சிவன் ஏன் லிங்கமானார்?

classic Classic list List threaded Threaded
3 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

சிவன் ஏன் லிங்கமானார்?

இரா. சேர்மன்
சிவன் ஏன் லிங்கமாக வழிபடப்படுகிறார்? இதற்கு மகாபாரதத்தில் ஏதேனும் காரணம் கூறப்பட்டுள்ளதா?
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சிவன் ஏன் லிங்கமானார்?

விஜய சாரதி
மஹாபாரதத்தில் இந்த கதை வருகிறதா என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் உலக நன்மைக்காக முனிவர்கள் யாகம் செய்ய முற்பட்டபோது, யாரை முதற் கடவுளாக கொள்வது என்ற விவாதம் எழுந்தது. பிருகு முனிவர் மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என்று அறிய புறப்பட்டார்.

பிரம்ம லோகத்தில் பிரம்மன், சரஸ்வதியின் வீணை இசையில் மூழ்கி பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் கோபமடைந்த பிருகு முனிவர் பிரம்மனுக்கு பூலோகத்தில் கோயில்கள் அமையாது என்று சாபமிட்டார்.

பின் சிவனைக் காண பிருகு முனிவர் கைலாயம் சென்றார். அங்கும் சிவபெருமான் தன் தேவியையே கவனித்துக் கொண்டிருக்க, அவருக்கு பூலோகத்தில் உருவ வழிபாடு நடக்காமல், லிங்க வழிபாடு மட்டுமே நடக்கும் என்று சபித்தார்.

பின் வைகுண்டத்திற்கு சென்ற பிருகு மஹரிஷி, விஷ்ணுவும் லக்ஷ்மி தேவியைப் பார்த்துக் கொண்டு, தான் வந்ததை கவனியாமல் இருப்பதைக் கண்டு ஆத்திரத்தால் மஹாவிஷ்ணுவின் மார்பிலே எட்டி உதைத்தார். மஹாவிஷ்ணு கோபமடையாமல் அவருக்கு பாத சேவை செய்தார். அதனால் குணத்தில் சிறந்த மஹாவிஷ்ணுவே முதற் கடவுள் என்று பிருகு மஹரிஷி தீர்மானம் செய்தார்.

பிருகு முனிவரின் சாபத்தால், பிரம்மனுக்கு கோவில்கள் இல்லாமல் போனது. (புஷ்கர் என்னும் இடத்தில் பிரம்மனுக்கு கோவில் உண்டு). அதே போல் சிவனுக்கு உருவ வழிபாடு இல்லை. லிங்க வழிபாடே உள்ளது. (சிதம்பரத்தில் நடராஜ மூர்த்தம் உண்டு). பொதுவாக பிருகு முனிவரின் சாபப் படியே பிரம்மா, சிவன் இவர்களது வழிபாடு உள்ளது.

குறிப்பாக லிங்கம் ஏன் வழிபடபடுகிறது என்பது எனக்கும் தெரியாது. ஆரம்பமும் முடிவும் இல்லாத கடவுளை லிங்கம் குறிப்பிடுவதாக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சிவன் ஏன் லிங்கமானார்?

தாமரை
Administrator
This post was updated on .
இந்தக் கதை கலியுகக் காலக் கதை. இதன் முடிவில் இலஷ்மி விஷ்ணுவைப் பிரிய விஷ்ணு ஸ்ரீனிவாச அவதாரம் எடுப்பார். ஆனால் இலிங்க வடிவில் பரசுராமனின் தாய் ரேணுகாதேவி வணங்கி இருக்கிறாள். இராமனும், இராவணனும் லிங்க வடிவிலேயே வணங்கி இருக்கிறார்கள்.

சிவ புராணத்தின்படி பிரம்மன் கண் விழித்தவுடனே பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் மத்தியில் விவாதம் தொடங்க, சிவன் அப்பொழுதே சிவன் ஜோதி லிங்க வடிவிலேயே தோன்றியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

சிவனை ஆதியில் இருந்தே மூவகையில் வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

1. உருவம் (64 மஹேஷ்வர மூர்த்தங்கள், நடராஜர், சதாசிவ வடிவம் என பலப்பல வடிவங்கள் உண்டு)
2. அருவம்
3. உருவருவம் அதாவது லிங்க வடிவம்.

மனுக்கள் படைக்கும் முன்னரே சிவனின் லிங்க வடிவ ஆராதனை ஆரம்பமாகிவிட்டது.  அடிமுடி அளக்க முடியாமல் ஓங்கி நின்ற திருவண்ணாமலையானுக்கு லிங்கோத்பவர் என்றே பெயர். அதாவது லிங்க வடிவில் இருந்து வெளிப்பட்டவர்.

ஆதியில் அண்டம் முட்டை வடிவில் இருந்தது. அந்த முட்டையில் இருந்து தோன்றிய விஷ்ணுவும் பிரம்மனும் அண்டம் முழுதும் ஆக்ரமித்த பேரொளியாக லிங்க வடிவில் சிவனைக் கண்டதில் இருந்து சிவலிங்க வழிபாடு ஆரம்பமானது என்பதே சிவ புராணம் சொல்லும் கருத்து. அந்த லிங்க வடிவில் இருந்து சிவனாக வெளிப்பட்ட மஹேஷ்வர வடிவத்தையே நாம் லிங்கோத்பவர் என அழைக்கிறோம். இது அனைத்து சிவன் கோவிலிலும் கருவறைக்குப் பின்னே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.

எனவே லிங்கம் தான் முதன் முதலாய் சிவன் தோன்றிய வடிவமாகும்.

உருவம், குணம் இவை அனைத்தையும் கடந்து நிற்கும் பொழுது இறைவன் நிர்க்-குணப்பிரம்மம்.

உருவமாய் கண்களுக்கு காட்சி தரும்பொழுது இறைவன் ச-குணப்பிரம்மம். இறைவன் கண்களுக்கு காட்சி தரும்பொழுது உருவம்.

உருவமே இல்லாத, குறியீடே இல்லாத ஒரு சக்தி நிலை என்பது அருவம்.

உருவமும் அல்லாது, அருவமும் அல்லாது, இருக்கும் பொழுது அருவுருவம்.

சிவலிங்கம் என்பது அருவுருவம்.! உருவமாக பார்த்தால் இறைவனும் மனிதர்களை போலவே அனைத்து உடலுறுப்புகளுடனும் கானப்படுவார்.

உருவம் என்பது வெறும் மனித உருவம் மட்டுமே அல்ல, மரம், செடி, விலங்குகள், பறவை என அனைத்து உருவங்களிலும் இறைவனை கானலாம். தண்டகாரண்யத்து மரமாய், மீனமாய், ஆமையாய், வராகமாய், நரசிம்மமாய், வாமன-ராம-கண்ணன் என்று பல உருவத்தில் இறைவனை பார்த்துள்ளோம்.

இறைவன் உருவமுமாய், அருவமுமாய் இருக்கின்றார், இதில் உருவமே இல்லை என்பதை நம்புவதா? அருவம் என்பதை நம்புவதா? என்ற கேள்வி உங்களுக்கு எழுமேயானால் அதற்கான பதிலும் ஒரு கேள்விதான்.!

தண்ணீர் உருவமா? இல்லை அருவமா ? ஆம் தண்ணீர் உருவமாகவும் அருவமாகவும் இருக்கின்றது. நீராவியாக இருக்கும் பொழுது தண்ணீர் அருவம் அது நம் கண்களுக்கு தெரியாது. தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைக்கும் பொழுது அதன் உருவம் நம் கண்களுக்கு தெரியும். தண்ணீர் எவ்வாறு நாம் பிடித்துவைக்கும் பாத்திரத்தின் உருவத்தை எடுத்துக்கொள்கின்றதோ அதே போல்தான் இறைவனும்! இறைவன் நீராவியை போல அருவமாகவும் இருக்கின்றான்! பிடித்து வைத்த பாத்திரத்தில் உருவமாகவும் இருக்கின்றான்!

இறைவன் உருவமாய் இருக்கலாம்! ஆனால் உருவம் மட்டுமே இறைவன் இல்லை!

இறைவன் அருவமாய் இருக்கலாம்! ஆனால் அருவம் மட்டுமே இறைவன் இல்லை!

இதனை நாம் உணர்ந்துகொள்ளவே உருவமும் இல்லாத, அருவமும் இல்லாத அருவுருவம் என்னும் ஒரு குறியீடு..

வைணவ ஆலயங்களில் தீர்த்தம் என்பது ஒரு அருவுருவம்! அதே போல் சைவ ஆலயங்களில் லிங்கம் என்பது அருவுருவம்!  

லிங்க உருவத்தைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருங்கள்! மனம் குவியும்! அதன் Geometry அப்படி! எவ்வாறு மேலைநாடுகளில் Crystal Gazing-இல் மனத்தை ஒருமைப்படுத்துகிறார்களோ, அதே போல் வழிபாடு/தியான முறைகளுக்குப் பயன்படுத்துவதற்கு என்றே சிவலிங்க உருவம் நம் பண்பாட்டில் அமையப் பெற்றது!  

சிவபெருமான், யோகி மற்றும் குரு வடிவானவர்! எனவே அவரைக் குறிக்கும் லிங்கமும் யோகம் மற்றும் தியான வடிவமாக உள்ளது!

லிங்கம்=லிங்+கம்

லிங்=லியதே=எல்லாப் பொருளும் அங்கு லயிப்பது, ஒன்றுபடுவது! (Merge)

கம்=கமயதே=எல்லாப் பொருளும் அங்கிருந்தே எழுவது! (Emerge) இப்படி merge-emerge, ஒடுங்கி-எழுவது தான் சிவலிங்க சொரூபம்!  

சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க புராணத்தில் சொல்லப்படுகின்றன. சிவ புராணம், ஸ்கந்த புராணம் எல்லாவற்றிலும் லிங்கம் குறித்த கதைகள் உள்ளன.  

துர்வாச முனிவரின் சாபத்தினால் / பிருகு முனிவரின் ஈசனுக்கு உருவம் இல்லாத லிங்க வழிபாடு, பிரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க உருவம் ஆனது என்று பல கதைகள் வழங்கினாலும், அனைத்திலுமே லிங்கம் என்பது மிக உயர்ந்த அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை!  

 “திருமூலர்” லிங்க வடிவம் ஏன் என்பதைப் பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!  

 இலிங்கம தாவது யாரும் அறியார்
 இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
 இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
 இலிங்கம தாக எடுத்தது உலகே!

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே என்பது புகழ் பெற்ற திருமந்திரம்!  

சிவலிங்கத்தில் சிவபெருமான் மட்டுமில்லை! மும்மூர்த்திகளும் இருக்கின்றனர்!

லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பீடம் =  நான்முகம் கொண்ட  வடிவம்!   நான்முகனைக் குறிக்கும்
அதன் மத்திய பாகம் விஷ்ணு பீடம் = எண் கோண வடிவம்!    அஷ்டாக்ஷரம் கொண்ட நாராயணனைக் குறிக்கும்



சிவாலயங்களில் இவை இரண்டும் சட்டென்று நம் கண்ணுக்குத் தெரியாது!   அதற்கு மேல் எல்லாரும் காண்பது தான் சிவ-சக்தி பீடம்! இதுவே இரண்டு பாகமாக இருக்கும்!  

மேலே உருளையான (cylinder) பாகத்தைத் தான் லிங்கம் என்று சொல்லுவார்கள்! அது சிவ சொரூபம்!  

அதன் கீழ் பரந்த வட்ட வடிவமான (round) பாகத்தை ஆவுடையார் என்று வழங்குவார்கள்! அது சக்தி சொரூபம்!  



பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம் என்பது இதை விளக்கும் சிவ புராண மந்திரம்!   திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும்!

ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு!   இந்தப் பெயரே, இன்று பல விபரீத பொருட்களைச் சிவலிங்க தத்துவத்துக்குக் கற்பிக்கவும் காரணமாகவும் அமைந்து விட்டது!  

யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!  

ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம-காயனக தேவகீ நந்தன ஸ்ரஷ்டா-ன்னு விஷ்ணு சகஸ்ரநாமத்துல கூட "ஆத்ம யோனி" என்று வரும்!   “ஆத்ம யோனி” என்பது ஆத்மா செல்லும் பாதை!    

ஆக்கல்-அளித்தல்-அழித்தல் என்னும் முத்தொழிலில், எல்லா உயிர்களும் ஆவுடையாரில்-சக்தியில் ஒடுங்கி (merge), லிங்கத்தில்-சிவத்தில் விரியும் (emerge)! இதுவே எளிமையான சொற்களில் சிவலிங்க தத்துவம்!  

எல்லாச் சிவலிங்கத்திலும் ஆவுடையார் (யோனி) இருக்காது! மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட உண்டு!

நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது தான்! அந்தக் கற்களுக்கு மேல் பாகம் மட்டும் தான் இருக்கும்!  

பகுத்தறிவுப் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், இராவணன் வழிபட்ட ஆத்ம லிங்கம் கூட இந்த வகை தான்!    காளஹஸ்தியில் வெறும் ஆவுடையார் மட்டும் தான்! மேலே லிங்கமே இருக்காது! வைத்தியநாதத்தில் லிங்கம் மட்டும் தான்! கீழே ஆவுடையாரே இருக்காது!  

லிங்க வழிபாடு என்பது ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது. "லிங்க வழிபாடு மட்டுமே" என்பது பின்னர் வந்தது.