சந்திர வம்சமா? குரு வம்சமா?

classic Classic list List threaded Threaded
6 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

சந்திர வம்சமா? குரு வம்சமா?

தாமரை
Administrator


இரண்டும் ஒன்றுதானே என்று ஆரம்பத்திலேயே சலித்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்லும் குரு துஷ்யந்தனுக்கு முந்தைய அரசன் குரு அல்ல. தேவகுரு பிரஹஸ்பதி.

சந்திர வம்சம் உண்டான கதை இதோ...

சந்திர குலத் தோற்றம்

சந்திர குலம் தோன்றியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அது புரூரவ சரிதை என்னும் நூலில் உள்ளது. பிரகஸ்பதியின் மனைவி தாரை. இவள் சந்திரனைக் கூடினாள். புதன் என்னும் மகனைப் பெற்றாள். வைவச்சுத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிக்கொண்டு சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன்.

தேவ மகளிர் நீராடினர். அவர்களில் அழகில் சிறந்த ஊர்வசியைக் ‘கேசி’ என்பவன் கவர்ந்துசென்றான். மகளிர் அலறினர். புரூரவன் ஊர்வசியை மீட்டுத் தேவேந்திரனிடம் ஒப்படைத்தான். தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியைப் புரூரவனுக்கே தந்துவிட்டான்.

ஊர்வசி தேவலோகம் மீள வழி கேட்டாள். ஆடை இல்லாத நிலையில் புரூரவனைப் பார்க்க நேர்ந்தால் திரும்பலாம் என இந்திரன் வரமளித்தான். ஒருநாள் புரூரவன் ஊர்வசியோடு உறவு கொண்டிருக்கும் வேளையில் புரூரவனின் ஆடையைக் கவர்ந்துவருமாறு இந்திரன் கந்தர்வர்களை அனுப்பினான். அவர்களும் அதனைச் செய்தனர். பரூரவன் தன் ஆடையை மீட்டுவரப் புறப்பட்டான். அப்போது ஒரு மின்னல். ஊர்வசி புரூரவனை அம்மணத்தில் பார்த்துவிட்டாள். உடனே தேவலோகம் சென்றுவிட்டாள்.

தேவலோகத்தில் ஊர்வசி நடனமாடிக்கொண்டிருந்தாள். அவள் மனம் புரூரவனை நாடியது. இதனை உணர்ந்த பரதாச்சாரியன் ஊர்வசியைப் பூங்கொடி ஆகுமாறு சபித்தான். அவள் பூங்கொடி ஆனாள். பரூரவன் ஊர்வசி நினைவில் பூங்கொடிகளை-யெல்லாம் தழுவினான். பூங்கொடியாக இருந்த ஊர்வசி தன் உருவம் பெற்றாள். இவர்களுக்குப் பிறந்த மகன் ‘ஆயு’. இவன் வழியில்தான் சந்திரகுலம் தோன்றிற்று.

-----------------------------------------------------------------------------------------

புதனின் தந்தை யார் என்பதுதான் என் கேள்வி.

புதனின்  தந்தை உயிரியல் முறைப்படி பார்க்கப்  போனால் சந்திரன் தான். ஆனால் அப்படிப் பார்க்கப் போனால் பாண்டவர்கள் என்று  நாம் அழைக்க முடியாதே....
கண்ணன் கர்ணனுக்குச் சொல்வதைக் கவனியுங்கள்

'ஒரு கன்னிகைக்கும், அந்தக் கன்னிகையை மணந்த தங்கள் தந்தைக்கும் காநீகன், சகோடன் என்று இருவகையான மகன்கள் பிறக்கிறார்கள்' என்று சாத்திரங்களை நன்கு அறிந்தோர் சொல்கின்றனர். ஓ! கர்ணா, நீயும் இவ்வழியிலேயே பிறந்திருக்கிறாய். {சாத்திரங்களை அறிந்தோர், ஒரு கன்னிகைக்குப் பிறக்கும் காநீகன் மற்றும் சகோடன் என்ற இருவகைப் பிள்ளைகளுக்கு, அந்தக் கன்னிகையை மணந்தவனே தந்தை என்று சொல்கிறார்கள்}. எனவே, தார்மீக அடிப்படையில் நீயும் பாண்டுவின் மகனே. வா, சாத்திரங்களின் கூற்றுப்படி நீ மன்னனாவாயாக. உனது தந்தையின் {பாண்டுவின்} வழியில் பிருதையின் {குந்தியின்} மகன்களையும் {பாண்டவர்களையும்}, தாயின் வழியில் விருஷ்ணிகளையும் {சொந்தங்களாகக்} கொண்டவன் நீ. ஓ! மனிதர்களில் காளையே {கர்ணா}, இந்த இருவரையும் உனக்குச் சொந்தமானவர்களாக நீ அறிவாயாக.

இப்போதே என்னுடன் வந்து, ஓ! ஐயா, யுதிஷ்டிரர் பிறப்புக்கு முன்பே குந்திக்குப் பிறந்தவன் நீ என்பதைப் பாண்டவர்கள் அறியச் செய்வாயாக. சகோதரர்களான ஐந்து பாண்டவர்கள், திரௌபதியின் மகன், சுபத்திரையின் ஒப்பற்ற மகன் {அபிமன்யு} ஆகிய அனைவரும் உனது பாதத்தைத் தழுவுவார்கள் {உனது காலைப் பிடிப்பார்கள்}. பாண்டவக் காரணத்திற்காகக் கூடியிருக்கும் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவரும் கூட உனது பாதத்தைத் தழுவுவார்கள்.
- See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section140.html#sthash.nC9aTMWs.dpuf

தர்மத்தின் விதிகள் முதல் ஆறு {6} வகை மகன்களை வாரிசுகளாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் ஒப்புக் கொள்கின்றன. அடுத்த ஆறு {6} வகை மகன்கள் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தற்போதுள்ள வழக்கத்தின்படி நான் அதைச் சொல்கிறேன். ஓ பிருதா {குந்தி}, நான் சொல்வதைக் கேள்.

{1}அவை, தானே, தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் பெறும் மகன் முதல் வகை,
{2} அன்பு நிமித்தமாக திறமைமிகுந்த மனிதர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் இரண்டாம் வகை,
{3} பணத்தின் நிமித்தமாக ஒருவர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் மூன்றாம் வகை,
{4} கணவன் இறந்தபிறகு மனைவியால் பெறப்படும் மகன் நான்காவது வகை,
{5} திருமணம் ஆகும் முன்பு மனைவி பெறும் மகன் ஐந்தாவது வகை,
{6} கற்பற்ற மனைவியிடம் பெறும் மகன் ஆறாவது வகை,
{7} சுவீகாரமாகப் பெறப்படும் மகன் ஏழாவது வகை,
{8} சில காரணத்திற்காக பொருள் கொடுத்து வாங்கப்படும் மகன் எட்டாவது வகை,
{9} தானே முன்வந்து மகனாகுபவன் ஒன்பதாம் வகை,
{10} கற்பிணி மணமகளுடன் பெறப்பட்ட மகன் பத்தாவது வகை,
{11} சகோதரன் மகன் பதினோராவது வகை,
{12} தாழ்ந்த சாதி மனைவியிடம் பெறப்படும் மகன் பனிரெண்டாவது வகை.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section120.html#sthash.HmT6yJUQ.dpuf

இவ்வழியில் பார்க்கப் போனால் என்னதான் சந்திரன் உயிரியல் தந்தை என்றாலும் "தேவகுரு"வே புதனின் தந்தை. எனவே அதை "குரு வம்சம்" என்று சொல்வதல்லவா முறை?

பின்னும் ஏன் சந்திர வம்சம் என்று சொல்கிறோம்???
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சந்திர வம்சமா? குரு வம்சமா?

விஜய சாரதி
மன்னிக்கவும். தாங்கள் Guru மற்றும் Kuru  இரண்டையும் வேறாக பார்க்கவேண்டும். கௌரவர்கள் kuru வம்சத்தில் வந்ததால் Kaurava ஆகிறார்கள். தமிழில் ஒரே ஒரு 'க' இருப்பதால் இந்த குழப்பம் வருகிறது.

குரு மேன்மையான அரசனாக இருந்ததால் அவனது வம்சம் குருவம்சம் என்றும், அவன் ஆட்சி செய்த ராஜ்யம் குருஜங்காலம் என்றும், அவன் தவம் செய்த பூமி குருக்ஷேத்திரம் எனவும் பெயர் பெற்றது. பிரஹஸ்பதிக்கும் குரு வம்சத்திற்கும் சம்பந்தமில்லை.

புதன் சந்திரனின் மகன்தான் என்று தாரையே தேவர்கள் முன்னிலையில் கூறியிருக்கிறாள். தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் ஆறாவது விதியின்படி பிருஹஸ்பதிக்கும் அவன் மகனாகிறான். ஆனால் அதை வைத்து 'கௌரவர்கள்' என்று பெயர் வரவில்லை.

எப்படி இருப்பினும் தாங்கள் சொன்ன புரூரவன் கதை சுவையாக இருந்தது. நன்றி!
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சந்திர வம்சமா? குரு வம்சமா?

தாமரை
Administrator
This post was updated on .
நான் Guru வையும் kuru வையும் குழப்பிக்கொள்ளவில்லை.

என்னுடைய கேள்வி இந்த கௌரவ - பாண்டவ - யது வம்சத்து மூதாதையரைப் பற்றியது.

புராணங்கள் இரு வம்சங்களைப் பற்றி விளக்கும்.

1. சூரிய வம்சம்


    சூரியன்
    வைவஷ்த மனு
    இஷ்வாகு
    விகுட்சன்
    புரஞ்சயன்
    அனநேசு
    பிருது
    சாவஷ்தி
    குவலயாசுவன்
    யுவனாசுவன்
    மாந்தாதா
    அம்பரீஷன்
    புருகுச்சன்
    திரிசங்கு - புருகுச்சன் பேரன்
    அரிச்சந்திரன் - திரிசங்கின் மகன்
    ரோஹிதன்
    பாகுகன் -ரோஹிதன் பரம்பரை
    சகரன்
    அசமஞ்சன்
    அம்சுமான்
    பகீரதன்
    அஸ்தமகன்
    மூலகன்
    தசரதன்
    கட்வாங்கன்
    தீர்கபாகு
    ரகு
    அஜன்
    தசரதன்
    இராமர்
    லவன்
    குசன்
    அதிதி நிஷதன் நபன் புண்டரீகன் ஷேமதர்மா
    இரணியநாபன்
    புஷ்யன்
    பிரகதபாலன்


2. சந்திர வம்சம்

    சந்திரன்
    புதன்
    புரூரவன்
    ஆயு, தீமந்தன், அமவசு, சிராயு (தசதாயு),சுருதாயு (வசுமந்தன்)
    இவர்களுள் ஆயுவின் மக்கள் ரஜி, அரம்பன், நகுஷன், க்ஷத்ர விருதன்,அநேநஸ்
    இவர்களுள் நகுஷனுடைய மக்கள் உத்தபன், ஆயதி, யயாதி, யதி, சம்யாதி
    துரஸ்வன்
    வக்ரி
    கோபானன்
    காந்தன்
    துர்யசித்தன்
    குரு
    துஷ்யந்தன்
    பரதன்
    பிரதிபன்
    சாந்தனு
    பீஷ்மர், சித்திராங்கதன், விசித்திரவீரியன்
    திருதராட்டிரன், பாண்டு, விதுரன்
    பாண்டவர், கௌரவர்
    அபிமன்யு
    பரீட்சித்து
    ஜனமேஜயன்
   

மூவேந்தர் சோழனைச் சூரிய குலம் என்றும், பாண்டியனைச் சந்திர குலம் என்றும், சேரனை அக்கினிக் குலம் என்றும் கொள்கின்றனர்.

இந்த புதனின் தந்தையாகக் கருதப்பட வேண்டியவர் பிரகஸ்பதி எனப்படும் குரு காரணம், திருமணமானப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு கணவரே தந்தை ஆவார். அதனால் அது சந்திர வம்சம் என்பது உண்மையில் பிரஹஸ்பதி வம்சம்தானே

Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சந்திர வம்சமா? குரு வம்சமா?

விஜய சாரதி
தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி! தங்கள் கேள்வியை புரிந்து கொண்டேன்.

விசித்திரமான கேள்விதான். உலகிற்கு ஒளி கொடுத்து பிரசித்தமாக விளங்குவதால் சந்திர சூரியர்களான இருவரையும் குறித்தே அவர்கள் வம்சமானது விளங்குகிறது. இப்படித்தான் சமாதானம் கொள்ளவேண்டும்.

மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், புதனுக்கும் பிருஹஸ்பதிக்கும் உள்ள உறவு. சில புத்தகங்கள் பிருஹஸ்பதியே புதனை வளர்த்தார், கல்வி கற்பித்தார் என்று கூறுகின்றன. சில புத்தகங்கள் பிருஹஸ்பதி புதனை சபித்தார், சந்திரனே ரோஹிணி, கிருத்திகை மூலம் புதனை வளர்த்ததாக சொல்கின்றன.

இரண்டாம் பட்சத்தில், அதாவது பிருஹஸ்பதி புதனை மகனாக ஏற்காத பட்சத்தில், அவன் வம்சத்தை சந்திர வம்சம் என்று கூறுவதில் தவறில்லையே.
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சந்திர வம்சமா? குரு வம்சமா?

இரா. சேர்மன்
In reply to this post by தாமரை
Sir, Please find the link given. I think its valuable question http://periscope-narada.blogspot.in/2015/06/pandavas-kauravas-nomenclature.html
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: சந்திர வம்சமா? குரு வம்சமா?

விஜய சாரதி
சேர்மன்,

அந்த கட்டுரையில் வரும் விஷயத்திற்கு திரு. தாமரை அவர்கள் முதல் பதிவிலேயே பதில் இருக்கிறதே. தங்களது கருத்து/ கேள்வி என்னவென்று கூறுங்கள்.