளாமலேயே அவனை சீடனாக்கிக் கொண்டார்.

இப்பொழுது இதே விஷயத்தைப் பின்னிருந்து பார்ப்போம்.

பாரதப் போரில் மூன்று முக்கியமானவர்கள்

1. பீஷ்மர் - பரசுராமரின் சீடர்
2. துரோணர் - பரசுராமரிர் அனைத்து அஸ்திரங்களையும் தானமாகப் பெற்றவர்
3. கர்ணன் - பரசுராமரின் சீடர்.

இவர்கள் மூவரையும் நம்பியே போரில் இறங்கினான் துரியோதனன். இதனால் துவாபர யுகத்திலும், திரேதா யுகத்தைப் போன்றே பரசுராமரால் மிகப்பெரிய ஷத்ரியப் பேரழிவு நிகழ்ந்தது. இவர்கள் மூவரும் இல்லாமலிருந்தால் போரில் இறங்க துரியோதனன் முடிவு செய்திருக்க மாட்டான். பாண்டவர் பக்கமிருந்து பல மாவீரர்களின் வதமும் நடந்திருக்காது.அதாவது இம்மூவரையும் பரசுராமர் தனது முக்கால அறிவால் தேர்ந்தெடுத்தே தமது வித்தையைக் கொடுத்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.  அவரது வித்தை ஷத்ரிய அழிவுக்கே இங்கும் பயன்பட்டது என்பதே சூட்சமம் ஆகும்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பரசுராமரிடம் கர்ணன் பெற்ற சாபம்

விஜய சாரதி
ஐயா, நானும் தாங்கள் கூறியபடிதான் நடந்திருக்கவேண்டும் என்று கருதுகிறேன். வசுவே பீஷ்மராக பிறப்பெடுத்ததால் இது ஏற்கதக்கதாக உள்ளது. ஆனால், இது அனுமானம் மட்டும்தானா? உண்மையிலேயே பரசுராமர் பீஷ்மருக்கு ஏன் குருவானார்? தங்கள் கருத்துக்கு சான்று ஏதாவது உண்டா?

பரசுராமரின் வித்தை க்ஷத்தியர்களின் அழிவுக்கே பயன்பட்டது என்று கூறினீர்கள். நல்ல கண்ணோட்டம். மேலும் சிந்தித்தால், பாண்டவர் பக்கத்திலிருந்து கௌரவர்களுக்குப் பேரழிவு ஏற்படுத்தியது அர்ஜுனனும், பீமனும்தான். அதாவது துரோணரின் சிஷ்யர்கள். ஆகக்கூடி மஹாபாரத யுத்தத்தின் பேரழிவு பரசுராமரின் சிஷ்ய பரம்பரையினாலேயே ஆகியிருக்கிறது.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பரசுராமரிடம் கர்ணன் பெற்ற சாபம்

tharshan
பரசுராமர் ஒரு அவதாரம் அவரிடம் கல்வி கற்ற மூவரும் சிறந்தவர்கள் ஆவார்கள் அப்படி இருக்க  ஏன் கர்ணனை கோழையாக காட்டுகிறார்கங்குலி மஹாபாரதத்தில்
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பரசுராமரிடம் கர்ணன் பெற்ற சாபம்

Arul Selva Perarasan
Administrator
கோழையாகக் காட்டப்படவில்லை. தற்பெருமைக்காரனாக, அலட்சியம் கொண்டவனாகவே காட்டப்படுகிறது. அதுவும் கங்குலியில் மட்டுமல்ல, தமிழில் கும்பகோணம் பதிப்பு, நரசிம்மபிரியாவில் வந்த தொடர், ஆங்கிலத்தில் மன்மதநாததத்தரின் பாதிப்பு ஆகியவற்றிலும் இப்படியே இருக்கிறது. நான் மேற்கண்ட புத்தகங்கள் அனைத்தையும் ஒப்புநோக்கியே மொழிபெயர்த்து வருகிறேன். ஒவ்வொன்றிலும் சிற்சில மாற்றங்கள் நேரிடும்போது, அதை அடிக்குறிப்புகளில் சுட்டிக்காட்டியபடியே வருகிறேன்.


2016-09-03 10:25 GMT+05:30 tharshan [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
பரசுராமர் ஒரு அவதாரம் அவரிடம் கல்வி கற்ற மூவரும் சிறந்தவர்கள் ஆவார்கள் அப்படி இருக்க  ஏன் கர்ணனை கோழையாக காட்டுகிறார்கங்குலி மஹாபாரதத்தில்


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp711p826.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பரசுராமரிடம் கர்ணன் பெற்ற சாபம்

தாமரை
Administrator
கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளால் தாக்கப்பட்டவனும் வலிமைமிக்கவனுமான பீமன், கர்ணனின் இதயத்தை வேதனையால் நிறைக்கும்படி வானத்தில் எம்பி {கர்ணனின் தேரின் மேல்} குதித்தான்.(70) போரில் வெற்றியை விரும்பிய பீமனின் நடத்தையைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, தேருக்குள் ஒளிந்து கொண்டு அவனை {பீமனை} ஏமாற்றினான்.(71) கலங்கிய {பயந்த} இதயத்துடன் கர்ணன் தேர்த்தட்டில் தன்னை மறைத்துக் கொண்டதைக் கண்ட பீமன், கர்ணனின் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பூமியில் {தரையில் அவனுக்காகக்} காத்திருந்தான் [3].(72) கருடன் ஒரு பாம்பைக் கவர்ந்து செல்வதைப் போலவே கர்ணனை அவனது தேரில் இருந்து கவரச் சென்ற பீமனின் அந்த முயற்சியைக் குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் சாரணர்கள் அனைவரும் பாராட்டினர். பீமன் தன் தேரை இழந்து, தன் வில்லும் வெட்டப்பட்டிருந்தாலும், (உடைந்த) தன் தேரை விட்டு, தன் வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்றுப் போரில் நிலையாக நின்றான்" {என்றான் சஞ்சயன்}.(73,74) - See more at: http://mahabharatham.arasan.info/2016/09/Mahabharatha-Drona-Parva-Section-138.html#sthash.su5q9thh.dpuf

இந்தப்பகுதியைச் சொல்கிறார். பீமன் பிடியில் அகப்படாமல் இன்னொரு தேருக்கு நழுவி ஏறியதை